கலாச்சார சீரழிவுக்கு துனை போகும் துறைகள்

இன்றைய உலகில் சினிமா மக்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கு துறையாக, நல்ல செய்திகளை கொண்டுசெல்லும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது. அதே சமயத்தில் சில மோசமான வழிகாட்டுதலையும் அது உண்டாக்காமல் இல்லை.

இந்திய சினிமா பெண்களின் ஆடை விசயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்ததன் மூலமாக இந்திய பாரம்பரிய கலாச்சார சீரழிவுக்கு காரணமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆரம்பகால சினிமாக்களில் பெண்கள் ஆபாசமாக நடிக்கவில்லை, சினிமா மோகம் மக்களிடம் வளர வளர
சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தது, நடிகைகள் பணத்துக்காக ஆபாசமாக நடிக்க ஆரம்பித்தனர். பின்னர் நடிகையாவதற்கு அதுவே தகுதியாக சினிமாக்காரர்கள் கொண்டுவந்துவிட்டனர்.

பனத்துக்காக நடிகைகள் அப்படி நடித்தார்கள் என்று சொன்னால் அது ஓர் அளவுக்கே உண்மை, ஏனெனில் இன்றைக்கு நடிக்கும் நடிகைகளுக்கு பணம் ஒரு பொருட்டல்ல காரணம் அவர்கள் நன்கு படித்த, வசதிபடைத்த மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு பணத்தை விட பேர், புகழின் மீது ஒரு ஏக்கம். அதை அடைவதற்கு இவர்கள் ஆபாசமாக நடிப்பதற்குமேலே ஒரு படி சென்று ஆடையே இல்லாமல் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். (உ.த மல்லிகா ஷெராவத் படம் ; மித்)


சினிமாவை வளர்ப்பதற்கு ஊடகங்கள் தேவை, ஊடகங்களின் வருமானத்திற்கு சினிமா தேவை. ஆக இந்த இரண்டும் பின்னிப் பினைந்து ஜடை போட்டுக்கொண்ட தொழிற்களாகிவிட்டன. அதனால் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகங்கள் தட்டிக்கேட்காமல் விட்டதோடில்லாமல் நடிகைகளின் ஆபாசப்படங்களையும் அவர்களை பற்றிய உப்புக்கு பிரயோசனம் இல்லாத செய்திகளை வெளியிட்டும் தன் வியாபாரத்தை பெருக்கிக்கொண்டது.


மேலும், இவர்கள் செய்யும் கூத்துக்களை பாராட்டியும் கவுரவிக்கும் விதமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கைகள் இவர்களுக்கு பட்டங்களையும், உச்ச பச்ச மரியாதையையும் தந்து இவர்களின் இழி செயல்களை ஞாயப்படுதுகின்றன.என்றைக்கு இந்தியப் பெண்கள் உலக அழகிப்பட்டம் வாங்கிவந்தார்களோ அன்றிலிருந்து மாடெலிங் துறை மற்றும் பேசன் டிசைனிங் துறையின் வளர்ச்சியின் வேகம் உச்சத்தை தொட ஆரம்பித்துவிட்டது.

அறிவுடைய, நன்கு படித்த வசதிகொண்ட மேல் வர்கத்துப்பெண்கள் அறைகுறை ஆடையில் சினிமாவிலும், அரைநிமிடம் வந்து போகும் விளம்பரப்படங்களிலும் வருவதுமட்டும் அல்லாமல், பொது நிகழ்சிகளிலும் அத்தகைய ஆடைகளில் வருவதை பார்க்கும் சாதாரன கீழ்தட்டு குடும்பத்துப் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படி ஆடை அணிவது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைக்கின்றன.

படித்தவர்கள் நல்ல வழிக்கட்டியாய் இல்லமல் போனதன் விளைவே இன்றைக்கு தெருக்களில் கூட நம் பெண்கள் துனிந்து ஆபாசமாக ஆடைஅனிந்து வருவதை பார்க்கமுடிகிறது.

ஆக மாடெலிங் மற்றும் பேசன் டிசைனிங் துறைகள் கவர்ச்சி கண்ணிகளின் விளைநிலமாக விளங்குகின்றன. சினிமா விளைச்சளுக்கு நீர் பாய்ச்சி அறுவடை செய்கிறது. ஊடகங்கள் இவர்களை சந்தைப்படுத்துவதற்கு துனை போகின்றன.


(எங்கே செல்லும் இந்தப் பாதை.)9 comments:

கோவி.கண்ணன் said...

குற்றச் சாட்டு ஞாயமானது என்றாலும் குற்றச் சாட்டப்பட வேண்டியது இயக்குனர்களையும், நடிகர்களையும் தான், கிழ நடிகர்கள் கூட தங்களது மார்கெட் நடிகைகளின் "மார்கட்டு" டன் தொடர்ப்பு படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு இயக்குனரும், நடிகரும் கேட்காவிட்டால், வற்புறுத்தல் இல்லாவிட்டால் எந்த ஒரு நடிகையும் (ஆடை)'இறங்கி' நடிக்கமாட்டாள்

வேடிக்கை மனிதன் said...

//கோவி.கண்ணன் said...
குற்றச் சாட்டு ஞாயமானது என்றாலும் குற்றச் சாட்டப்பட வேண்டியது இயக்குனர்களையும், நடிகர்களையும் தான், கிழ நடிகர்கள் கூட தங்களது மார்கெட் நடிகைகளின் "மார்கட்டு" டன் தொடர்ப்பு படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு இயக்குனரும், நடிகரும் கேட்காவிட்டால், வற்புறுத்தல் இல்லாவிட்டால் எந்த ஒரு நடிகையும் (ஆடை)'இறங்கி' நடிக்கமாட்டாள்//

பெரும்பாலான நடிகைகள் மாடெலிங் துறைகளிலிருந்து வருவதனாலே இயக்குனர்களுக்கு அவர்கள் எப்படிப்பட்ட ஆடை குறைப்பிற்கும் மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் வருவது உண்மை தான்.

இருந்தாலும் இயக்குநர்கள், மற்றும் நடிகர்கள் குற்றம் சாட்டப்படவேண்டியவர்களே

முதன் முறையாக வருகை தந்திருக்கும் கோவி அண்ணனுக்கு நன்றி

SUREஷ் (பழனியிலிருந்து) said...

துணை போகிறார்கள் என்பது அபாண்டமான குற்றச் சாட்டு. கலாச்சாரம் எது என்று நிர்ணயிப்பதே அவர்கள் தான்.

அவர்கள் த்ரும் கலாச்சாரத்தை ஜீரணிக்க முடியாதவர்கள் இப்படி புலம்புகிறார்கள்

கடைக்குட்டி said...

இதுல பொலம்புறதுக்கு என்ன இருக்கு ????

புடிச்சா பாருங்க..
புடிக்காட்டி பாக்காதீங்க...
அவ்ளோதான்.


குழந்தைங்க சீரழிஞ்சு போயிடுவாஙக்ன்றதுலாம் சும்மா....

“வளக்குறதுதான் நம்ம கைல இருக்கு.
வளர்ரது அவங்க கைல இருக்கு”

கலாச்சாரத்துக்கெல்லாம் ஒன்னும் வராதுங்க..

வேடிக்கை மனிதன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
துணை போகிறார்கள் என்பது அபாண்டமான குற்றச் சாட்டு. கலாச்சாரம் எது என்று நிர்ணயிப்பதே அவர்கள் தான்.

அவர்கள் த்ரும் கலாச்சாரத்தை ஜீரணிக்க முடியாதவர்கள் இப்படி புலம்புகிறார்கள்//

//கடைக்குட்டி said...
இதுல பொலம்புறதுக்கு என்ன இருக்கு ????

புடிச்சா பாருங்க..
புடிக்காட்டி பாக்காதீங்க...
அவ்ளோதான்.//

யாரோ அப்படி ஆடை அணிகிறார்கள், யாரோ பின் பற்றுகிறார்கள் என்பதால் தான் உங்களுக்கு இந்த மனப்போக்கு என்று நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி சுரேஸ் அவர்களே,
கடைக்குட்டி சார் என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்

Joe said...

கலாச்சாரம் என்பதில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. அது ஓடும் நதி போல காலத்துக்கு ஏற்ப மாறக் கூடியது.

நம்மவர்களின் கோட்பாடுகள் பல பிரிட்டிஷ் ஆட்களின் விக்டோரியன் புரிடன் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை.

அதற்கு முன்னர் நமது கலாச்சாரம் வேறு மாதிரி இருந்திருக்கும்.

உங்கள் குழந்தைகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம், இந்த உடையை அணி, இதை அணியாதே என்று. அவர்கள் கேட்பார்களா என்பது வேறு விஷயம். மற்றவர்களை நாம் கட்டுப்படுத்த முடியாது.

ஒரு வகையில் ஆவி, குமுதம் போடும் இரட்டை வேடம் உங்கள் பதிவிலும் தெரிகிறது. ஆபாசம் என்று சொல்லி விட்டு, அதே ஆபாசப் படங்களை வெளியிடுவது ஏன்?

வேடிக்கை மனிதன் said...

//ஒரு வகையில் ஆவி, குமுதம் போடும் இரட்டை வேடம் உங்கள் பதிவிலும் தெரிகிறது. ஆபாசம் எனறு சொல்லி விட்டு, அதே ஆபாசப் படங்களை வெளியிடுவது ஏன்?//

பதிவில் ஆபாசப் படங்கள் வெறும் உதாரணங்களே.

பதிவை பிரபலியமாக்குவதற்காகதான் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் இன்னும் வேறு படங்களை தேர்வு செய்து இருக்கலாம்.

நான் என்பதிவில் பழைய கலாச்சார ஆடைகளைத்தான் பெண்கள் அணிய வேண்டும் என்று குறிப்பிடவில்லை.
மற்றவர் கண்ணை உருத்தும் விதமாக, ஆண்களின் காமத்தை தூண்டும் விதமாக அங்கங்கள் தெரியும்படி அணியவேண்டாம் என்று சொல்லவந்தேன்.

Joe said...

நீங்கள் படங்களைப் போடாமல் இருந்திருந்தாலும் இதே கருத்தை தான் சொல்லியிருப்பேன்.

பிரச்சினைக்கு முக்கிய காரணம் நம் நாட்டில் இருக்கும் பாலியல் வறுமை.

எத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் பெண்களை அடிமைப்படுத்தவதே நம் ஆண்களின் வேலையாக இருக்கிறது.

வேறொரு சமயம் டைகர் பீருடன் உக்காந்து பேசுவோம்.

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html