கலாச்சார சீரழிவுக்கு துனை போகும் துறைகள்

இன்றைய உலகில் சினிமா மக்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கு துறையாக, நல்ல செய்திகளை கொண்டுசெல்லும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது. அதே சமயத்தில் சில மோசமான வழிகாட்டுதலையும் அது உண்டாக்காமல் இல்லை.

இந்திய சினிமா பெண்களின் ஆடை விசயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்ததன் மூலமாக இந்திய பாரம்பரிய கலாச்சார சீரழிவுக்கு காரணமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆரம்பகால சினிமாக்களில் பெண்கள் ஆபாசமாக நடிக்கவில்லை, சினிமா மோகம் மக்களிடம் வளர வளர
சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தது, நடிகைகள் பணத்துக்காக ஆபாசமாக நடிக்க ஆரம்பித்தனர். பின்னர் நடிகையாவதற்கு அதுவே தகுதியாக சினிமாக்காரர்கள் கொண்டுவந்துவிட்டனர்.

பனத்துக்காக நடிகைகள் அப்படி நடித்தார்கள் என்று சொன்னால் அது ஓர் அளவுக்கே உண்மை, ஏனெனில் இன்றைக்கு நடிக்கும் நடிகைகளுக்கு பணம் ஒரு பொருட்டல்ல காரணம் அவர்கள் நன்கு படித்த, வசதிபடைத்த மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு பணத்தை விட பேர், புகழின் மீது ஒரு ஏக்கம். அதை அடைவதற்கு இவர்கள் ஆபாசமாக நடிப்பதற்குமேலே ஒரு படி சென்று ஆடையே இல்லாமல் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். (உ.த மல்லிகா ஷெராவத் படம் ; மித்)


சினிமாவை வளர்ப்பதற்கு ஊடகங்கள் தேவை, ஊடகங்களின் வருமானத்திற்கு சினிமா தேவை. ஆக இந்த இரண்டும் பின்னிப் பினைந்து ஜடை போட்டுக்கொண்ட தொழிற்களாகிவிட்டன. அதனால் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகங்கள் தட்டிக்கேட்காமல் விட்டதோடில்லாமல் நடிகைகளின் ஆபாசப்படங்களையும் அவர்களை பற்றிய உப்புக்கு பிரயோசனம் இல்லாத செய்திகளை வெளியிட்டும் தன் வியாபாரத்தை பெருக்கிக்கொண்டது.


மேலும், இவர்கள் செய்யும் கூத்துக்களை பாராட்டியும் கவுரவிக்கும் விதமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கைகள் இவர்களுக்கு பட்டங்களையும், உச்ச பச்ச மரியாதையையும் தந்து இவர்களின் இழி செயல்களை ஞாயப்படுதுகின்றன.



என்றைக்கு இந்தியப் பெண்கள் உலக அழகிப்பட்டம் வாங்கிவந்தார்களோ அன்றிலிருந்து மாடெலிங் துறை மற்றும் பேசன் டிசைனிங் துறையின் வளர்ச்சியின் வேகம் உச்சத்தை தொட ஆரம்பித்துவிட்டது.

அறிவுடைய, நன்கு படித்த வசதிகொண்ட மேல் வர்கத்துப்பெண்கள் அறைகுறை ஆடையில் சினிமாவிலும், அரைநிமிடம் வந்து போகும் விளம்பரப்படங்களிலும் வருவதுமட்டும் அல்லாமல், பொது நிகழ்சிகளிலும் அத்தகைய ஆடைகளில் வருவதை பார்க்கும் சாதாரன கீழ்தட்டு குடும்பத்துப் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படி ஆடை அணிவது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைக்கின்றன.

படித்தவர்கள் நல்ல வழிக்கட்டியாய் இல்லமல் போனதன் விளைவே இன்றைக்கு தெருக்களில் கூட நம் பெண்கள் துனிந்து ஆபாசமாக ஆடைஅனிந்து வருவதை பார்க்கமுடிகிறது.

ஆக மாடெலிங் மற்றும் பேசன் டிசைனிங் துறைகள் கவர்ச்சி கண்ணிகளின் விளைநிலமாக விளங்குகின்றன. சினிமா விளைச்சளுக்கு நீர் பாய்ச்சி அறுவடை செய்கிறது. ஊடகங்கள் இவர்களை சந்தைப்படுத்துவதற்கு துனை போகின்றன.






(எங்கே செல்லும் இந்தப் பாதை.)