வடகொரியாவின் ஏவுகனைச்சோதனை, அந்நாட்டைப் பொறுத்தவரை அந்த நாட்டின் பதுகாப்பைக் கருதி நடத்தப்பட்ட சோதனையே. ஆனால், அதனை ஐநா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்கொரியா கண்டனம் தெரிவித்து இருந்தால் அது ஏற்புடையதே, ஏனெனில் அது தென்கொரியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது என சொல்லலாம்.
ஆனால் எல்லாவிதமான ஆயுதங்களையும் தாங்கி நிற்கும் அமெரிக்கா, ஈராக்கை வீழ்த்தி எண்ணை வளங்களை கையகப்படுத்தியது. அதே காரணத்திற்காக ஈரானுடன் போர்தொடுப்பதற்கு காரணங்களை தேடிக்கொண்டிருக்கிரது.
உலக நாடுகளின் நாட்டாமையாக தன்னை நினைத்துக்கொண்டு அமெரிக்கா தற்பொழுது வடகொரியாவை மிரட்டுகிறது. ஐநாவோ உடனடி பொருளாதாரத் தடையை அமுல்படுத்துகிறது. சீனா ஐநாவின் பொருளாதாரத்தடையை எதிர்த்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது. ஐநாவை சீனா ஆதரித்தால் தற்சமயம் வடகொரியாவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல வடகொரியர்கள் சீனாவில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டியிருக்கும், இதை அறிந்து கொண்ட சீனா மொளனம் காக்கிறது.
ஐநா வடகொரியாவின் மீது கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடையை உற்றுக் கவணித்தால் ஒன்று விளங்கும். அது அமெரிக்க எகாதிபத்தியம் ஐநாவிற்கு இட்ட கட்டளையென்பது அரசியல் நோக்கர்களுக்குப் புரியும். இதில் கொடுமை என்னவென்றால் இந்தியாவும் பூம்பூம் மாட்டைப் போல் அமெரிக்கா சொல்வதெர்க்கெல்லாம் தலையாட்டுவது தான்.
வடகொரியா வெறும் ( குறுந்தொலைவு ஏவுகணை) ஆயுதச் சோதனை செய்வதை கண்டித்து உடனடி பொருளாதார தடை விதிக்கும் ஐநா, ஒரு இனத்தை முற்றிலுமாக அழித்த இலங்கை அரசை என்னன்ன வெல்லாம் செய்திருக்க வேண்டும், ஆனால் வெறும் பேச்சுக்கு கண்டணத்தை தெரிவித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டது.
முந்நூறு ஆயிரம் ஈழத்து மக்கள் உணவு, மருந்து, தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகூட கிடைக்காமலும், உயிறிழப்பு ஏற்பட்டும், எத்தனை முறை கூக்குரலிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் இருந்து, சீனா, ருஸ்யா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் மிக பயங்கரமான அயுதங்களை விற்று தன் பணப்பையை நிறப்பிக்கொள்ள வழிவகுத்துத்தந்து விட்டு இப்பொழுது வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதும், பொருளாதாரத்தடை விதிப்பதும் நகைப்புக்கு இடமலிக்கிறது.(அடடா என்ன அக்கறை என்று தோன்றுகிறது).
தெரியாமல் தான் கேட்குறேன், ஆமாம் நீங்கள் யாருக்காக ( ஐநா) செயல்படுகிறீர்கள், மக்களுக்கா அல்லது முதலாலித்துவத்துக்கா, எங்கள் ஊர் அரசியல் வாதிகள் தான் பதவி என்றால் அம்மணமாக நிற்கிறார்கள் என்றால் நீங்கள் எதுக்காக நிற்கிறீர்கள் என்பது விளங்கவில்லை.
தற்பொழுது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அமெரிக்கா வடகொரியாவின் ஆயுதச் சோதனை பிற்காலத்தில் பல்லாயிரக்கனக்கானவர்களின் உயிர் குடிக்கும் என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வரிசையில் ஈரனும், வடகொரியாவும் வல்லரசாக உருவெடுக்குமோ என்ற அச்சம் தான் காரணம். என்ன செய்து இந்திய அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததென்பது தெரியவில்லை, ஆனல் சீனவிடம் தன் ஜம்பம் எடுபடவில்லை, அது போல் நாளை வடகொரியா, ஈரன் உருவாகிவிட்டால், உலக நாடுகளின் நாட்டாமை என்று தன்னை சொல்லிக்க முடியாமல் போகக்கூடும் என்பதை மனதில் கொண்டு அமெரிக்கா இந்தக் கண்டணத்தை தெரிவித்துள்ளது. செஞ்சோத்துக் கடன் தீர்க்க இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உண்மையாக ஐநாவிற்கு மக்கள் மீது அக்கறை இருந்து இருந்தால் இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு நிற்பந்தித்திருக்களாம், ஆனால் செய்யவில்லை, காரணம் இலங்கையில் நடந்தது எந்த விதத்திலும் அமெரிக்காவை பாதிக்கவில்லை, தன் முதலாளிக்கு வடகொரியாவால் ஆபத்து என்று தெரிந்தஉடன் ஐநா தன் எஜமானனுக்காக வாளை ஆட்டுகிறது.
(யானைக்கும் அடி சறுக்கும் என்று யாரும் அமெரிக்காவிற்குச் சொல்லவில்லை போலும், யானை விழுந்தால் எழுந்திரிக்கமுடியாது.)