விடியாமூஞ்சி

அக்னி வெயில்,

இரக்கமில்லா காற்று,

மெளனத்திற்கு தலையசைக்க

விரும்பா மரங்கள்,

புற்கள் கூட முலைக்காத

புண்ணிய பூமியில்

கால் முலைத்த பூவாய்,

அந்தச் சிறுமி

தட்டுத் தடுமாறி

தண்ணீர் குடம் சுமப்பதை,

பார்ப்பவர்கள் கண்கள்

பனித்துவிடும் போது,

ஏனோ பாதகத்தி, சித்தி

மட்டும் சாடுவாள், ஏண்டி

விடியாமூஞ்சி ஒரு நடை

தண்ணிக்குப் போய்ட்டு வர

இவ்வளவு நேரமா?