பார்ப்பனக் கடவுள்


அர்ச்சனை தட்டில்
ஒத்த ரூபாயிட்டால்
கையில் திருநீறு, குங்குமம்.

நூறுரூபாய் என்றால்,
சாமிக்கு அர்ச்சனை.

ஐநூறு ரூபாய் என்றால்,
சாமிக்கு அருகாமையில்
அர்ச்சனை.

ஆயிரம் என்றால்,
சாமி கழுத்து மாலை
பிரஷாதம்!

லட்சம் என்றால்,
வீடு தேடி வரும்
பிரஷாதம்!!

கோடி என்றால்,,
உன் வீடே கோயில்!!
நீயே கடவுள்!!!

7 comments:

கோவி.கண்ணன் said...

//லட்சம் என்றால்,
வீடு தேடி வரும்
பிரஷாதம்!!
//

ஆத்துல மாமி சவுக்கியமா இருக்காளான்னு கேட்டுவிட்டால் எதுவுமே தேவை இல்லை, நம்மவா என்று சகல மரியாதையும் இலவசமாகவே கிடைக்கும்.

நான் தகுதியானவனா? said...
This comment has been removed by the author.
அப்பாவி முரு said...

//கோடி என்றால்,,
உன் வீடே கோயில்!!
நீயே கடவுள்!!! //

ஆமங்க என் வீடு தெருக்கோடியில் தான் உள்ளது, அப்ப நான் கடவுளா???

இராகவன் நைஜிரியா said...

// லட்சம் என்றால்,
வீடு தேடி வரும்
பிரஷாதம்!!//

காசேதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா...

கிருஷ்ணா said...

இது நமது கோயில்களில் மட்டுமே நடக்கும் அவலம்! இதை யார் மாற்றுவது? இதனால்தான், நான் கோயிலுக்கே போவதில்லை..!

பிரியமுடன் பிரபு said...

கோடி என்றால்,,
உன் வீடே கோயில்!!
நீயே கடவுள்!!!
////

இது நல்லாயிருக்கு

பிரியமுடன் பிரபு said...

காசேதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா...