வடகொரியாவின் ஏவுகனைச்சோதனை

வடகொரியாவின் ஏவுகனைச்சோதனை, அந்நாட்டைப் பொறுத்தவரை அந்த நாட்டின் பதுகாப்பைக் கருதி நடத்தப்பட்ட சோதனையே. ஆனால், அதனை ஐநா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்கொரியா கண்டனம் தெரிவித்து இருந்தால் அது ஏற்புடையதே, ஏனெனில் அது தென்கொரியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது என சொல்லலாம்.

ஆனால் எல்லாவிதமான ஆயுதங்களையும் தாங்கி நிற்கும் அமெரிக்கா, ஈராக்கை வீழ்த்தி எண்ணை வளங்களை கையகப்படுத்தியது. அதே காரணத்திற்காக ஈரானுடன் போர்தொடுப்பதற்கு காரணங்களை தேடிக்கொண்டிருக்கிரது.

உலக நாடுகளின் நாட்டாமையாக தன்னை நினைத்துக்கொண்டு அமெரிக்கா தற்பொழுது வடகொரியாவை மிரட்டுகிறது. ஐநாவோ உடனடி பொருளாதாரத் தடையை அமுல்படுத்துகிறது. சீனா ஐநாவின் பொருளாதாரத்தடையை எதிர்த்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது. ஐநாவை சீனா ஆதரித்தால் தற்சமயம் வடகொரியாவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல வடகொரியர்கள் சீனாவில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டியிருக்கும், இதை அறிந்து கொண்ட சீனா மொளனம் காக்கிறது.

ஐநா வடகொரியாவின் மீது கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடையை உற்றுக் கவணித்தால் ஒன்று விளங்கும். அது அமெரிக்க எகாதிபத்தியம் ஐநாவிற்கு இட்ட கட்டளையென்பது அரசியல் நோக்கர்களுக்குப் புரியும். இதில் கொடுமை என்னவென்றால் இந்தியாவும் பூம்பூம் மாட்டைப் போல் அமெரிக்கா சொல்வதெர்க்கெல்லாம் தலையாட்டுவது தான்.

வடகொரியா வெறும் ( குறுந்தொலைவு ஏவுகணை) ஆயுதச் சோதனை செய்வதை கண்டித்து உடனடி பொருளாதார தடை விதிக்கும் ஐநா, ஒரு இனத்தை முற்றிலுமாக அழித்த இலங்கை அரசை என்னன்ன வெல்லாம் செய்திருக்க வேண்டும், ஆனால் வெறும் பேச்சுக்கு கண்டணத்தை தெரிவித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டது.

முந்நூறு ஆயிரம் ஈழத்து மக்கள் உணவு, மருந்து, தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகூட கிடைக்காமலும், உயிறிழப்பு ஏற்பட்டும், எத்தனை முறை கூக்குரலிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் இருந்து, சீனா, ருஸ்யா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் மிக பயங்கரமான அயுதங்களை விற்று தன் பணப்பையை நிறப்பிக்கொள்ள வழிவகுத்துத்தந்து விட்டு இப்பொழுது வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதும், பொருளாதாரத்தடை விதிப்பதும் நகைப்புக்கு இடமலிக்கிறது.(அடடா என்ன அக்கறை என்று தோன்றுகிறது).

தெரியாமல் தான் கேட்குறேன், ஆமாம் நீங்கள் யாருக்காக ( ஐநா) செயல்படுகிறீர்கள், மக்களுக்கா அல்லது முதலாலித்துவத்துக்கா, எங்கள் ஊர் அரசியல் வாதிகள் தான் பதவி என்றால் அம்மணமாக நிற்கிறார்கள் என்றால் நீங்கள் எதுக்காக நிற்கிறீர்கள் என்பது விளங்கவில்லை.

தற்பொழுது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அமெரிக்கா வடகொரியாவின் ஆயுதச் சோதனை பிற்காலத்தில் பல்லாயிரக்கனக்கானவர்களின் உயிர் குடிக்கும் என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வரிசையில் ஈரனும், வடகொரியாவும் வல்லரசாக உருவெடுக்குமோ என்ற அச்சம் தான் காரணம். என்ன செய்து இந்திய அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததென்பது தெரியவில்லை, ஆனல் சீனவிடம் தன் ஜம்பம் எடுபடவில்லை, அது போல் நாளை வடகொரியா, ஈரன் உருவாகிவிட்டால், உலக நாடுகளின் நாட்டாமை என்று தன்னை சொல்லிக்க முடியாமல் போகக்கூடும் என்பதை மனதில் கொண்டு அமெரிக்கா இந்தக் கண்டணத்தை தெரிவித்துள்ளது. செஞ்சோத்துக் கடன் தீர்க்க இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உண்மையாக ஐநாவிற்கு மக்கள் மீது அக்கறை இருந்து இருந்தால் இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு நிற்பந்தித்திருக்களாம், ஆனால் செய்யவில்லை, காரணம் இலங்கையில் நடந்தது எந்த விதத்திலும் அமெரிக்காவை பாதிக்கவில்லை, தன் முதலாளிக்கு வடகொரியாவால் ஆபத்து என்று தெரிந்தஉடன் ஐநா தன் எஜமானனுக்காக வாளை ஆட்டுகிறது.

(யானைக்கும் அடி சறுக்கும் என்று யாரும் அமெரிக்காவிற்குச் சொல்லவில்லை போலும், யானை விழுந்தால் எழுந்திரிக்கமுடியாது.)

ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.”எது மனித சக்திக்கு எட்டவில்லையோ அதுவே தெய்வம் என்கிறான் ஆத்திகன்.”

”இல்லை, இல்லை அது இயற்கை என்கிறான் நாத்திகன்.”


உலகத்தை வெல்ல நினைக்கும் விஞ்ஞானிகளே இதை வெல்ல முடியவில்லை. ஆனால் பிறப்பும் இயற்கை, இறப்பும் இயற்கை என்று சுலபமாக சொல்லிவிடுகிறான் நாத்திகன்.

எது அந்த இயற்கை?

அது தானாக அமைந்தது என்கிறான் .
தானாக என்றால் எப்படி?
எங்கிருந்தோ வந்தது என்கிறான்.
எங்கிருந்தோ என்றால்?
விழிக்கிறான்.

எல்லாம் தானாக உண்டாயிற்று என்றால், குழந்தை ஏன் பூமியில் தானாக உண்டாவதில்லை?
தாய், தந்தை என்று ஏன் இரண்டு பேர் தெவைப்படுகிறார்கள்?
உண்மயில் ஒவ்வொரு பிறப்பிற்கும் மூலமிருக்கிறது.
மூலத்திற்கும் மூலம், சூன்யத்திலிருக்கிறது.
அதுதான் ஆதி மூலம் என்கிறான் ஆத்திகன்.ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.


தெரிந்த பொருளைப் பற்றி விவதிப்பதை விட தெரியாத பொருள் பற்றி விவாதிப்பதென்பது சுலபமானது. இங்கே சூன்யத்தைப் பற்றிய விவாதம்
சுவையாக நடக்கிறது.


கண்ணில்லாதவன் யானை தடவின கதை மாதிரி சூன்யத்தை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வந்துகொண்டேயிருக்கிறது.
கடவுள் இருக்கிறார், இல்லை என்ற இந்த இரண்டு கேள்வி தான் இலக்கியதில் அதிகம் இடம்பிடித்துள்ளன.


எப்போதும் தெளிவாகத் தெரியும் பொருள்பற்றி, இரண்டு சிந்தனை இல்லை. தெரியாத பொருள் மீதே சிந்தனை படர்கிறது. கற்பனை திறன் பெருக வேண்டும் என்றே இந்த சூன்யம் பிறந்தது. தத்துவங்கள் பிறக்கவேண்டும் என்றே சூன்யம் தன் இருப்பை தடம் தெரியாமல் அமைத்தது.


விடை இல்லாத கேள்வியாக இது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

பிறப்பு இறப்பு பற்றி தெரிந்து விட்டால் உலகில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அப்படி அமைந்துவிடாமலிருக்கவே இந்தச்சூன்யம் மறைந்து கொண்டது. உலகம் மாறி மாறி அமையவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம் என்பது என் கருத்து.


தப்புங்குறீங்களா அப்போ வாங்க விவாதிப்போம்.

கருணைக்கொலை பாவமா?”இந்து தர்மப்படி கருணைக் கொலை செய்வது பாவம், குற்றமாகும். “ எப்படிப்பட்டவரும் வாழ வேண்டும்’ என்கிறது இந்து மதம். அதனாலேயே தற்கொலை செய்து கொள்வதையும், கருணைக் கொலை செய்வதையும் ஒப்புக் கொள்வதில்லை இந்து மதம்.எந்த காரணத்தினாலோ இழிநிலை அடைந்தவரிடமும் இரக்கப்படவேண்டும் என்றும், அப்படிப்பட்டவருக்கு தொண்டு புரிவதே புண்ணியம் என்கிறது இந்து மதம். இவ்வுலகில் எவருக்கும் அவரவர் விரும்பியபடி வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை, அது ஒவ்வொருவருக்கும் அவரவர் வினைப்படி வந்து அமைகிறது. அப்படி அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப துன்பங்கள் வருவதாகவும், அந்தத் துன்பங்களை எந்த நிலையிலும் அனுபவித்து இயற்கையாக இறக்கும் போது வந்த பாவவினை கரைந்து நிரந்திரமான நல்வாழ்க்கை அமைகிறது என்கிறது இந்துமதம்.ஒருவர் துக்கப்படுகையில் அவர் அந்த துக்கத்தைத் தாங்குமளவுக்கு இதமளிக்கும் உதவியை இரக்கத்தால் பிறர் செய்வது நல்லவினை என்றும் அப்படிச் செய்பவருக்கு நலம் தரும் என்கிறது இந்துக்களின்(நம்முடைய) தர்மம். அதுவே மனித நேயமென்கிறது.( மனிதனைப் படைத்தது கடவுள் என்றால் கடவுள் படைக்கையிலேயே எல்லோருக்கும் நல்ல சிந்தனையைத் தந்து படைத்து இருக்கலாம், சரி படைக்கும் போதுதான் தப்பு நடந்து விட்டது என்று வைதுக்கொள்வோம் மனிதன் தப்பு செய்கின்ற போது தடுத்து நிறுத்துவதை விட்டு வேடிக்கை பார்த்துக் இருந்து விட்டு, தப்பு நடந்து முடிந்தபின் தண்டனை கொடுப்பேன் என்று கடவுள் சொன்னால், இங்கே கடவுள் தத்துவத்திற்கும் , மனிதத்துவதிற்கும் வித்தியாசம் இல்லாமல் போகிறது. மனிதன் தான் சட்டம் என்ற சாட்டையால் நடந்த தப்புக்கு காரணகர்தாக்களை விட்டு விட்டு காரணத்தை தண்டிக்கிறான். எதுதப்பு எது சரின்னு உனக்கு உணர்த்தத்தான் எங்கள் கடவுள் உனக்கு அறிவை கொடுத்து இருக்கிறார் என்குறீர்களா, நடப்பதெல்லாம் விதிப்படி நடக்கிறது என்று நீங்கள் தான் சொல்குறீர்கள். அப்போ இங்கே தப்பு நான் செய்யவில்லை எனக்கான விதியை எழுதிய கடவுள் தப்பு செய்கிறார் என்று தானே பொருள். சரி இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரும் அவனே அதனால் அவனுக்கு அவனே தண்டனை கொடுத்துகொள்கிறான் என்குறீர்களா, அப்படியே வைதுக்கொள்வோம் ஆனால் தண்டனை அனுபவிக்கும் பொழுது கடவுளுக்கு வழித்தால் சரி ஆனால் இங்கே எனக்கு வழிக்கிறதே. சரி விடுங்கள் ரொம்ப ஆழமாக கடவுளைப்பற்றி ஆராய வேண்டாம்)

ஒருவர் அனுபவிக்க வேண்டிய துக்கம் வேறு எவராலும், எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிடக் கூடியதன்று என்று நம்புகிறது இந்து மதம். உயிர்கள் எல்லாம் ‘வாழ வேண்டும்’ என்ற வேட்கையில் உடலைத் தாங்க உலகில் வந்துள்ளன. வாழ வேண்டும் என்ற துடிப்பை உள்ளில் கொண்டே சுவாசிக்கின்றன, உணவு உண்ணுகின்றன, இனவிருத்தி செய்கின்றன, வளருகின்றன.அதனால் உடலில் வந்துள்ள எல்லா உயிருக்குமே உலகில் வாழ உரிமை இருக்கிறது, எதனுடைய வாழ்வையும் தடுக்கவோ, அழிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை என்றும், அப்படித் தடுப்பதும், அழிப்பதும் பாவம் என்றே பண்பும், நாகரிகமும் வகுத்துவைகப்பட்டுள்ளதாக இந்து மதம் கூறுகிறது.””கருணைக் கொலை செய்யப்பட்ட நபர், தன்னுடைய பாவ வினையைத் தீர்க்காமல் மறித்துக்கொள்வதால் அவர் அந்தத் துன்பத்திலிருந்து தப்பித்து விடுவதில்லை என்றும், அவர் அந்தப் பாவத்தின் முழு பலனையும் கரைக்கும் வரை அவர் பிறப்பெடுப்பார் என்றும் கூறுகிறது இந்து மதம். அதனாலேயே இறப்பிற்குப் பின்னால் பாவ புண்ணியம் தொடரும் என்றும் சொல்லிவைத்தது.


(பற்றித் தொடரும் மிருவினை பாவபுன்னியமுமே என்றார் பட்டினத்தார்).இங்கே நான் கொஞ்சம் முரண்படுகிறேன்.வேதனையுடன் உயிர் வாழ்வதைவிட நிம்மதியாக ஒருவனைச் சாகச் செய்து விடுவது மேல் என்பதே கருணைக்கொலையின் நோக்கம். ஒருவன் சகிக்க முடியாத துன்பத்தில் துடிப்பது, அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் துயரமே. (உதாரனமாக கோமா மற்றும் பக்கவாதத்தில் அவதிப்படுபவர்கள்).ஒருவர் கோமா நிலையில் இருக்கிறார் என்றால் அவருக்கு தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளமுடியாது , ஆனால் பக்கவாதத்தால் ஒருவர் அவதிப்படுகிறார் என்றால் அவருக்கு நோயின் கடுமை புரியும், வாய் பேச இயலாமலும், இயற்க்கை உபாதைகளைக் கழிக்கக் கூட இன்னொருவர் உதவியை இறக்கும் வரை நாட வேண்டி இருக்கிறது. அதனால் கோமாவில் ஒருவர் பலகாலமாக அவதிப்படுகிறார் என்றால் அவரைக் கேட்காமலும், அதே போல் பக்கவாதத்தில் பலகாலமாக அவதிப்படும் ஒருவர் தன்னால் மேலும் நோயில் அவதிப்பட முடியாது என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் ஞாயம் இருந்தால் அவர் விருப்பப்படி அவரை கருணைக் கொலை செய்வது பாவமாகதென்று நினைக்கிறேன்).(கோமாவில் இருப்பவர் எந்த நேரத்திலும் குணமடயமுடியும் அவரைக் கொள்வதற்கு நீங்கள் யார் என்று கேட்பது எனக்கு கேட்கிறது. நான் இன்றைக்கு இருக்கும் மனிதனின் அவசர வாழ்க்கையை மனதில் கொண்டு அப்படிச் சொன்னேன். மேலும் அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் உடன் இருந்து அவர் குணம் அடையும் வரை அல்லது அவர் இறக்கும் வரை பார்த்துக்கொள்வேன் என்று சொன்னால் நீங்கள் தான் அவரைப்பொருத்தவரை கடவுள். மனிதநேயம் உங்களிடம் மிச்சம் இருக்கிறது என்று தெரிகிறது)


( பவம் புன்னியம் என்பதெல்லம் அவரவர் மனசு சார்ந்த விசயங்கள். ஒருவருக்கு பாவமாக தெரிவது இன்னொருவருக்கு பாவமாகத்தெரியாது. மேலும் மனிதனை நெறிப்படுத்துவதற்காகவும், வாழ்க்கை முறையை சீர்படுத்துவதற்காகவும், வலுத்தவன் இளைத்தவனை வதைக்காமலும், இழிந்தவர்மேல் இரக்கம் கொள்ளச் செய்வதற்காகவும் பெரியோர்களால் சொல்லிவைக்கப்பட்டதே பாவ புண்ணியமென்று நினைக்கிறேன்)பதிவர்களே ஈழத்து பிரச்சினையில் குளிர்காயாதீர்கள்

இப்படி ஒரு தலைப்பை வைத்ததற்கு பதிவுலக நன்பர்கள் மண்ணிக்கவும்.

சிங்கப்பூர் பதிவர்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படி ஒருதலைப்பை வைத்தேன். ஈழத்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் தானே தவிர வேறு உள்நோக்கம் கிடையாது.

நன்பர் ஒருவர் கேட்டார்:

ஈழத்து மக்கள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் கட்டுறையாக, கவிதையாக பலவாறான செய்திகளை இனையத்தின் (டமிலிஸ்) வாயிலாக நீங்கள் எழுதுவதெல்லாம் எதற்கு?

உங்களுடைய பதிவு நிறைய வாக்குகள் வாங்கி பிரபலமான இடுகைகளின் பட்டியலில் இடம் பெறுவதற்கும், உங்களின் எழுத்துத் திறமைக்கும், சிந்தனைக்கும் மற்றவர் மத்தியில் என்ன மாதிரியான அங்கிகாரம் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவுமே நீங்கள் பரபரப்பான செய்திகளை எழுதுகிறீர்கள் என்றார்.

நான் சொன்னேன்:

அழுகைச்சத்தம் கேட்டாலொழிய இழவு வீடென்பது தெரியாது. பத்துப்பேர் சேர்ந்து சத்தம் போட்டாலொழிய பிரச்சினையின் தீவிரம் புரியாது. எங்களைப் போன்ற பத்துப்பேர் நாங்கள் அறிந்த செய்தியை மற்றவரின் மத்தியில் சென்றடைய வழிவகுக்குறோம். மேலும் எங்களால் எங்கள் அதங்கங்களை இங்கே தான் கொட்டித்தீர்க்க முடிகிறது என்றேன்.

அதற்கு அவர்: கிழித்தீர்கள். பதிவர்கள் நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஈழத்துப் பிரசினையை கையாலாமல் உங்களின் சொந்த தற்பெருமைக்காக அவர்களைப் பற்றி எழுதிவிட்டு இப்போது சப்பைக்கட்டு கட்டப்பார்க்குறீர்கள் . உண்மையில் உங்களுக்கு ஈழத்துப் பிரச்சினையில் அக்கரையில்லை. அதைப்பற்றி எழுதுவதன் மூலம் உங்களின் எழுத்துக்களால் பலரை வசீகரித்து அவர்களின் செல்வாக்கைப் பெறப்பார்க்குறீர்கள்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார இல்லையா, இறந்து போன மக்களின் எண்ணிக்கை எவ்வளவு, ஈழத்துப்பிரசினையில் இந்திய மத்திய மாநில அரசின் நிலைப்பாடு என்ன, ஊடகங்களின் ஒருபட்சமான செய்தி என்று இது போன்ற செய்திகளை பரப்புவதன் மூலம் நீங்கள் ஈழத்து மக்களுக்கு செய்வது என்ன?

ஒன்றுமில்லை.

மேலும் நீங்கள் ஒன்றும் போர்களத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்து எழுதவில்லையே, ஊடகங்களின் வாயிலாக தெரிந்ததைத்தானே எழுதுகிறீர்கள். தெரிந்ததை எழுதுவதால் என்ன பயன்?

உங்களை நான் கேட்பதெல்லாம் இதுதான்.

அவர்களுக்கு கடமையாற்ற உங்கள் கரங்கள் நீள வேண்டாம். அவர்கள் கண்ணீர் துடைக்க உங்கள் விரல்கள் நீட்டுங்கள்.

அங்கே குழந்தைகள் பாலுக்காகவும், பெரியவர்கள் ஆறுதலுக்காகவும், காயம்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காகவும் துடித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் செய்தித்தாளிலும், வானொளியிலும், இனையத்திலும், தொலைக்காட்சியிலும் வரும் ஈழத்து மக்களின் அவலங்கலைப் பார்த்து இன்றைக்கு எனக்கு சோறு கூட இறங்க மாட்டேங்குதுன்னு ஒரு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாள் பதிவிற்காக அதே ஊடகங்களின் வாயை பார்த்துகொண்டிருக்கிறீர்கள்.

சோறு கிடைத்தால் காக்கை தன் சுற்றத்தையே அழைத்துக் கொண்டு வருகிறது. ஒரு காக்கை இறந்துவிட்டல் இருநூறு காக்கைகள் சூழ்ந்து கொள்கின்றன. நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். ஆகையால் நன்பரே உங்களுடைய அடுத்த பதிவர் சந்திபிலாவது ஈழத்து மக்களின் துயரத்தை துடைக்கும் படியான திட்டங்களையோ அல்லது உதவிகளையோ கொண்டுவருவோம் என்று முடிவெடுங்கள் என்றார்.

அவர் விடைபெற்றுப் போகையில் ”மனிதன் வயிற்றுக்குப் பசி தெரியும் வரை மனத்துக்கு உறவு தெரிகிறது. அது அவன் குற்றமல்ல இயர்க்கையின் குற்றம். இயற்கை வயிற்றில் பசியை வைத்தது பசி தேவையைத் வைத்தது தேவை தன்னலத்தை வளர்த்தது தன்னலம் எல்லைகளை படைத்தது. எல்லை, உனர்ச்சிகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டது. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட உறவு, ஊரை கூடக்கருதாமல் வீட்டுக்குள் முடங்கி விட்டது. வீட்டிலிருந்து ஊருக்கும், ஊரிலிருந்து நாட்டுக்கும் உறவு தன் முழுக்கரங்களையும் எப்போது விரிக்கும் என்று முனுமுனுத்துக் கொண்டு போனது காதில் விழுந்தது”.

அவர் பேச்சிலிருந்து நான் எடுத்துக்கொண்டது, எழுதுவதால் ஈழத்துப் பிரச்சினை உலகைச் சென்றடையும் தான் இல்லையென்று சொல்லவில்லை. தற்பொழுது போர் முடிந்து விட்டது இனியும் எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமாக எதாவது நம் இனத்துக்கு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

சிங்கப்பூர் பதிவுலக நன்பர்களே நம் அடுத்த சந்திப்பை இப்பொழுதே கூட்டி ஆவன செய்வோம். வாருங்கள்.

யோசிப்போர் சங்கம் (வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

எனக்கு ஒரு சந்தேகம்...
நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.


அப்ப தவக்களைன்னா?-


நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்


:-)


வடி கட்டின கஞ்சத்தனம்
சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.


உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.
:-)

இன்றைய தத்துவம்
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா,


நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.-


தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

:-)
இன்றைய தத்துவம் 2
என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,


அதால,டிகிரி வாங்க முடியாது!!!

:-)

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்
யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர


நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு,


குளுரா இருந்தாலும் குளிக்கனும்.


அஞ்சு மணியாய்டும்..


அம்மா, அப்பா, அக்கா யாரையாவது


எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க.


டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.


ஆறு மணிக்கு கிளம்புங்க.


ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

:-)

குங்குமம்
குங்குமம் - இந்த வாரம்

சந்தனம் - அடுத்த வாரம்!!!

:-)

மொழி'பெயர்ப்பு'
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?தெரியலையா?!?!நான் பார்க்க நான் பார்க்க நான்உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

:-)

நாட்ட்ட்ட்டாமை....
பசுபதி : ஐயா...


நாட்டாமை : என்றா பசுபதி?


பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....


நாட்டாமை : அட என்றா??


பசுபதி : அதான் என்றோம்ல!!


நாட்டாமை : ?!?!

:-)

டப்பிங் படங்கள்
உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.


திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).


செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)


புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)


வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)


வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)

:-)

சர்தார்
ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?


சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.


ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!


சர்தார் : அட, சூப்பரா இருக்கே!


நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.


சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?


நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.


சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.

:-)
சர்வே
தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்"நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?"என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது.


அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.


7.53% - ஆம்.0% - இல்லை.92.47% -


நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல

:-)

சர்தார்
கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.


சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

:-)

சர்தார்
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?


சர்தார் : எனக்கு தெரியாது சார்.


ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?


சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

:-)

சர்தார்ஜி
பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?


கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

:-)

கரப்பான்
மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன.


அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது.


உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன. ஏன் தெரியுமா?........... ......... ......... ......... ......... ......... ......... .... ............ ......... ......... ......... ......ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

:-)

குறுக்கே
ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.


நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

:-)

இன்றைய தத்துவம் 3
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

:-)

இம்சை அரசன் 24ம் புலிகேசி
அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.


இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு..

:-)

இது யார் சொத்து?
போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?


சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.

கடவுளைக் காப்பாற்றுங்கள்

ஒருவனுக்கு திடீரென்று தலைவலி, உடனே மருத்துவமனைக்குப் போனார்.
மருத்துவரிடம் சொன்னார். அந்த மருத்துவர் இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச்சீட்டு எழுதினார்.


அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து,”இதை உடனே வாங்கி வா” என்றார். அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார். மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள், ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்கு தலைவலி இன்னும் அதிகமாயிற்று. மருத்துவர் பார்த்தார். உடனடியாக இன்னோரு மருந்தின் பெயரை எழுதினார்.

’இது கிடைத்தாலும் பரவாயில்லை’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார். அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால் வந்து சேரவில்லை.

படுத்திருந்தவரை தலைவலி பாடாகப் படுத்தியது. மருத்துவரும் தவித்துக் கொண்டிருகிறார். இந்தச் சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் எதோ கூச்சல் கேட்டது. அங்கே ஒரு சுழழ் வழி......

ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால் நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு. அங்கே இரண்டு பேர், ‘நான் தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் விளைவு- இருவருமே செல்ல முடியவில்லை.

இவர்கள் போடுகிர சத்தத்தை கேட்டு மருத்துவர் வெளியே ஓடிவந்து பார்க்கிறார். அதற்கான மருந்தை வைதிருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய ஆன்மிகம்!

மனிதகுலம்தான் அந்த நோயாளி. கடவுள் தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி...... இப்பொது கதையை தொடரலாம். மருத்துவர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருக்கும் இரண்டு மருந்தையும் வாங்கிக்கொண்டு உள்ளே ஓடுகிறார். ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத்தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!

இப்போது மருத்துவருக்கும் தலைவலி!
மதவாதிகளே!
தயவு செய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்
(எப்போதோ படித்தது)

இனி தமிழன் நாடோடிகளாக வாழப்பழகிகொள்ள வேண்டியது தான்

நடந்து முடிந்த இலங்கை vs விடுதலைப்புலிகள் போர் ஒன்றை வெளி நாடுகளில் வாழும் தமிழ் வம்சாவழியினருக்கு வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது.

அதாவது எந்த நாட்டில் வாழும் தழிழர்களுக்கும் எந்தப் பிரச்சினை என்றாலும் இந்திய ஏகாதிபத்தியம் கண்டுகொள்ளப்போவதில்லை மாறாக அந்த நாட்டு அரசுக்கு வேண்டிய இரானுவத்தையும் ஆயுதங்களையும் தந்து அவர்களின் வேலைப் பலுவையும் குறைத்து அந்த நாட்டின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றுக்கொள்ளும், ஏனெனில் தற்போது இந்தியாவை ஆழ்பவர் தமிழரும் அல்ல இந்தி்ய வம்சாவழியில் வந்தவரும் அல்ல.

தமிழ் நாட்டு மக்களும் தங்களுக்கு சுயமரியாதை, சூடு, சொரனை கிடையாது மேலும் எங்களுக்கு பணம் தரும் கட்சிக்கு விசுவாசிகளாய் இருப்போம் என்று நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்து விட்டார்கள்.


இலங்கை இராணுவம் தமிழக இராமேஸ்வர மீணவர்களை துப்பாக்கியால் சுட்டும், கைது செய்வதயும், படகுகளை தாக்குவதையும், மீணவர் வாழ்வாதார் உரிமைகளை நசுக்குவதையுமே கண்டுகொள்ளாத நிலையில் இந்திய மத்திய மாநில அரசுகள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை கண்டுகொள்ளும் என்பது ....................

தமிழன் இனி நாடோடிகளாக வாழப்பழகிகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்பதே நிதர்சனம்

இனப்படுகொலையில் அதரவு காட்டியதில் யாருக்கு முதலிடம்

எத்தனை கண்ணிப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டாலும், எத்தனை இளைஞர்களின் கழுத்து நெரிக்கப்பட்டாலும், குழந்தைகள் சொட்டுப்பாலுக்காக அழுது அழுது வயிறு காஞ்சு வரண்டு போனலும், எத்தனை பெரியவர்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் மருந்துக்காகவும் சிங்களவனை கையேந்தி நின்றாலும், ஒட்டு மொத்த ஈழத்து மக்களும் சொந்தங்களை கண்முன்னே இழந்து ஈனச்சுரத்தில் அழுதாலும்


மத்திய அரசை தட்டிக்கேட்கும் தகுதிகள் இருந்தும், காந்தியின் குரங்குகளைப்போல் கண், காது, வாய் போன்ற புலன்களை பொத்தி இருந்து தன்னுடைய அரசியல் ஆதாயமே முதன்மை என்று, உதவிக்காக் இவர் காள்களை கட்டி அழுத ஈழத்துக் குழந்தைகளை உதறிவிட்டு நாற்காலியின் காள்களை கட்டிக்கொண்ட முதல்வர் கருணாநிதி


(இந்த 86வது வயதிலும் முதல்வர் பதவியை வகிப்பது, குடும்ப அரசியலை காப்பது, மகனுக்கு முதல்வர் பதவியை தாரைவார்க்க துடிப்பது, தமிழர்களுக்கு எந்தப்பயனும் இல்லாமல் ஆட்சியை நடத்திக்கொண்டு தழிழ் காவலர் என்ற பட்டத்தை தக்கவைக்க நினைப்பது, தன்னுடைய இறப்பிற்குப் பின் பெருந்தலைவர்களின் சிலைகளுக்குப்பக்கத்தில் தனக்கும் ஒரு இடத்தைப் பிடிப்பது மற்றும் தமிழ் பாடப்புத்தத்தில் தமிழ் காவலர் ஐயா மு.கருணாநிதி என்று அடுத்த சந்ததியினரை படிக்க வைப்பத்துமே இப்போதைக்கு இவருடைய தலையாய நோக்கங்களாக உள்ளன)


தேர்தலுக்கு முன்பு வரை தமிழ் ஈழம் என்ற ஒன்றே இல்லை என்று சொல்லிவந்த ஜெயலலிதா பிறகு அரசியல் லாபநோக்கக்கணக்குப் பார்த்து ஈழத்துப் பிரச்சினையை கையில் எடுத்த இந்த அம்மையார்

ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது என்று தெரிந்தும், இந்தத் பாரளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதால் தான் அதிமுக ஓட்டுக்களைத்தான் பிரிக்கப்போகிறோம், அப்படிப்பிரிப்பதனால் ஈழத்துப்பிரச்சினையில் அம்மாவை நம்பிக்கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடப்போகிறோம் என்று தெரிந்தும் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை பரிசித்துப்பார்க்க நினைத்த விஜயகாந்த்

வைகோ, மருத்துவர், திருமா போன்றோர்கள் உண்மையில் ஈழத்து மக்களின் பிரச்சினயில் அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால், ஈழத்துப் மக்களை கண்டுகொள்ளாத கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டு தாங்கள் ஈழத்து மக்களின் பங்காளிகள் என்று நிரூபித்திருக்கலாம் அதை விட்டு ஈழத்து மக்களை கண்டு கொள்ளாத மற்றும் ஈழத்து பிரச்சினையில் ஆதயம் தேடும் இரு மாபெரும் கட்சியிலேயே இருந்து கொண்டு சந்தர்ப்ப அரசியல் நடத்திக்கொண்டு ஈழத்து மக்களுக்கு குரல் குடுக்குறோம் என்று சொல்வது நகைப்புக்கு இடமளிக்கிறது.( இவர்களின் வீர வசனமெல்லாம் அரவானிகள் பிள்ளை பெற்று காட்டுகிறோம் என்று சவால் விடுவதற்குச்சமம்)

ஓட்டுப் பிச்சை கேட்டு கையேந்தும் சந்தர்ப்ப அரசியல் வாதிகள் ஒரு பக்கம், தங்களின் வாழ்வாதார உரிமைகளில் உதவுமாறு கையேந்தும் உடன் பிறப்பு மறுபக்கம் இதில் எந்த யாசகன் தனக்கு எவ்வளவு தருவான் என்று மனசாட்சியை தொலைத்துவிட்டு (எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும்…………………..அஞ்சு பணம் என்று இருந்து) தன் இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சர்வாதிகார அரசுக்கு, போரிலே என் சகோதரனின் தாய், தந்தை, குழந்தைகளின் நெஞ்சிலே உங்களுடைய கத்தி குத்திக் குத்தி கூர் மழுங்கிவிட்டால் மாற்றுக்கத்தியை தீட்டிதருகிறோம் என்று காத்துக்கொண்டு இருந்த அரசின் 50க்கும் 100க்கும் தன் வாக்குகளை தந்து அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தி ஈழத்து மக்களின் வேதனையில் வேலைப்பாச்சிய (ஓட்டுரிமையை விற்று பிழைப்பு நடத்தும்) தமிழக மக்கள்

இதில் யாருக்கு முதல் இடம் கொடுப்பது?

இதை கொஞ்சம் பாருங்கள்

மேலே இருக்கும் சுவரொட்டியை பார்க்கும் போது
நெஞ்சு பொருக்கு திலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
இதை நினைந்து நினைதிடினும் வெறுக்குதிலையே?


என்ற பரதியின் பாடல் தான் ஞாபத்துக்கு வருது

நாடு எப்படி பட்ட நிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறது என்ற பயமும் கவலையும் தான் வருகிறது

விதியா? மதியா?

ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?

"ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது. விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு.

மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு. சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம். குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும். எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்
இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.
புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.


சாவு நெருங்கி வரும் போதும் - தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?

பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும்.

தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும்.

நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

நோய் அறிகுறிகள்

* இடைவிடாத காய்ச்சல்

* மூக்கில் நீர்வடிதல்

* தொண்டையில் வலி

* வயிற்று போக்கு

* மயக்கம்

* பசியின்மை

* சளி தொல்லை

* சாப்பாடு மீது வெறுப்பு

* வாந்தி எடுத்தல்