அழகிய நாட்கள்


அழகிய நாட்கள்உன்னோடு பழகிய
மொத்த நாட்களின்
நீளத்தையும் ஒரு
பக்கக் காகிதத்தில்
அடக்க முயற்சித்ததில்
வார்த்தைகள் அங்கும்
இங்குமாய் கைகோர்த்ததில்
உன்னைப் பற்றிய
கவிதையாய் அது இருந்தது!


கவிதைகள் எல்லோராலும்
புரிந்து கொள்ளப்படுவதில்லை
என் கவிதை வரிகளின்
ஆழம் அர்த்தம் உன்
புறக்கண்களுக்கு மட்டுமே
புலப்படும்.

நான் சஞ்சரிக்கத் தெரிந்த
அடுக்குகளில் சஞ்சரிக்கத்
தெரிந்தவள் நீ


பேசிப்பழகிய வார்த்தைகள்
போதமல் பழைய வார்த்தைகள்
தூசி தட்டி வர்ணம் பூசினேன்
கவிதை மெருகேரியது

இயற்கை மனிதனை
வியக்கக் கற்றுத்தந்தது
வியத்தல் மனிதனை
சலிப்பிலிருந்து மீட்டெடுத்தது
வாழ்க்கை சலிக்காமலிருக்க
இயற்கை உன்னை எனக்குத்தந்தது


எதிர் பாரா தருனத்தில்
நீ உன் காதலை உறைத்தபோது
வாழப்படாத வாழ்க்கை வாழ்ந்துவிட்ட
மகிழ்ச்சி எனக்கு
நீ என்னோடு இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
சுருங்கிய என் வாழ்வு
அங்குலம் அங்குலமாய்
விரியக்காண்கிறேன்


வாழ்க்கை முடியும்
காலங்களில் அசை
போடுவதற்கே காதல்
என்று நினத்திருந்தேன்
இல்லை அது என் வாழ்வின்
நீள அகலம் பெருக்க வந்தது


இப்படி எத்தனை எத்தனையோ
மாற்றங்கள் உன்னால்
எல்லாம் எழுதிட நினைத்தபோது
புரிந்தது நீ,
வார்த்தையில் அடங்காத வாக்கியம்
அல்லது வைரமுத்து சொன்னதுபோல்
சங்கில் அடங்காத சமுத்திரமென்று.