ஹலோ யார் பேசுறது

செல்போனில் பேச சிலரைத்தவிர பெரும்பாலானவர்களுக்கு அது பிடித்தமான விஷயம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு செல்போனில் பேசும் நாகரீகம் தெரிந்து வைத்து இருக்கிறோம். இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை பேர் வெறும் காலுடன் செருப்பு இல்லாமல் திரிகிறார்களோ, அந்த அளவே செல்போன் இல்லாதவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருத்தரின் வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட செல்போனில் பேசும் நாகரீகம் பற்றி தெரிந்து கொள்வோம்.



நீங்கள் அழைக்கும் நபர் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தாலோ அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தாலோ அவருக்கு அழைப்பு விடுக்கும் முன், குறுந்தகவலின் வழி அவரது அனுமதியை பெற்று பேசுவது நல்லது. மேலும் எதிர்முனையில் இருப்பவர் பரபரப்பாகவோ அல்லது அவசரமான நிலையில் இருக்கிறாரா என்பதை உணர்ந்து அவரின் நேரத்தை வீணடிக்காமல் விஷயத்தை மட்டும் பேசி வைக்கவும்.



ஒருவருக்கு அழைப்பு விடுக்கையில் அழைப்பு மணி முழுவதுமாக அழைத்து ஓயும் வரை அழைப்பை நிறுத்தக்கூடாது. நீங்கள் மிஸ்டு கால் மட்டுமே கொடுப்பீர்கள் என்று எதிர்முனையில் இருப்பவருக்கு தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் உங்கள் அழைப்பை துண்டித்து பிறகு மீண்டும் அவரே உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் மிஸ்டு கால் கொடுக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒரு தடவை அழைப்புமணிச்சத்தம் உங்களுக்கு கேட்டவுடன் உங்களது அழைப்பை நீங்கள் துண்டித்தால் எதிர்முனையில் இருப்பவர் அதை உணரமுடியாமல் அல்லது கேட்கமுடியாமல் போகக்கூடும். பிறகு அவர் உங்களை தொடர்பு கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று புகார் கூறுவது தவறு.



நீங்கள் அழைக்கும் நபர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், அவருக்கு நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம், உங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் எதிர் முனையில் இருந்து பதில் வருவதற்கு முன் நீங்கள் உங்களுக்கு வேண்டியவர் தானே என்று ஒருமையில் பேசி அவருடைய அப்பவிடமோ அல்லது வேறு யாரிடமாவது சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் அவலம் ஏற்பட வாய்ப்புண்டு.



அவசரமான அல்லது முக்கியமான தகவல் பரிமாரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு அலுவல் நேரங்களில் அழைப்பு விடுக்க வேண்டும்.நீங்கள் ஓய்வாக இருக்கிறீர்கள் என்பதற்காக உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ அவர்களது அனுமதி இன்றி அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவரின் சூழ்நிலை தெரியாமல் பேசுவதும் தவறு. அவருக்கு நீங்கள் வேண்டியவர் என்பதற்காகவே உங்கள் பேச்சை அவர் தட்ட முடியாமல் கேட்க நேரிட்டு அவரை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்.



பொது இடங்களில் நீங்கள் உங்கள் அன்புக்குறியவரிடமோ அல்லது வேறுயாரிடனும் பேச நேரிட்டால், அது பக்கத்தில் இருப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத விதமாக அமைதியாய் பேசுங்கள். அப்படி இல்லாமல் நீங்கள் உரக்கப்பேசினால் நீங்கள் பேசும் விசயம் மற்றவருக்குத் தெரிவதோடு இல்லாமல், மற்றவரின் பார்வையில் நீங்கள் வேசம் கட்டாத கோமாளியாகத் தெரிவீர்கள்.



மீட்டிங் அறையில் இருக்கும் போது அழைப்பு வந்தால் எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லி விட்டு தனியாக சென்று பேசுவது நல்லது.


என் அனுபவத்தில் சில முதலாளிகள் தன்னுடைய தொழிலாளிக்கு தொலைபேசியில் அழைத்தால் அவர் தன்னை அறிமுகம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் அது ஒருவகையான கொளரவ குறைச்சலாக நினைப்பதே அதற்குக் காரணம். இது முற்றிலும் தவறு, யாராக இருந்தாலும் முதலில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசுவதே பண்பாகும். அறிமுகம் செய்துகொள்வதால் நாம் ஒன்னும் குறைந்துபோவதில்லை

வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் வேண்டியவருக்கு அவர் இருக்கும் நாட்டின் நேரம் வித்தியாசம் தெரிந்து அழைப்பது நல்லது. பெரும்பாலும் அவசியம் ஏற்படாதவரை ஒன்பது மணிக்கு மேல் யாரையும் தொடர்பு கொள்ளாது இருத்தலே உத்தமம்.

பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது போனை ஆப் செய்துவிடுவது அல்லது சைலண்ட் மோடில் வைப்பது சிறந்தது.

செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை கண்டால் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்.

உங்களது போனுக்கு wrong calls வந்தால், எதிர் முனையில் இருப்பவருக்கு இது நீங்கள் அழைத்த எண் இல்லை என்பதை நாகரீகமான முறையில் தெரியப்படுத்துங்கள், அழைத்தவர் பண்பாளராக இருந்தால் நிச்சயம் மண்ணிப்புக் கேட்பார். அப்படி வரும் அழைப்புகள் தவறுதலாகவோ அல்லது தொழில் நுட்பக்கோளாறு காரணமாகவோ ஏற்பட்டு இருக்கலாம், மேலும் இது போன்று ஒரு சூழ்நிலை நமக்கும் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு நாகரீகமாக அப்படி வரும் wrong calls க்கு பதிலளிப்பது நல்லது.

செல்போனில் நீங்கள் ஒருவருக்கு ஒருமுறைக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் உங்களின் அழைப்பை ஏற்கவில்லை என்றால் கோவம் கொள்ளாமல் பொறுமை காபது அவசியம். ஏனெனில் அவர் உங்கள் அழைப்பை ஏற்க முடியாத ஏதொ ஒரு சிக்களான சூழலில் இருக்கலாம்.(உதரணமாக மருத்துவமனையிலோ, வாகனத்தில் போய் கொண்டோ அல்லது முக்கியமான மீட்டிங்கிலோ இருந்திருக்கலாம்) அதனால் பலமுறை அழைத்தும் பதில் இல்லை என்றால் குறுந்தகவல் வழி அவர் ஓய்வாக போது உங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளலாம்.

std booth ல் பேசுபவர்கள் அதிகபசமாக அவசர நிலை ஏற்பட்டாலோ அல்லது முக்கியமான செய்தி சொல்ல வேண்டும் என்றால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

std booth வசதி இல்லாத ஊர்களில் நீங்கள் உங்களிடம் நேரமும் பணமும் இருக்கிறது என்பதற்காக மணிக்கனக்காக பேசும் பொழுது நீங்கள் ஒன்றை மறக்குறீர்கள். அவசர செய்தியை சொல்வதற்காக யாரோ ஒருவர் நீங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாம், அப்படி ஒரு நிலைமை நமக்கும் நேரும் என்பதை மனதில் கொண்டு பேச வேண்டிய விசயத்தை பேசி மற்றவருக்கு வழி விடுவது நல்லது.

பொது தொலைபேசியில் பேசும் பொழுது

  1. அமைதியாகப் பேசுங்கள்
  2. தெளிவாகப் பேசுங்கள்
  3. நாகரீகமாகப் பேசுங்கள்
  4. போனை மென்மையாக கையாளுங்கள்
  5. விசயத்தை மட்டும் பேசுங்கள்
  6. தன்மையோடு பேசுங்கள்

cross talk வந்தால் தயவு செய்து அதை தொடர்ந்து கேட்காமல் துண்டித்துவிடுங்கள். பிறரது பேச்சை ஒட்டுக் கேட்பது மிக மிக கேவலமான செயல்.

இன்னும் தெரிந்து கொள்வோம்.