ஆதிகாலத்து மனிதன் இடி,மின்னல்,மழை,நெருப்பு போன்ற இயற்கை சீட்றங்களை கண்டு அஞ்சினான். அறிவு வளர்ச்சி இல்லாத காலஙக்களில் இயற்கையை இன்னதென்று பாகுபடுத்த முடியாமல் பயந்து வணங்க ஆரம்பித்தான். என்ன முயன்றும் பிறப்பிற்கு முந்திய இறப்பிற்குப் பிந்திய நிலையை அவனால் அறிய முடியவில்லை. அப்படி அவன் அறிவுக்கு எட்டாத விஷயங்களை இயற்கை என்று முடிவுகட்டினான்.அப்படி அவன் அறிவிற்கு எட்டாத விஷயங்களை கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இயக்குவதாகவும் நம்பினான்.
அந்த சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டான். அப்படி நம்பியவன் அதை வழிபட ஆரம்பித்தான். மொழி வளர்ச்சிக்காலங்களில் அறிவுக்குப்புலப்படாத கடவுள் பற்றி பாட்டாக, கதையாக, காவியமாக எழுதிவைத்தான், கடவுள் எப்படி இருப்பார் என்று யோசித்தான், விடைகிடைக்காத பட்சத்தில் தானே உருவம் குடுக்க ஆரம்பித்தான், இவ்வுலக உயிரினங்களில் தான் மட்டுமே மேலானவன் என்று நினைத்த காரணத்தாலும், இந்த உலகத்தில் பார்த்திராத உருவமாக ஒன்றை தன் அறிவால் உருவாக்க திறானி இல்லாத காரணத்தாலும் அந்தக் கடவுளுக்கு, மனித உருவத்தையே கொடுத்தான்.
கடவுள் நம்பிக்கை ஆழமாக வேர்விட்ட காலங்களில், கொஞ்சம் அறிவு வளர்ச்சி பெற்றிறுந்த விசமிகள் கடவுள் நம்பிக்கை என்னும் அறியாமையில் இருந்தவனைக்கொண்டு வாழ்க்கை நடத்த திட்டமிட்டான். அதன் முதல்கட்டமாக இவன் எழுதிய இதிகாசங்களில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து அவர்கள் எல்லாம் கடவுளின் மறு அவதாரங்கள் என்று மற்றவரை நம்பவைத்தான். கடவுள் பெயரால் மேலும் மேலும் ஏமாற்ற நினைத்தன் விழைவாக வந்ததுதான் சடங்குகள், சகுனங்கள், சம்பிரதாயஙள், வேள்விகள், மன்னாங்கட்டி எல்லாம்.
மேலும் சில அர்த்தமில்லாத ஒலிகளை உருவாக்கி அவற்றை மந்திரங்கள் என்றும் அவை கடவுளிடம் பேசுவதர்க்கான மொழி என்றும் கற்பித்தான். உனக்கு வரும் நண்மை தீமைகளுக்கு கடவுளே காரணம் என்றும் அவர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முன்வினை பாவபுண்ணியத்திற்கு தகுந்தாற்போல் விதி எழுதுவதாகவும் சொல்லிவைத்தான். அந்த விதிகளின் கடுமையை குறைக்க தனக்கு சக்தி இருப்பதாகவும் அதற்கு பரிகாரங்கள் இருப்பதகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவனை அந்த கடவுளின் பெயராலையே மிரட்ட ஆரம்பித்தான்.
காலப்போக்கில் ஏமாற்ற கற்றுக்கொண்டவனெல்லாம் கடவுளை அவனவன் கற்பனைக்கு தகுந்தார்போல் உருவம் குடுத்து கற்களை கடவுளாக்கினர். இப்படித்தான் ஊர் ஊருக்கு கடவுள் வளர ஆரம்பித்தார்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலங்களில் வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லாதவன், அவன் சார்பாக அதை வேரொருவரிடம் ஒப்படைக்க நினைத்தான், அப்படி அவன் அழைத்ததற்கு துணைக்கு வந்தவர்தான் இந்தக் கடவுள்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலங்களில் வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லாதவன், அவன் சார்பாக அதை வேரொருவரிடம் ஒப்படைக்க நினைத்தான், அப்படி அவன் அழைத்ததற்கு துணைக்கு வந்தவர்தான் இந்தக் கடவுள்.
தன்மீதும் தன் திறமையின் மீதும் நம்பிக்கை உள்ளவன் கடவுளை நம்புவது இல்லை.
எது நடந்தாலும் அதை சமாளிக்கும் திறனில்லாத, தன்னம்பிக்கை இல்லாதவனுக்கே கடவுள் தேவைப்படுகிறார்.
(ஒரு பெரிய மரத்தை தண்ணீரில் போட்டு இழுப்பது எவ்வளவு சுலபமோ, அது போல் தனக்கு வரும் பெரிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாதவன் கடவுள் என்னும் பெரிய நதியில் தன் பிரச்சினைகளை தள்ளிவிட்டு எல்லாம் அவன் பார்துக்குவான் என்று நினைக்கும் பொழுது மனதின் பாரம் குறைகிறது. கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவே.அதை விட்டு விட்டு சடங்கு சம்பிரதாயம் என்று நம்பிக்கொண்டு இருந்தீர்களேயானால் மேலே குறிப்பிட்ட விசமிகள் உங்களை சாப்பிட்டுவிடுவார்கள்)
என்னைப் பொறுத்தவரை இயங்கு சக்தி இருப்பது உண்மை தான். அந்த இயங்கு சக்தியை நீங்கள் வணங்குவதாலோ, இல்லை எதிர்பதாலோ உங்களை அந்த இயங்கு சக்தி தூக்கி நிறுத்துவதும் இல்லை, தண்டிப்பதும் இல்லை. கடவுளை மட்டும் நம்பிக்கொண்டு காரியமாற்றாமல் இருந்தால் கடவுள் உங்களுக்கு ஒன்றும் கொடுக்கப்போவதில்லை. அப்படி இருப்பவர்களை அவர்கள் கடவுள் கூட விரும்பமாட்டார்.
உழைக்காமல் மந்திர தந்திரத்தில் எதுவும் கிடைத்துவிடாது.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். என்று தெய்வப்புலவரே சொல்லி இருக்கார்.
மந்திரங்கள், பூசை, புணஸ்காரங்களை கடைபிடிப்பதாலோ இல்லை மத அடையாளச்சின்னங்களை இட்டுக்கொள்வதாலோ கடவுளிடம் நீங்கள் நெருங்கி விட முடியாது. நீங்கள் பஞ்சமகா பாதகங்களை செய்யாமல் இருந்தால் போதும், கடவுளை நீங்கள் தேடிச்செல்ல வேண்டாம், அவர் உங்களை தேடிவருவார்.(அந்த இயங்கு சக்தி மனிதனோடு தொடர்பு வைத்திருந்தால்)
பி.கு : பயமே கடவுள் உருவாவதற்கு மூல காரணம் என்பது என் எண்ணம்.