வக்கீல் என்று ஒரு சாதி

சட்டம்

கையில் குழந்தையுடன் ஒருத்தி ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.
தூரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
“நில், குழந்தையைக் கொல்வதும் தற்கொலை செய்து கொள்வதும் சட்ட விரோதம், தெரியுமா?”
அவள் நின்று திரும்பினாள்;
“சட்டமா என்ன அது? எங்கிருக்கிறது?”
“உன்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது; குழந்தையைக் கொன்றாலும், நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றாலும், அது உன்னை பிடித்து விடும்!”

“நான் பெற்ற குழந்தையை நான் கொல்கிறேன். சட்டம் யார் என்னைத் தடுப்பதற்கு?”
“பெறுவது உன் பொறுப்பு.”
“எங்களுக்குப் பசி எடுப்பது யார் பொறுப்பு?”
“இயற்கையின் பொறுப்பு!”

“காரணமானவர்களை விட்டு விட்டு, காரியம் செய்பவர்களைத் தண்டிப்பதுதான் சட்டமா?”

“சட்டத்திற்குக் காரணத்தைப் பற்றிக் கவலையில்லை. ஏன் நடந்தது என்பதை பற்றி அது சிந்திப்பதில்லை.எப்படி நடந்தது என்பதையே அது ஆராய்கிறது!”
“முட்டாள்தனமான சட்டம். ஒவ்வொரு குற்றமும் ஒவ்வொரு காரணத்தோடு தான் செய்யப்படுகிறது. அந்தக் காரணங்களில் சிலவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தப்பிவிடுகிறார்கள். காரியம் செய்வோர் மட்டும் பிடிபடுகிறார்கள்.”

“சட்டத்தில் ஓட்டைகள் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற சட்டம் , உன் செயலைக் குற்றம் என்கின்றது!”

“ஓட்டை உடைசல்களுக்கெல்லாம் நான் கட்டுப்பட வேண்டிய அவசியம் என்ன? சோறு போட வக்கில்லாத சட்டத்திற்கு, உயிர்களின் மீது மட்டும் இரக்கம் எங்கிருந்து வந்தது? போய் உங்கள் சட்டத்திற்குச் சொல்லுங்கள். வாழ முடியாதவர்கள் குற்றங்களுக்கு ஆட்படுகிறார்கள். சட்டத்தின் இருண்ட கரங்கள் பாம்புகளை விட்டு தவளைகளைக் கொல்கின்றன.எங்கள் துயரங்களைத் தீர்க்க யோக்கியதையில்லாதவர்கள், எங்கள் உயிர்களை ஏன் தொடர்ந்து வருகிறீர்கள்? பசியால் திடித்து இயற்கையாகவே மாண்டு போனால், அது உங்கள் சட்டத்திற்குச் சம்மதமே! அவ்வளவு நாள் துடிப்பானேன், என்று ஒரு நாளில் சாக முயன்றால், அது மட்டும் விரோதமா?

வாழ்க்கையின் துயரத்தைக் காணாதவர்கள் சட்டத்தை படைத்தார்கள். அந்த முதலாளித்துவத்திற்கு நாங்கள் ஏன் ஆட்படவேண்டும்? பத்துக் கோடிப் பேர்களின் உள்ளங்களை கேட்டறிந்த பிறகா பத்துப்பேர் சட்டங்களைப் படைத்தார்கள்? வறண்டு போன வயலில் மழை பொழியும்படி உங்கள் சட்டம் மேகத்திற்கு ஆனையிடுமா? விளைவிக்க யோக்கியதை இல்லாதவர்கள், அறுவடையை ஏன் தடுக்க வருகிறீர்கள்?

தருமம் புதைக்கப்பட்ட இடத்தில் உங்கள் சட்டம் உற்பத்தியாகியிருக்கிறது. அதனால் தான் தருமத்தின் சாயல் கூட இல்லாமல் அது வளர்ந்து இருக்கிறது. பழுதுபட்டுப்போன கோட்டையில் உங்கள் சட்டம் விழுதுவிட்டு வளர்ந்திருக்கிறது. சட்டம் நியாயத்துக்காகப் போராடவில்லை என்பதும் அது சாட்சிகளோடு தான் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் உங்கள் புத்திக்கு எட்டவில்லையா?

வக்கீல்களுடைய திறமை, நீதிபதிகளை முட்டாள்களாக்குவதை நீங்கள் காணவில்லையா?சட்ட விளக்கை ஏற்றி வைத்தவருக்கு நல்ல எண்ணம் இருந்திருக்கலாம்.அந்த விளக்கை சாட்சிக் குடத்துக்குள் அடைது வைத்து, சதிராட்டம் ஆடுகிறது உலகம். கட்டுப்பாடானதும் முழுக்க உண்மையையே கண்டு பிடிப்பதுமான ஒரு சட்டம் உருவாக்கப்படும் வரையில் இன்றைய சட்டத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.

பணம் படைத்தவர்கள் நீதியை விலைக்கு வாங்குகிறார்கள். ஏழைகளைச் சட்டம் பழி வாங்குகிறது.சட்டம் பலமான சாட்சியங்களை கேட்கிறது. சாட்சி இல்லத நிரபராதி, குற்றவாளி: சாட்சியம் படைத்த குற்றவாளி, நிரபராதி.பொய்யும் பணமும் உங்கள் சட்டத்தின் இரு கண்கள். நாங்கள் தருமத்தை தேடிக்கொண்டிருந்தபோது நீங்கள் சட்டத்தைக் கொண்டுவந்தீர்கள். தருமம் செத்துக் கிடந்தது; சட்டம் எங்களை கைவிட்டதும் வக்கீல் என்று ஒரு சாதி, சட்டத்தின் ஓட்டைகளுக்குள்ளே புகுந்துகொண்டு விளையாடுகிறது.வக்கீல் என்ரொரு சாதி இருக்கும் வரையில் சட்டம் தானே குற்றம் புரிந்து கொண்டுதான் இருக்கும்.”

“என்ன தான் நீங்கள் சொல்க்றீர்கள்?”

“சட்டம் ஒரு குற்றவாளி; வக்கீல்கள் குற்றவாளிகள்; இதில் எந்தக் குற்றவாளிக்கு எங்களை குற்றம் சாட்ட உரிமை இருக்கிறது? நாங்கள் வந்தோம், போகிறோம். சொந்தப் பொறுப்பில் வந்தவர்கள், சொந்தப் பொறுப்பி போய் விட்டார்கள் என்று மட்டும் உங்கள் சட்டத்த்ற்குச் சொல்லுங்கள்.அவள் நடந்தாள்; மறைந்தாள். இயற்கையின் சட்டப்படி ஓடிக்கொண்டிருந்த நதி அவளையும் அவள் குழந்தையையும் அழைத்திக் கொண்டு சென்றது.”

கதை முடிகிறது.


மனிதனின் உண்மையை மறைக்கும் குணம் தான் சட்டங்களை உற்பத்தி செய்தது! உற்பத்தி செய்யப்பட்ட சட்டம் அந்த உண்மையை இறுதிவரை மறைப்பதற்குத் தானும் துனை புரிகிறது!
தடுப்பதற்குப் போட்ட வேலியே அழிவிற்கு தலைமை தாங்குகிறது. `நியாயம் நீதி` இவையெல்லாம் மிகவும் அலங்காரமான சொற்கள்.
குற்றம் புரிந்தவனும் தனக்கு நியயம் கேட்கிறான்; குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது!
பாவம் நீதிபதிகள்!
எப்போதவது அதிசயமாக உண்மையைக் கண்டுபிடித்தும் வருகிறார்கள். ஆனாலும் அது உண்மையைல்ல என்று எதிரியின் வக்கீல் சாதிக்கிறார்.`அப்பீல்` என்ற பெயரிலே மேல் நீதிமன்றம் அந்த உண்மையை மேலும் போட்டு உருட்டுகிறது.

இப்போது நம்மில் யாருக்கும் நியாயம் தேவை இல்லை!

நியாயத்திற்கே நியாயம் தேவைப்படுகிறது.

`விபசாரம் செய்யக்கூடாது` என்கிறது சட்டம்.அந்தச் சட்டத்தின் விதிப்படி, விபசாரத்தில் ஈடுபட்டவர்களில் பெண்ணை மட்டும் தான் தண்டிக்க வேண்டும் என்பது விதி.குற்றத்திற்கு முதற்காரணம் ஆடவனாக் இருந்தாலும், சட்டம் அவனச் சாட்சியாக ஏற்றுக்கொண்டு குற்றக் கூண்டிலே பெண்ணை ஏற்றுகிறது.
சட்டத்தின் காவலர்கள் குறிப்பிட்ட அளவு குற்றத்தக் கண்டுபிடித்தால் பதவியும், பரிசும் கிடைக்கும்.அதற்காக அவர்கள் குற்றத்தை உற்பத்தி செய்கிறார்கள்.
வேடிக்கையான சட்டம், வேடிக்கையான நீதிபதிகள்! சந்தேகத்தின் பேரில் ஒருவன் கைது செய்யப்படுகிறான். ` ஜாமீன் கொடுக்க ஆள் உண்டா? என்று நீதிபதி கேட்கிறார். இல்லையென்றால் உடனே தண்டித்து விடுகிறார்.
ஜாமீன் கொடுக்க ஆள் இல்லாததே சட்டப்படி ஒரு பெரிய குற்றமாம்.
ஆமாம்!
சட்டம் புதிய புதிய குற்றவாளிகளை விளைச்சல் செய்கிறது. குற்றம் என்னும் நிலத்தை வக்கீல்கள் உழுகிறார்கள்; சாட்சிகள் விதை விதைக்கிறார்கள்; பணம் மழை பொழிந்ததும், விளைத்த பயிரை நீதிபதிகள் அறுவடை செய்கிறார்கள்.
விடிந்து விட்ட பொழுதுக்கு இரவைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் முடிந்துவிட்ட நிக்ழ்ச்சி சட்டத்தப் பற்றிக் கவலைப்படுகிறது.

திருமண வீடுகளில் ஒரே மகிழ்ச்சி, இழவு வீடுகளில் சிலர் அழுகிறார்கள், சிலர் அலறுகிறார்கள்; சிலர் சிலையாக சமைந்துபோய் உட்காருகிறார்கள். ஓலமும் ஒப்பாரியும் ஊரெங்கும் கேட்கின்றன.
ஒரு வீட்டில் சிரிப்பு, மற்றொரு வீட்டில் அழுகை.

நீதிமன்றங்களுக்குச் சென்றால் அது திருமண வீடாகவும் இல்லை இழவு வீடகவும் இல்லை. முகத்திலே களையே இல்லாத புதுமைகள்; இருதயத்தில் இரக்கமே இல்லாத பிராணிகள்; ஒவ்வொரு பகுதியிலும் பிணங்கல்ளைப் போல நடந்து கொண்டிருந்தார்கள்.

ஆமாம், இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையிலே உள்ள குழப்ப உலகம் நீதிமன்றம். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்; மனிதன் சட்டத்தப் படைத்தான்; சட்டம் மனிதனைப் பழையபடி குரங்காக்கி விட்டது!


சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் ,படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம்இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.



இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம்சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்யசொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான்.

ஆகையால் இரண்டுமாதங்களாக அவனை தேடி அலைகிறான்.
ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறதுMichael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான்.இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே MichaelO'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடிகடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐகொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார்அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and LordLamington) பிழைத்து கொள்கிறார்கள்.



மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம்அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில்இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களைகொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.



பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியாகொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல்பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்றுபுகழ்ந்துரைகிறார்கள்.



சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................



400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyerகொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்துஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?



“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம்மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்கமுடியாது”

- மகாத்மா காந்தி



400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதிபடை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?நல்ல நியாம்டா சாமி.............



சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாதபதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரியபோகிறது.......ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன்யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.



இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன்சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன்அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீரவிருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்தவிருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!



''ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழபோராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதாரிகளுக்குபுரிவதில்லையே ஏன்? ஏன் எனில் அந்த நாதாரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................



மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலர்கலாலே சுட்டு கொல்லப்படுகிறார்.அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்தவிருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.



இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறான்.... மற்றொருவன் மூன்றுஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய்யப்போகிறது...பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடைசெய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகுபார்கிறார்களே அது ஏன்?



அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாப்பிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்? இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல்தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்? இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்??? இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)



ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்?தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிறீர்கள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிறோமாம், மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்..

நியாத்தை கேட்பதற்கு நாம் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..இந்தியனாக இருக்க தேவை இல்லை…..தமிழனாகவோ இருக்க தேவை இல்லை மனிதனாக இருந்தால் போதும்.....இப்படிக்கு,மனிதர் தமிழர் இந்தியர்

தமிழீழம் அது தனியீழம்

தமிழீழம் அது தனியீழம்

தற்போதைய இந்திய நாட்டிற்கு தெற்கே ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு,ஏழ்குணகரை நாடு, ஈழ நாடு, ஏழ் குறும்பனை நாடு, குமரிக்கொல்லம் போன்று இருந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகளில் கடல் கோள்களால் மூழ்கியவை போக எஞ்சியிருப்பது, தமிழர் என்ற ஆதிகுடிகள் வாழ்ந்த ஈழ நாடு.ஈழத்தில் வாழும் தமிழர்கள் குடியேறிகள் அல்ல! மண்ணின் மைந்தர்கள்! தோட்டத் தொழிலாளர்களைத் தவிரஇலங்கை என்று சொல்லப்படும் ஈழ நாடு முழுவதுமே தமிழர்கள் நாடு.

இலங்கையை ஆண்ட இராவணன் தமிழனே.கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த விசயன் என்ற ஆரிய மன்னன் இலங்கை சென்று நிறுவித்த வம்சமே சிங்கள இனம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இலங்கை வரலாறான மகாவம்சமும் அதைத்தான் கூறுகிறது.இந்தியாவைச் சேர்ந்த இராமனால் தமிழர் அரசன் இராவணனுக்கு இன்னல்!இந்தியாவைச் சேர்ந்த விசயன் தோற்றுவித்த சிங்களவம்சத்தால் தமிழருக்கு இன்னல்!கி.பி 1987ல் இந்தியா அனுப்பிய அமைதிப்படையால் தமிழருக்கு இன்னல்!விசயனால் உருவாகிய சிங்களவ அரசும், மண்ணின் மைந்தர்களாகிய தமிழரின் அரசும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டது வரலாறு.ஒன்றல்ல இரண்டல்ல! ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாக சிங்களர் தமிழர் போர்கள்

நிகழ்ந்துள்ளன.ஈழத்தமிழருக்கு ஆபத்தென்ற போதெல்லாம், ஈழ நாட்டில் தமிழ் ஆட்சிக்கு ஆபத்து வந்த போதெல்லாம்தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய பல்லவ சோழ அரசர்கள் படை நடத்தி சிங்களர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள் என்பதுவும் வரலாறு.கரிகாலன், இராசராசன், குலோத்துங்கன், பாண்டியர்கள், காஞ்சிப்பல்லவர்கள் என்று அனைத்து தமிழருமே ஈழத்தில் தமிழருக்கு இடுக்கண் வந்தபோதெல்லாம் சிங்களரை ஒடுக்கி வைக்க கடல் கடந்து சென்றுள்ளார்கள்.

ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.சிங்களர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள இனவெறி ஏதோ பிரபாகரன் காலத்தது அல்ல. பல நூறாண்டுகள் சேர்ந்ததை ஈராயிரம் ஆண்டுகள் பழையது.சிங்களர்கள் தமிழரை சூறையாடுவது 10, 20 ஆண்டு நிகழ்ச்சி அல்ல; பல நூறாண்டு இன வெறி!சிங்களரை அடக்கிய கரிகாலன் போர்க் கைதிகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து காவிரியின் இரு மருங்கும் கரையெடுத்ததுவும் கல்லணை கட்டியதும் வரலாறு!

தீராப்பகையை கொண்டுள்ள சிங்களர்கள் தொடர்ந்து தமிழருக்கு இன்னல் விளைவித்தே வந்திருக்கிறார்கள்!கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் அரசின் மன்னனான சங்கிலி என்பவனை போர்த்துகீசியர் கொன்ற பின்னர் இதுவரை தமிழர் ஆட்சி நடந்ததில்லை ஈழத்தில்.1947ல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்து சென்றதில் இருந்து தமிழ், சிங்கள பகுதிகள் இணைந்த இலங்கையில் சிங்களர் ஆட்சியே நடைபெற்று வருகிறது.ஆனால் சிறுபான்மையினரான தமிழரை சிங்கள அரசு இரண்டாம் குடிகளாகவே நடத்திவருகிறது.

இன்று எக்காளமிட்டு தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுகளின் சட்டப்படி, ஒருங்கிணைந்த இலங்கையில் ஒரு தமிழன் நாட்டின் அதிபராக வர முடியாது! ஏனென்றால் சட்டத்தில் இடமில்லை!ஏனென்றால் சிங்களருக்கு மனமில்லை!இன்று சந்திரிகா அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு வேண்டுமானால் பிரபாகரன் முதல் அமைச்சராக இருக்கட்டும் என்று சொல்கிறார்! நகைச்சுவையாய்த் தெரிகிறது! வேண்டுமானால் இலங்கையின் அதிபராக இருக்கட்டும் என்று சொல்லட்டுமே!பிரபாகரன் வேண்டாம்! வேறு எந்த தமிழரையாவது ஆக்கட்டுமே ? முடியாது! காரணம் சட்டத்தில் இடமில்லை! அதை மாற்றவும் முடியாது!

பயிர்செய்து, அறம் செய்து, தொழில் செய்து இலங்கையை ஆக்கிவைத்த தமிழருக்கு சம உரிமை சட்டப்படி மறுக்கப் பட்டது.பள்ளிகளில், வேலைகளில் தமிழர்கள் இரண்டாம் நிலையில்தான் இருக்க முடியும், சட்டப்படி!காவல்துறையில், இராணுவத்தில் தமிழர் கிடையாது! அதுவும் சட்டப்படி!ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கூட இந்திய இராணுவத்தில், உயர்பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர்! "சர்" என்று பட்டமெல்லாம் பெற்றனர்!

ஆனால் இலங்கையில் மக்கள் தொகையில் 20-30 விழுக்காட்டிற்கும் மேலான தமிழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது!செல்வச் செழுமையுடன் வாழ்ந்த தமிழர் மேல் சிங்களர் ஆத்திரம் கொண்டு அவர்கள் இல்லத்தை, அவர்கள் பெண்டுகளை, அவர்கள் சொத்துக்களை சூறையாடுவது நாளாவட்டத்தில் சிங்களரின் பொழுது போக்காகிவிட்டது!எத்தனை பெண்கள் மானமிழந்தனர்! எத்தனை ஆண்கள் மாண்டு மடிந்தனர்!

எத்தனை தமிழர்கள் நாட்டை விட்டே வெளியேறினர்! கணக்கிலடங்கா!உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் திசைகளே அதற்கு சான்று!சூறையாடல் நிகழ்ச்சிகளின் போது கொதிக்கும் தார்ச்சட்டிகளில் போட்டு தமிழ்க் குழந்தைகளைக் கொன்ற கொடூரம் ஆயிரமாண்டு காழ்ப்புணர்ச்சியின் உச்சம்!தமிழ்பெண்களைக் கற்பழித்துவிட்டு அவர்களின் அல்குல்லில் குண்டு வைத்து வெடித்த கொடூரம் ஒன்றல்ல இரண்டல்ல!சிங்கள இராணுவமும், சிங்களக் குண்டர்களும் சூறையாடி முடித்துவிட்டு "இங்கே தமிழர் கறியும் எலும்பும் இலவசமாக கிடைக்கும்" என்று எழுதிப் போட்டு தமிழர் தசையை கடை வைத்த கொடுமை உலகில் வேறெங்காவது நடந்திருக்கிறதா ?எழுதவே கைகள் நடுங்கும் செய்தியிது! இந்த அளவிற்கு தீராப் பகை கொண்ட சிங்களவருடன் தமிழர் இணைந்து வாழ முடியுமா ?

ஈராயிரம் ஆண்டுப் பகையுடன் சமாதானம் செய்து கொள்ள இயலுமா ?1940,50,60 களில் சிங்கள அரசுடன் சனநாயக முறையில் சம உரிமைக்காக குரலிட்டு அது நடக்கவே நடக்காது என்ற எண்ணம் தோன்றவே, தமிழ் மக்களிடம் சனநாயக முறையில் "தனிநாடு தேவையா இல்லையா ?" என்று வாக்கெடுப்பு நடத்தி கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு ஈழத் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற பின்னரே தமிழருக்கு தனி ஈழம் தேவை என்று, அதையும் அமைதிப் போராட்டங்களினால் பெற முன்வந்தனர் தமிழர்கள்.

ஆயினும் தொடர்ந்து நடந்த சிங்கள அட்டூழியங்களில் இருந்து காத்துக் கொள்ள தமிழரும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்படவே பல ஆயுதம் தாங்கிய குழுக்கள் தோன்றி தமிழ் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டன. அவைகளே விடுதலைப் போர்களையும் முன்னின்று நடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு செயல்படுத்து வந்தன! வருகின்றனர்!

தமிழருடன் சிங்களவர் கொண்டுள்ள பகையுணர்வு கடுமையாக இருக்க, தமிழர்களால் அவர்களுடன் இணைய முடியாமல் இருக்க, இந்தியாவில் வாழ்பவர்களில் ஒரு சிலரோ, தங்களின் காலகாலமான தமிழ் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, "இந்திய ஒருமைப்பாடு" என்ற போர்வையில் இந்தியாவிலிருந்து சென்று உருவாக்கி வளர்க்கப்பட்ட சிங்களருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்!இன்று தனி ஈழம் அமைந்தால் நாளை அது தனித் தமிழ்நாடு கோரிக்கையாக உருவாகும்;

அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்பதே இவர்கள் கூறுவது!ஆனால் "தமிழ் ஈழம்" தேவை என்பதின் அடிப்படையும் தனித்தமிழ்நாடு கோரிக்கை வந்தால் அதன் அடிப்படையும் ஒன்றாக இருக்கும் என்று கருதுவது பைத்தியக்காரத்தனம்! வடிகட்டிய முட்டாள்தனம்!

ஈழத்திலே தமிழர் ஒருவர் நாட்டின் அதிபராக வர முடியாது! ஆனால் இந்தியாவிலே அது நடக்கும்!ஈழத்திலே சிறுபான்மையினரான தமிழர், அதிபராக வர இயலாது! ஆனால் இந்தியாவிலே சிறுபான்மையினர் வரமுடியும்; வந்திருக்கிறார்கள்! இசுலாமியர் அதிபராக இருந்திருக்கிறார்!இந்தியாவிலே, குமரி முதல் இமயம் வரை அனைத்து குடிமகனுக்கும் சட்டம் ஒன்று! உரிமைகள் ஒன்று! அனைவரும் இந்தியரே! ஆனால் இலங்கையில் நிலை அதுவல்ல!இரண்டே இனங்கள் உள்ள நாடு இலங்கை! பல மொழி, இன, கலைகள் கொண்ட நாடு இந்தியா.தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்பட்டால் அதை வங்காளிகளோ அல்லது மராட்டியரோ வாழ்த்த முடியாது! வாழ்த்த மாட்டார்கள்!

ஒரிசாவின் வெள்ளத்துக்கும், குசராத்தின் பஞ்சத்துக்கும் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பங்களிக்கின்றன.பாகித்தான், சீனப் போர்களில் மட்டுமல்ல நேதா'சி அவர்களின் இந்தியப்படைகளிலும் இடம் பெற்றவர்கள் தமிழர்கள். நேதா'சி அவர்களின் இந்திய தேசியப் படையில் பங்கு கொண்ட மறவர்கள் எத்தனையோ பேர்! அப்படையின் தளபதியாக இருந்தவர் தமிழ்ப் பெண்மணி!

இந்தியாவின் எந்த இடத்திலும் வேலைசெய்ய மற்றும் உயர்பதவி வகிக்க தமிழர்களுக்கு உரிமை உண்டு!இன்று கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகளிடம் தமிழகம் கையேந்தி நிற்கலாம்! வருத்தமான விடயம்தான்! ஆயினும் தமிழர்கள் தங்கள் சரியான மதியுடன் இயங்கினால் சிக்கல் தீர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.தமிழர்களைக் கொல்வோம்! தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்போம்! தமிழர்களுக்கு மட்டும் இரண்டாம் குடியுரிமை என்ற நிலை இந்தியாவில் இல்லை!ஆனால் ஈழத்தில் உண்டு! சட்டப்படியும் உணர்வுப்படியும் உண்டு!15 மொழிகளை ஆட்சி மொழியாக்கல், நதிகளை இணைத்தல், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் போன்ற பல்வேறு ஒருமைப்பாட்டு செயல்களுக்கு இந்தியாவில் வாய்ப்பிருக்கிறது!

ஆகவே தனி ஈழத்தையும், இந்திய ஒருமைப்பாட்டையும் ஒப்பிடுபவர்கள் சுயநலக்காரர்கள்; அல்லது அறிவிலிகள்!தனி ஈழம் என்பது வேதனையிலிருந்தும் சோதனையிலிருந்தும் தமிழர் வெளியேற அமைய வேண்டியது! ஆதலின்தான் "தமிழ் ஈழம் அது தனி ஈழம்" என்ற கொள்கை நோக்கித் தமிழர்கள் ஓயாதுழைத்து வருகிறார்கள்.

ஒரு சில ஆண்டுகள் ஒவ்வாமை இருந்ததால் உருசிய நாடு 15 நாடுகளாகப் பிரிந்து கொண்ட போது, ஈராயிரம் ஆண்டாக சிங்களரின் பகைக்கு ஆளாகியுள்ள தமிழினம் தனியாகப் போவது நியாயமல்லவா ?அதன் குறுக்கே நிற்பவர் யாராக இருந்தாலும், அது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?

முரண்பாடு

குடிசைவாசி

குடிசை வாசியிடம் கேள்வி
எழுப்பப்பட்டது
இரண்டுக்கு மேல் வேண்டாம்
என்றபோது ஏன் மூன்றாவது
பதில்சொன்னான்
தள்ளிப்படுக்க இடமில்லாததால்
தவிர்க்கமுடியவில்லை


முரண்பாடு


பிச்சைக்காரன் மகனுக்கு
பெயரிட்டான்
குபேரன்


அரங்கேற்றம்


ஐந்தாவது
அரங்கேற்றம்
இந்தமுறை
பையன்தான்
முனுமுனுத்தது
கட்டில்

மனித நேயமும் ஆத்திகனும்

மனித நேயமும் ஆத்திகனும்
கால்கள் கட்டப்பட்டு, கழுத்து வளைக்கப்பட்ட ஆடு , ஐயோ என்னை விட்டுடுங்கடா என்பது போல் ஈனசுரத்தில் கத்திக் கொண்டே சுற்றி இருந்தவர்களைப் பார்க்க,
சுற்றி இருந்த கூட்டமோ பயபக்தியோட பூசாரியை பார்க்க, கெடாக்கொம்பு போல மீசை வைச்சிருக்கும் பூசாரி அந்த ஆட்டின் கழுத்தை கரகரவென அறுக்க, ஆட்டின் சத்தமும், இரத்தமும் கண்கள் மேலே சொருக சிறிது சிறிதாக அடங்கியது.
ஒரே வீச்சில் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு ஓடி விழுந்த சேவலின் இரத்தமும், ஆட்டின் இரத்தமும் மண் சட்டியில் கொண்டுவரப்பட்டது. அதை பூசாரி ஒரே மூச்சில் குடித்து முடித்து கூட்டத்துக்கு அருளாசி வழங்கினார்.
பிறகு வெட்டப்பட்ட நான்கறிவு, ஐந்தறிவு ஜீவன்கள் சமைத்து சாமிக்கு படைக்கப்பட்டது.

அப்போது அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரின் கைபேசியில், மரண தண்டனை என்ற பெயரில் அரேபியாவில் தலை துண்டிக்கப்படும் நிகழ்ச்சி பலர் முன்னிலையில் நடப்பதை பார்த்த எல்லோரும், இது என்ன காட்டுமிராண்டித்தனமா இருக்கு, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாம வேடிக்கை வேற பார்க்குறாங்கன்னு கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.


அப்போது அங்கே இருந்த ஒருத்தர் கேட்டார், நீங்கள் செய்ததற்கும், அரேபியாவில் நடப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை, இங்கே ஆடு அங்கே மனிதன் எல்லம் உயிர் தான் என்றார். ஆட்டையும், சேவலையும் கொல்லும் போது வராத மனித நேயம், இப்போ மட்டும் எப்படி வந்தது? என்றார்.


உடனே பூசாரி ”இது சாமி சமாச்சாரம் என்றும், இவன் இங்க வந்து நாத்திகம் பேசுறான், நம்ம சடங்கு சம்பிரதாயங்கள கிண்டல் பண்ணுறான், இவன துறத்துங்கடான்னார்.
” முடியை மழித்தால் வளராது என்றால் உங்க சாமிக்கு உங்க மசிரக்கூட குடுக்க மாட்டிங்கடான்னு முணுமுணுத்துக் கொண்டே போனார் அந்த நபர்.


மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் .

பார்ப்பனக் கடவுள்


அர்ச்சனை தட்டில்
ஒத்த ரூபாயிட்டால்
கையில் திருநீறு, குங்குமம்.

நூறுரூபாய் என்றால்,
சாமிக்கு அர்ச்சனை.

ஐநூறு ரூபாய் என்றால்,
சாமிக்கு அருகாமையில்
அர்ச்சனை.

ஆயிரம் என்றால்,
சாமி கழுத்து மாலை
பிரஷாதம்!

லட்சம் என்றால்,
வீடு தேடி வரும்
பிரஷாதம்!!

கோடி என்றால்,,
உன் வீடே கோயில்!!
நீயே கடவுள்!!!

ஆரம்பம் முடிவாக




(வார்த்தை கடனாக
பெற விருப்பமில்லை
மூளை செலவு செய்ததில்
கிடைத்த துளிகள் கொண்டு
ஒரு கோப்பை நிறைக்க
முயற்சிக்கிறேன்)


அதுவரை
அவளிடம் நானும்
என்னிடம் அவளும்
பழகியதில்லை



அவளை
அறிந்து கொள்ள
முயன்ற போதெல்லாம்
என்னை அறிந்தவள்
போல் இருந்தாள்



அவளிடம் பேச
முயன்ற போதெல்லாம்
அவள் என்னிடம்
பேசிவிட்டதுபோல்
இருந்தால்



நான் ஆரம்பிப்பது
போலதோன்ற
அவள்
முடிந்தது போல
இருந்தாள்
அருகருகே இருக்கிறாம்
ஆரம்பம் முடிவாக

தண்ணீர்ப்பாலம் ஒரு ஆச்சர்யம்

(மழை பெய்யும் போது அந்த மழைநீருடன் சேர்ந்து ஆகாயத்திலிருந்து மீன்களும் வந்து விழுகின்றனவே இது எப்படி சாத்தியம்? இது உண்மையா?)
இது உண்மை தான். இந்த அதிசயத்தின் பின்னால் பெரிய அறிவியல் விளக்கமே அடங்கியிருக்கிறது.


கடல், ஏரிகள் போன்றவற்றில் இருந்து சில சமயங்களில் தண்ணீர் பீறிட்டு மெகா தூண்கள் போல மேலெழுகின்றன. வானத்தை எட்டும் அளவிற்கு போகிறது இந்த `நீர்த்தாரை`(water spout). கடற்கரையோர கிராமங்களில் இருப்பவர்கள் இதனைப்பார்த்து `வானம் தண்ணீர் குடிக்கிறது` என்பார்கள்.இந்த நீருடன் அள்ளப்பட்டுச் செல்லும் மீன்கள், வேறு நீர்வாழ் உயிரினங்கள் தான், உடனடியாக வேறொரிடத்தில் மழையின் போது பொத்பொத்தென்று விழுகின்றன.இந்த நீர்த்தாரை ஏற்படுவதற்குக் காரணம் சுழல் காற்று (TORANDO) ஆகும்.


சமுத்திர மேற்பரப்பு சூரியப் பார்வையினால் சூடேற சூடேற மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள காற்றுப்படலம் சூடாகி, விரிவடைந்து பாரம் குறைந்து மேலெழும். அப்போது மேலெ உள்ள எடை அதிகமான காற்று கீழே வந்து சூடாகி மேலெழ.... இப்படி மாறி மாறி சுழற்றியபடி காற்றோட்டம் ஒன்று நிகழும். இந்தச் சுழற்காற்றின் பலம் அதிகம்.


1986 ஆம் ஆண்டு சீனாவைத்தாக்கிய சுழற்காற்று, தெருவில் நடந்து போய்க்
கொண்டிருந்த 13 பள்ளிச் சிருவர்களை த் தூக்கிச்சென்று, வலுவிழந்ததும் 19கிலோ மீட்டர்களுக்கப்பால் பத்திரமாகத் தரையிறக்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


இந்தச் சுழற்சியின் போது மேலே ஈர்க்கப்படும் காற்றில் உள்ள நீராவி ஒடுங்கி மழை முகிலாகும். நீராவி ஒடுங்குவதால் முகில்களுக்கு இடையே சடுதியில் ஒரு வெற்றிடம் தோன்றும், இந்த வெற்றிடமுள்ள மேகங்களை நோக்கி கடல், ஏரிகளிலிருந்து நீ இழுக்கப்பட நீர்த்தாரை ஏற்படுகிறது.


எப்படி இருக்கிறது வானத்துக்கும் கடலுக்கும் இடையே போடப்படும் தண்ணீர்ப்பாலம்?.














ஒரு வீரனின் கடைசிக் கடிதம்



அந்த யுத்த களத்திலிருந்து
வாயில் நுரைதள்ள
மூச்சு இறைச்சலுடன்
தனியாக வரும்
என் குதிரைக்கு அம்மா!
தண்ணீர் கொடு!
அதன் முதுகை தடவிக்கொடு
அது இன்னொரு
வீரனுக்குப் பயன்படட்டும்

துரதிஸ்டம்






வர்ணங்கள் கிடைத்த போது
தூரிகை இழந்தேன்
ஓவியம் கிடைத்த போது
கண்கள் இழந்தேன்


வாரித்தைகள் கிடைத்த போது
கவிதை மறந்தேன்

வெளிச்சம் கிடைத்த போது
நிழலை இழந்தேன்
வானம் வசமான போது
கைகள் இழந்தேன்
கணவுகள் வந்த போது
தூக்கம் இழந்தேன்



வறுமை வந்த போது
உறவுகள் இழந்தேன்
பணம் வந்த போது
அடக்கம் தொலைத்தேன்



ஆத்திரம் கொண்டபோது
அன்பை இழந்தேன்
அன்பை இழந்த போது
அவளை இழந்தேன்
அவளை இழந்த போது
நான் என்னையே இழந்தேன்

அடித்து நொருக்கி பழிவாங்கு

இதுதான்
இவ்வளவுதான்
இதெல்லாம் சகஜம்
என்கிறது சமூகம்

மறந்துவிடு
மன்னித்துவிடு
என்கிறது
ஆண்மீகம்

அடுத்த தோல்விக்கு தயாரா
என்கிறது தத்துவ ஞானியின்
உபதேசம்

அடித்து நொருக்கி பழிவாங்கு
என்கிறது கோபம்

அறிவின் ஊற்றிலிருந்து
தடுக்கிறது மனிதநேயம்

ஆனால்

குழம்பிய மனம்
ஆண்மீகம் மேல்
என்று தெளிந்தது

எங்கோ படித்த ஞாபகம்

மக்கள் தொகை 900 கோடி

உலகம் பூராவுமே நதிகளில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் கீழிறங்கி வருகிறது, தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்?.

உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவதுதான் பூமியின் அத்தனைச் சூழல்
பிரச்சினைகளுக்கும் காரணம். ஒரு ரொட்டி தயாரிப்பதற்கு 550 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது கோதுமை பயிரிடுவது முதல் அது ரொட்டியாகத் தயாராகும் வரையிலான தண்ணீர்ச் செலவு இது.

வளரும் நாடுகளில் 70 முதல் 90 சதவித குடிநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. உணவு, மற்றும் விவசாய அமைப்பான FAO உலக அளவில் எடுத்த ஆய்வு ஒன்றில் 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக இருக்கும் என்றும், அப்போது தண்ணீர் தேவை இப்போது இருப்பதைப்போல இரண்டு மடங்காக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

என்ன செய்யப்போகிறோமோ?

காற்று கெட்டிபடுவதும் சுலபமாவதும்


வார்த்தைகளுக்காக காத்திருக்கும்
கவிஞனைப்போல,
இரவுக்காக காத்திருக்கும்
நிலவைப்போல,
காற்றுக்காக ஏங்கி நிற்கும்
இதயம்போல,
உன்னுடைய ஒரு ஹாய்
அல்லது ஒரு ஹலோவை
எதிற்பார்த்து விடியும் என்
உலகத்தை, எப்படி புரியவைப்பேன்
உனக்கு!

உன்னைப் பார்க்கும் நொடிகளில்
சுவாச இழுப்பிற்கு காற்று
சுலபமாவதும்,
பிரியும் நொடிகளில்
காற்று கெட்டிபடுவதும்
தவிர்கமுடியாத ஒன்றாகிவிட்டது.


இந்தக் கண்ணாடியில் முகம்
பார்த்தவர்கள் அணேகம்.
முகம் பதித்தவள்
எவரும் இல்லை!

முத்துக்கான வித்து எப்பொழுதும்
விழலாம் என்று வாய்திறந்து இருக்கும்
சிப்பி போல
தனக்கான ஒருத்தியை
ஒவ்வொரு முகத்திலும்
எதிர்பார்த்து நிற்கிறது
இந்தக் கண்ணாடி.

இதில் உன் பிம்பம் விழுந்து
உறைவதும், மறைவதும்
உன் கையில்.

அழுது நிற்கும் குழந்தையைப்போல
எனது வேதனையையும், விருப்பத்தையும்
சுமந்து வந்திருக்கும்
என் கடிதத்தை
அரவணைப்பதும்,
அவமதிப்பதும்
உன் பொறுப்பு

என்னவளே,
இப்பொழுது சொல்,
நான் உனக்கு,
வழிப்போக்கனா? இல்லை
உயிர் காவலனா?

அழகிய நாட்கள்


அழகிய நாட்கள்



உன்னோடு பழகிய
மொத்த நாட்களின்
நீளத்தையும் ஒரு
பக்கக் காகிதத்தில்
அடக்க முயற்சித்ததில்
வார்த்தைகள் அங்கும்
இங்குமாய் கைகோர்த்ததில்
உன்னைப் பற்றிய
கவிதையாய் அது இருந்தது!


கவிதைகள் எல்லோராலும்
புரிந்து கொள்ளப்படுவதில்லை
என் கவிதை வரிகளின்
ஆழம் அர்த்தம் உன்
புறக்கண்களுக்கு மட்டுமே
புலப்படும்.

நான் சஞ்சரிக்கத் தெரிந்த
அடுக்குகளில் சஞ்சரிக்கத்
தெரிந்தவள் நீ


பேசிப்பழகிய வார்த்தைகள்
போதமல் பழைய வார்த்தைகள்
தூசி தட்டி வர்ணம் பூசினேன்
கவிதை மெருகேரியது

இயற்கை மனிதனை
வியக்கக் கற்றுத்தந்தது
வியத்தல் மனிதனை
சலிப்பிலிருந்து மீட்டெடுத்தது
வாழ்க்கை சலிக்காமலிருக்க
இயற்கை உன்னை எனக்குத்தந்தது


எதிர் பாரா தருனத்தில்
நீ உன் காதலை உறைத்தபோது
வாழப்படாத வாழ்க்கை வாழ்ந்துவிட்ட
மகிழ்ச்சி எனக்கு
நீ என்னோடு இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
சுருங்கிய என் வாழ்வு
அங்குலம் அங்குலமாய்
விரியக்காண்கிறேன்


வாழ்க்கை முடியும்
காலங்களில் அசை
போடுவதற்கே காதல்
என்று நினத்திருந்தேன்
இல்லை அது என் வாழ்வின்
நீள அகலம் பெருக்க வந்தது


இப்படி எத்தனை எத்தனையோ
மாற்றங்கள் உன்னால்
எல்லாம் எழுதிட நினைத்தபோது
புரிந்தது நீ,
வார்த்தையில் அடங்காத வாக்கியம்
அல்லது வைரமுத்து சொன்னதுபோல்
சங்கில் அடங்காத சமுத்திரமென்று.

காலத்தை வென்று பிரகாசியுங்கள்

ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார். ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத்துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar' s Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பல என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.பிரகாசிப்பீர்களா

பூமி வரவர இருண்டு வருவதாக புதிதாக ஒரு பிரச்சினை கிளப்பி இருக்கிறார்களே தெரியுமா?

குளோபல் டிம்மிங்






வளி மண்டலம் தெளிவாக இருந்தால் தானே சூரிய ஒளி பூமிக்கு முழுமையாக முகம் காட்டமுடியும். ஆனால், நாம் தான் மாசுக்களைத் தினம் தினம் வளிக்குள் அனுப்பிக் கொண்டே இருக்கிறோமே! தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைக்கரி, தரையில் மோட்டார் வாகனங்கள் கக்குகின்ற புகை, எரிமலைகள் குமுறியெறிகின்ற சாம்பல் என்று வளி மண்டலத்தில் குவியும் மாசுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.








இவை உள்ளே நுழைகின்ற சூரிய ஒளியைத் திருப்பி வான வெளியினுள்ளேயே சிதறடித்து வருகின்றன. அத்தோடு இந்தப் புகைத்துணிக்கைகள்(AEROSOLS) முகில்களின் அமைப்பையும், ஆயுளையும் கூட மாற்றக் கூடியவை. மேகங்களின் நீண்ட ஆயுளை பெற்று, சூரிய ஒளியை விண்வெளிக்கு மீண்டும் திருப்பியவாரே உள்ளது. இவற்றால் தான் பூமிக்குள் நுழையும் ஒளியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. பூமி உஷ்ணம் அடைவதை GLOBAL WARMING என்று சொல்வதைப் போல இதனை GLOBAL DIMMING என்று சொல்கிறார்கள்.





இதை சாதாரணமான ஒன்றாக எடுத்துவிடவேண்டாம். எதியோப்பியாவில்
1970களிலும் 80களிலும் ஏற்பட்ட பட்டினிச்சாவுக்கு இந்த `குளோபல் டிம்மிங்` தான் காரணம் என்கிறார்கள். ஊடுருவும் சூரிய ஒளி குறைந்ததால் அட்லாண்டிக் கடலில் நீர் ஆவியாகும் அளவும் வெகுவாகக் குறைந்து வளியை உலர வைத்திருக்கிறது. இந்த உலர் வளி எதியோப்பியாவின் மீது மழையை தருவிக்கக் கூடிய கால நிலையை இல்லாமற் செய்ததாலேயே மழையே இல்லாமல், பயிர் விளைச்சல் குறைந்து பட்டினிச்சாவு மலிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இப்படி இன்னும் ஏராளமான பாதகங்களை பட்டியலிடுகிறார்கள்.






“நமது தொழிற்புரட்சியினால் நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கு எதைவிட்டு செல்கிறோம்?”

பயம் கடவுளை கொண்டுவந்தது


ஆதிகாலத்து மனிதன் இடி,மின்னல்,மழை,நெருப்பு போன்ற இயற்கை சீட்றங்களை கண்டு அஞ்சினான். அறிவு வளர்ச்சி இல்லாத காலஙக்களில் இயற்கையை இன்னதென்று பாகுபடுத்த முடியாமல் பயந்து வணங்க ஆரம்பித்தான். என்ன முயன்றும் பிறப்பிற்கு முந்திய இறப்பிற்குப் பிந்திய நிலையை அவனால் அறிய முடியவில்லை. அப்படி அவன் அறிவுக்கு எட்டாத விஷயங்களை இயற்கை என்று முடிவுகட்டினான்.அப்படி அவன் அறிவிற்கு எட்டாத விஷயங்களை கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இயக்குவதாகவும் நம்பினான்.
அந்த சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டான். அப்படி நம்பியவன் அதை வழிபட ஆரம்பித்தான். மொழி வளர்ச்சிக்காலங்களில் அறிவுக்குப்புலப்படாத கடவுள் பற்றி பாட்டாக, கதையாக, காவியமாக எழுதிவைத்தான், கடவுள் எப்படி இருப்பார் என்று யோசித்தான், விடைகிடைக்காத பட்சத்தில் தானே உருவம் குடுக்க ஆரம்பித்தான், இவ்வுலக உயிரினங்களில் தான் மட்டுமே மேலானவன் என்று நினைத்த காரணத்தாலும், இந்த உலகத்தில் பார்த்திராத உருவமாக ஒன்றை தன் அறிவால் உருவாக்க திறானி இல்லாத காரணத்தாலும் அந்தக் கடவுளுக்கு, மனித உருவத்தையே கொடுத்தான்.



கடவுள் நம்பிக்கை ஆழமாக வேர்விட்ட காலங்களில், கொஞ்சம் அறிவு வளர்ச்சி பெற்றிறுந்த விசமிகள் கடவுள் நம்பிக்கை என்னும் அறியாமையில் இருந்தவனைக்கொண்டு வாழ்க்கை நடத்த திட்டமிட்டான். அதன் முதல்கட்டமாக இவன் எழுதிய இதிகாசங்களில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து அவர்கள் எல்லாம் கடவுளின் மறு அவதாரங்கள் என்று மற்றவரை நம்பவைத்தான். கடவுள் பெயரால் மேலும் மேலும் ஏமாற்ற நினைத்தன் விழைவாக வந்ததுதான் சடங்குகள், சகுனங்கள், சம்பிரதாயஙள், வேள்விகள், மன்னாங்கட்டி எல்லாம்.


மேலும் சில அர்த்தமில்லாத ஒலிகளை உருவாக்கி அவற்றை மந்திரங்கள் என்றும் அவை கடவுளிடம் பேசுவதர்க்கான மொழி என்றும் கற்பித்தான். உனக்கு வரும் நண்மை தீமைகளுக்கு கடவுளே காரணம் என்றும் அவர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முன்வினை பாவபுண்ணியத்திற்கு தகுந்தாற்போல் விதி எழுதுவதாகவும் சொல்லிவைத்தான். அந்த விதிகளின் கடுமையை குறைக்க தனக்கு சக்தி இருப்பதாகவும் அதற்கு பரிகாரங்கள் இருப்பதகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவனை அந்த கடவுளின் பெயராலையே மிரட்ட ஆரம்பித்தான்.


காலப்போக்கில் ஏமாற்ற கற்றுக்கொண்டவனெல்லாம் கடவுளை அவனவன் கற்பனைக்கு தகுந்தார்போல் உருவம் குடுத்து கற்களை கடவுளாக்கினர். இப்படித்தான் ஊர் ஊருக்கு கடவுள் வளர ஆரம்பித்தார்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலங்களில் வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லாதவன், அவன் சார்பாக அதை வேரொருவரிடம் ஒப்படைக்க நினைத்தான், அப்படி அவன் அழைத்ததற்கு துணைக்கு வந்தவர்தான் இந்தக் கடவுள்.



தன்மீதும் தன் திறமையின் மீதும் நம்பிக்கை உள்ளவன் கடவுளை நம்புவது இல்லை.
எது நடந்தாலும் அதை சமாளிக்கும் திறனில்லாத, தன்னம்பிக்கை இல்லாதவனுக்கே கடவுள் தேவைப்படுகிறார்.



(ஒரு பெரிய மரத்தை தண்ணீரில் போட்டு இழுப்பது எவ்வளவு சுலபமோ, அது போல் தனக்கு வரும் பெரிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாதவன் கடவுள் என்னும் பெரிய நதியில் தன் பிரச்சினைகளை தள்ளிவிட்டு எல்லாம் அவன் பார்துக்குவான் என்று நினைக்கும் பொழுது மனதின் பாரம் குறைகிறது. கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவே.அதை விட்டு விட்டு சடங்கு சம்பிரதாயம் என்று நம்பிக்கொண்டு இருந்தீர்களேயானால் மேலே குறிப்பிட்ட விசமிகள் உங்களை சாப்பிட்டுவிடுவார்கள்)
என்னைப் பொறுத்தவரை இயங்கு சக்தி இருப்பது உண்மை தான். அந்த இயங்கு சக்தியை நீங்கள் வணங்குவதாலோ, இல்லை எதிர்பதாலோ உங்களை அந்த இயங்கு சக்தி தூக்கி நிறுத்துவதும் இல்லை, தண்டிப்பதும் இல்லை. கடவுளை மட்டும் நம்பிக்கொண்டு காரியமாற்றாமல் இருந்தால் கடவுள் உங்களுக்கு ஒன்றும் கொடுக்கப்போவதில்லை. அப்படி இருப்பவர்களை அவர்கள் கடவுள் கூட விரும்பமாட்டார்.
உழைக்காமல் மந்திர தந்திரத்தில் எதுவும் கிடைத்துவிடாது.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். என்று தெய்வப்புலவரே சொல்லி இருக்கார்.
மந்திரங்கள், பூசை, புணஸ்காரங்களை கடைபிடிப்பதாலோ இல்லை மத அடையாளச்சின்னங்களை இட்டுக்கொள்வதாலோ கடவுளிடம் நீங்கள் நெருங்கி விட முடியாது. நீங்கள் பஞ்சமகா பாதகங்களை செய்யாமல் இருந்தால் போதும், கடவுளை நீங்கள் தேடிச்செல்ல வேண்டாம், அவர் உங்களை தேடிவருவார்.(அந்த இயங்கு சக்தி மனிதனோடு தொடர்பு வைத்திருந்தால்)
பி.கு : பயமே கடவுள் உருவாவதற்கு மூல காரணம் என்பது என் எண்ணம்.

என் பார்வையில் கடவுள் வளர்ச்சி

ஆதிகாலத்து மனிதன் இடி,மின்னல்,மழை,நெருப்பு போன்ற இயற்கை சீட்றங்களை கண்டு அஞ்சினான். அறிவு வளர்ச்சி இல்லாத காலங்களில் இயற்கையை இன்னதென்று பாகுபடுத்த முடியாமல் பயந்து வணங்க ஆரம்பித்தான். என்ன முயன்றும் பிறப்பிற்கு முந்திய இறப்பிற்குப் பிந்திய நிலையை அவனால் அறிய முடியவில்லை. அப்படி அவன் அறிவுக்கு எட்டாத விஷயங்களை இயற்கை என்று முடிவுகட்டினான்.
அப்படி அவன் அறிவிற்கு எட்டாத விஷயங்களை கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இயக்குவதாகவும் நம்பினான்.
அந்த சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டான். அப்படி நம்பியவன் அதை வழிபட ஆரம்பித்தான். மொழி வளர்ச்சிக்காலங்களில் அறிவுக்குப்புலப்படாத கடவுள் பற்றி பாட்டாக, கதையாக, காவியமாக எழுதிவைத்தான், கடவுள் எப்படி இருப்பார் என்று யோசித்தான், விடைகிடைக்காத பட்சத்தில் தானே உருவம் குடுக்க ஆரம்பித்தான், இவ்வுலக உயிரினங்களில் தான் மட்டுமே மேலானவன் என்று நினைத்த காரணத்தாலும், இந்த உலகத்தில் பார்த்திராத உருவமாக ஒன்றை தன் அறிவால் உருவாக்க திறானி இல்லாத காரணத்தாலும் அந்தக் கடவுளுக்கு, மனித உருவத்தையே கொடுத்தான்.
கடவுள் நம்பிக்கை ஆழமாக வேர்விட்ட காலங்களில், கொஞ்சம் அறிவு வளர்ச்சி பெற்றிறுந்த விசமிகள், கடவுள் நம்பிக்கை என்னும் அறியாமையில் இருந்தவனைக்கொண்டு வாழ்க்கை நடத்த திட்டமிட்டான். அதன் முதல்கட்டமாக இவன் எழுதிய இதிகாசங்களில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து அவர்கள் எல்லாம் கடவுளின் மறு அவதாரங்கள் என்று மற்றவரை நம்பவைத்தான். கடவுள் பெயரால் மேலும் மேலும் ஏமாற்ற நினைத்ததன் விழைவாக வந்ததுதான் சடங்குகள், சகுனங்கள், சம்பிரதாயஙள், வேள்விகள், மன்னாங்கட்டி எல்லாம். மேலும் சில அர்த்தமில்லாத ஒலிகளை உருவாக்கி அவற்றை மந்திரங்கள் என்றும் அவை கடவுளிடம் பேசுவதர்க்கான மொழி என்றும் கற்பித்தான். உனக்கு வரும் நண்மை தீமைகளுக்கு கடவுளே காரணம் என்றும் அவர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முன்வினை பாவபுண்ணியத்திற்கு தகுந்தாற்போல் விதி எழுதுவதாகவும் சொல்லிவைத்தான். அந்த விதிகளின் கடுமையை குரைக்க தனக்கு சக்தி இருப்பதாகவும் அதற்கு பரிகாரங்கள் இருப்பதகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவனை அந்த கடவுளின் பெயராலையே மிரட்ட ஆரம்பித்தான். காலப்போக்கில் ஏமாற்ற கற்றுக்கொண்டவனெல்லாம் கடவுளை அவனவன் கற்பனைக்கு தகுந்தார்போல் உருவம் குடுத்து கற்களை கடவுளாக்கினர். இப்படித்தான் ஊர் ஊருக்கு கடவுள் வளர ஆரம்பித்தார்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலங்களில் வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லாதவன், அவன் சார்பாக அதை வேரொருவரிடம் ஒப்படைக்க நினைத்தான், அப்படி அவன் அழைத்ததற்கு துனைக்கு வந்தவர்தான் இந்தக் கடவுள்.
தன்மீதும் தன் திறமையின் மீதும் நம்பிக்கை உள்ளவன் கடவுளை நம்புவது இல்லை.
எது நடந்தாலும் அதை சமாளிக்கும் திறனில்லாத, தன்னம்பிக்கை இல்லாதவனுக்கே கடவுள் தேவைப்படுகிறார்.
(ஒரு பெரிய மரத்தை தண்ணீரில் போட்டு இழுப்பது எவ்வளவு சுலபமோ, அது போல் தனக்கு வரும் பெரிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாதவன் கடவுள் என்னும் பெரிய நதியில் தன் பிரச்சினைகளை தள்ளிவிட்டு எல்லாம் அவன் பார்துக்குவான் என்று நினைக்கும் பொழுது மனதின் பாரம் குறைகிறது. கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவே.அதை விட்டு விட்டு சடங்கு சம்பிரதாயம் என்று நம்பிக்கொண்டு இருந்தீர்களேயானால் மேலே குறிப்பிட்ட விசமிகள் உங்களை சாப்பிட்டுவிடுவார்கள்)