ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.”எது மனித சக்திக்கு எட்டவில்லையோ அதுவே தெய்வம் என்கிறான் ஆத்திகன்.”

”இல்லை, இல்லை அது இயற்கை என்கிறான் நாத்திகன்.”


உலகத்தை வெல்ல நினைக்கும் விஞ்ஞானிகளே இதை வெல்ல முடியவில்லை. ஆனால் பிறப்பும் இயற்கை, இறப்பும் இயற்கை என்று சுலபமாக சொல்லிவிடுகிறான் நாத்திகன்.

எது அந்த இயற்கை?

அது தானாக அமைந்தது என்கிறான் .
தானாக என்றால் எப்படி?
எங்கிருந்தோ வந்தது என்கிறான்.
எங்கிருந்தோ என்றால்?
விழிக்கிறான்.

எல்லாம் தானாக உண்டாயிற்று என்றால், குழந்தை ஏன் பூமியில் தானாக உண்டாவதில்லை?
தாய், தந்தை என்று ஏன் இரண்டு பேர் தெவைப்படுகிறார்கள்?
உண்மயில் ஒவ்வொரு பிறப்பிற்கும் மூலமிருக்கிறது.
மூலத்திற்கும் மூலம், சூன்யத்திலிருக்கிறது.
அதுதான் ஆதி மூலம் என்கிறான் ஆத்திகன்.ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.


தெரிந்த பொருளைப் பற்றி விவதிப்பதை விட தெரியாத பொருள் பற்றி விவாதிப்பதென்பது சுலபமானது. இங்கே சூன்யத்தைப் பற்றிய விவாதம்
சுவையாக நடக்கிறது.


கண்ணில்லாதவன் யானை தடவின கதை மாதிரி சூன்யத்தை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வந்துகொண்டேயிருக்கிறது.
கடவுள் இருக்கிறார், இல்லை என்ற இந்த இரண்டு கேள்வி தான் இலக்கியதில் அதிகம் இடம்பிடித்துள்ளன.


எப்போதும் தெளிவாகத் தெரியும் பொருள்பற்றி, இரண்டு சிந்தனை இல்லை. தெரியாத பொருள் மீதே சிந்தனை படர்கிறது. கற்பனை திறன் பெருக வேண்டும் என்றே இந்த சூன்யம் பிறந்தது. தத்துவங்கள் பிறக்கவேண்டும் என்றே சூன்யம் தன் இருப்பை தடம் தெரியாமல் அமைத்தது.


விடை இல்லாத கேள்வியாக இது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

பிறப்பு இறப்பு பற்றி தெரிந்து விட்டால் உலகில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அப்படி அமைந்துவிடாமலிருக்கவே இந்தச்சூன்யம் மறைந்து கொண்டது. உலகம் மாறி மாறி அமையவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம் என்பது என் கருத்து.


தப்புங்குறீங்களா அப்போ வாங்க விவாதிப்போம்.