தண்ணீர்ப்பாலம் ஒரு ஆச்சர்யம்

(மழை பெய்யும் போது அந்த மழைநீருடன் சேர்ந்து ஆகாயத்திலிருந்து மீன்களும் வந்து விழுகின்றனவே இது எப்படி சாத்தியம்? இது உண்மையா?)
இது உண்மை தான். இந்த அதிசயத்தின் பின்னால் பெரிய அறிவியல் விளக்கமே அடங்கியிருக்கிறது.


கடல், ஏரிகள் போன்றவற்றில் இருந்து சில சமயங்களில் தண்ணீர் பீறிட்டு மெகா தூண்கள் போல மேலெழுகின்றன. வானத்தை எட்டும் அளவிற்கு போகிறது இந்த `நீர்த்தாரை`(water spout). கடற்கரையோர கிராமங்களில் இருப்பவர்கள் இதனைப்பார்த்து `வானம் தண்ணீர் குடிக்கிறது` என்பார்கள்.இந்த நீருடன் அள்ளப்பட்டுச் செல்லும் மீன்கள், வேறு நீர்வாழ் உயிரினங்கள் தான், உடனடியாக வேறொரிடத்தில் மழையின் போது பொத்பொத்தென்று விழுகின்றன.இந்த நீர்த்தாரை ஏற்படுவதற்குக் காரணம் சுழல் காற்று (TORANDO) ஆகும்.


சமுத்திர மேற்பரப்பு சூரியப் பார்வையினால் சூடேற சூடேற மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள காற்றுப்படலம் சூடாகி, விரிவடைந்து பாரம் குறைந்து மேலெழும். அப்போது மேலெ உள்ள எடை அதிகமான காற்று கீழே வந்து சூடாகி மேலெழ.... இப்படி மாறி மாறி சுழற்றியபடி காற்றோட்டம் ஒன்று நிகழும். இந்தச் சுழற்காற்றின் பலம் அதிகம்.


1986 ஆம் ஆண்டு சீனாவைத்தாக்கிய சுழற்காற்று, தெருவில் நடந்து போய்க்
கொண்டிருந்த 13 பள்ளிச் சிருவர்களை த் தூக்கிச்சென்று, வலுவிழந்ததும் 19கிலோ மீட்டர்களுக்கப்பால் பத்திரமாகத் தரையிறக்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


இந்தச் சுழற்சியின் போது மேலே ஈர்க்கப்படும் காற்றில் உள்ள நீராவி ஒடுங்கி மழை முகிலாகும். நீராவி ஒடுங்குவதால் முகில்களுக்கு இடையே சடுதியில் ஒரு வெற்றிடம் தோன்றும், இந்த வெற்றிடமுள்ள மேகங்களை நோக்கி கடல், ஏரிகளிலிருந்து நீ இழுக்கப்பட நீர்த்தாரை ஏற்படுகிறது.


எப்படி இருக்கிறது வானத்துக்கும் கடலுக்கும் இடையே போடப்படும் தண்ணீர்ப்பாலம்?.














0 comments: