ஆரம்பம் முடிவாக




(வார்த்தை கடனாக
பெற விருப்பமில்லை
மூளை செலவு செய்ததில்
கிடைத்த துளிகள் கொண்டு
ஒரு கோப்பை நிறைக்க
முயற்சிக்கிறேன்)


அதுவரை
அவளிடம் நானும்
என்னிடம் அவளும்
பழகியதில்லை



அவளை
அறிந்து கொள்ள
முயன்ற போதெல்லாம்
என்னை அறிந்தவள்
போல் இருந்தாள்



அவளிடம் பேச
முயன்ற போதெல்லாம்
அவள் என்னிடம்
பேசிவிட்டதுபோல்
இருந்தால்



நான் ஆரம்பிப்பது
போலதோன்ற
அவள்
முடிந்தது போல
இருந்தாள்
அருகருகே இருக்கிறாம்
ஆரம்பம் முடிவாக

1 comments:

அப்பாவி முரு said...

//அவளை
அறிந்து கொள்ள
முயன்ற போதெல்லாம்
என்னை அறிந்தவள்
போல் இருந்தாள்//

பசங்களுக்கெல்லாம் அப்பிடித்தான் தோணுது. ஆனா, பொண்ணுகளுக்கு என்ன தோணுமோ?