தமிழீழம் அது தனியீழம்

தமிழீழம் அது தனியீழம்

தற்போதைய இந்திய நாட்டிற்கு தெற்கே ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு,ஏழ்குணகரை நாடு, ஈழ நாடு, ஏழ் குறும்பனை நாடு, குமரிக்கொல்லம் போன்று இருந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகளில் கடல் கோள்களால் மூழ்கியவை போக எஞ்சியிருப்பது, தமிழர் என்ற ஆதிகுடிகள் வாழ்ந்த ஈழ நாடு.ஈழத்தில் வாழும் தமிழர்கள் குடியேறிகள் அல்ல! மண்ணின் மைந்தர்கள்! தோட்டத் தொழிலாளர்களைத் தவிரஇலங்கை என்று சொல்லப்படும் ஈழ நாடு முழுவதுமே தமிழர்கள் நாடு.

இலங்கையை ஆண்ட இராவணன் தமிழனே.கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த விசயன் என்ற ஆரிய மன்னன் இலங்கை சென்று நிறுவித்த வம்சமே சிங்கள இனம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இலங்கை வரலாறான மகாவம்சமும் அதைத்தான் கூறுகிறது.இந்தியாவைச் சேர்ந்த இராமனால் தமிழர் அரசன் இராவணனுக்கு இன்னல்!இந்தியாவைச் சேர்ந்த விசயன் தோற்றுவித்த சிங்களவம்சத்தால் தமிழருக்கு இன்னல்!கி.பி 1987ல் இந்தியா அனுப்பிய அமைதிப்படையால் தமிழருக்கு இன்னல்!விசயனால் உருவாகிய சிங்களவ அரசும், மண்ணின் மைந்தர்களாகிய தமிழரின் அரசும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டது வரலாறு.ஒன்றல்ல இரண்டல்ல! ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாக சிங்களர் தமிழர் போர்கள்

நிகழ்ந்துள்ளன.ஈழத்தமிழருக்கு ஆபத்தென்ற போதெல்லாம், ஈழ நாட்டில் தமிழ் ஆட்சிக்கு ஆபத்து வந்த போதெல்லாம்தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய பல்லவ சோழ அரசர்கள் படை நடத்தி சிங்களர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள் என்பதுவும் வரலாறு.கரிகாலன், இராசராசன், குலோத்துங்கன், பாண்டியர்கள், காஞ்சிப்பல்லவர்கள் என்று அனைத்து தமிழருமே ஈழத்தில் தமிழருக்கு இடுக்கண் வந்தபோதெல்லாம் சிங்களரை ஒடுக்கி வைக்க கடல் கடந்து சென்றுள்ளார்கள்.

ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.சிங்களர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள இனவெறி ஏதோ பிரபாகரன் காலத்தது அல்ல. பல நூறாண்டுகள் சேர்ந்ததை ஈராயிரம் ஆண்டுகள் பழையது.சிங்களர்கள் தமிழரை சூறையாடுவது 10, 20 ஆண்டு நிகழ்ச்சி அல்ல; பல நூறாண்டு இன வெறி!சிங்களரை அடக்கிய கரிகாலன் போர்க் கைதிகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து காவிரியின் இரு மருங்கும் கரையெடுத்ததுவும் கல்லணை கட்டியதும் வரலாறு!

தீராப்பகையை கொண்டுள்ள சிங்களர்கள் தொடர்ந்து தமிழருக்கு இன்னல் விளைவித்தே வந்திருக்கிறார்கள்!கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் அரசின் மன்னனான சங்கிலி என்பவனை போர்த்துகீசியர் கொன்ற பின்னர் இதுவரை தமிழர் ஆட்சி நடந்ததில்லை ஈழத்தில்.1947ல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்து சென்றதில் இருந்து தமிழ், சிங்கள பகுதிகள் இணைந்த இலங்கையில் சிங்களர் ஆட்சியே நடைபெற்று வருகிறது.ஆனால் சிறுபான்மையினரான தமிழரை சிங்கள அரசு இரண்டாம் குடிகளாகவே நடத்திவருகிறது.

இன்று எக்காளமிட்டு தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுகளின் சட்டப்படி, ஒருங்கிணைந்த இலங்கையில் ஒரு தமிழன் நாட்டின் அதிபராக வர முடியாது! ஏனென்றால் சட்டத்தில் இடமில்லை!ஏனென்றால் சிங்களருக்கு மனமில்லை!இன்று சந்திரிகா அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு வேண்டுமானால் பிரபாகரன் முதல் அமைச்சராக இருக்கட்டும் என்று சொல்கிறார்! நகைச்சுவையாய்த் தெரிகிறது! வேண்டுமானால் இலங்கையின் அதிபராக இருக்கட்டும் என்று சொல்லட்டுமே!பிரபாகரன் வேண்டாம்! வேறு எந்த தமிழரையாவது ஆக்கட்டுமே ? முடியாது! காரணம் சட்டத்தில் இடமில்லை! அதை மாற்றவும் முடியாது!

பயிர்செய்து, அறம் செய்து, தொழில் செய்து இலங்கையை ஆக்கிவைத்த தமிழருக்கு சம உரிமை சட்டப்படி மறுக்கப் பட்டது.பள்ளிகளில், வேலைகளில் தமிழர்கள் இரண்டாம் நிலையில்தான் இருக்க முடியும், சட்டப்படி!காவல்துறையில், இராணுவத்தில் தமிழர் கிடையாது! அதுவும் சட்டப்படி!ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கூட இந்திய இராணுவத்தில், உயர்பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர்! "சர்" என்று பட்டமெல்லாம் பெற்றனர்!

ஆனால் இலங்கையில் மக்கள் தொகையில் 20-30 விழுக்காட்டிற்கும் மேலான தமிழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது!செல்வச் செழுமையுடன் வாழ்ந்த தமிழர் மேல் சிங்களர் ஆத்திரம் கொண்டு அவர்கள் இல்லத்தை, அவர்கள் பெண்டுகளை, அவர்கள் சொத்துக்களை சூறையாடுவது நாளாவட்டத்தில் சிங்களரின் பொழுது போக்காகிவிட்டது!எத்தனை பெண்கள் மானமிழந்தனர்! எத்தனை ஆண்கள் மாண்டு மடிந்தனர்!

எத்தனை தமிழர்கள் நாட்டை விட்டே வெளியேறினர்! கணக்கிலடங்கா!உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் திசைகளே அதற்கு சான்று!சூறையாடல் நிகழ்ச்சிகளின் போது கொதிக்கும் தார்ச்சட்டிகளில் போட்டு தமிழ்க் குழந்தைகளைக் கொன்ற கொடூரம் ஆயிரமாண்டு காழ்ப்புணர்ச்சியின் உச்சம்!தமிழ்பெண்களைக் கற்பழித்துவிட்டு அவர்களின் அல்குல்லில் குண்டு வைத்து வெடித்த கொடூரம் ஒன்றல்ல இரண்டல்ல!சிங்கள இராணுவமும், சிங்களக் குண்டர்களும் சூறையாடி முடித்துவிட்டு "இங்கே தமிழர் கறியும் எலும்பும் இலவசமாக கிடைக்கும்" என்று எழுதிப் போட்டு தமிழர் தசையை கடை வைத்த கொடுமை உலகில் வேறெங்காவது நடந்திருக்கிறதா ?எழுதவே கைகள் நடுங்கும் செய்தியிது! இந்த அளவிற்கு தீராப் பகை கொண்ட சிங்களவருடன் தமிழர் இணைந்து வாழ முடியுமா ?

ஈராயிரம் ஆண்டுப் பகையுடன் சமாதானம் செய்து கொள்ள இயலுமா ?1940,50,60 களில் சிங்கள அரசுடன் சனநாயக முறையில் சம உரிமைக்காக குரலிட்டு அது நடக்கவே நடக்காது என்ற எண்ணம் தோன்றவே, தமிழ் மக்களிடம் சனநாயக முறையில் "தனிநாடு தேவையா இல்லையா ?" என்று வாக்கெடுப்பு நடத்தி கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு ஈழத் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற பின்னரே தமிழருக்கு தனி ஈழம் தேவை என்று, அதையும் அமைதிப் போராட்டங்களினால் பெற முன்வந்தனர் தமிழர்கள்.

ஆயினும் தொடர்ந்து நடந்த சிங்கள அட்டூழியங்களில் இருந்து காத்துக் கொள்ள தமிழரும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்படவே பல ஆயுதம் தாங்கிய குழுக்கள் தோன்றி தமிழ் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டன. அவைகளே விடுதலைப் போர்களையும் முன்னின்று நடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு செயல்படுத்து வந்தன! வருகின்றனர்!

தமிழருடன் சிங்களவர் கொண்டுள்ள பகையுணர்வு கடுமையாக இருக்க, தமிழர்களால் அவர்களுடன் இணைய முடியாமல் இருக்க, இந்தியாவில் வாழ்பவர்களில் ஒரு சிலரோ, தங்களின் காலகாலமான தமிழ் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, "இந்திய ஒருமைப்பாடு" என்ற போர்வையில் இந்தியாவிலிருந்து சென்று உருவாக்கி வளர்க்கப்பட்ட சிங்களருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்!இன்று தனி ஈழம் அமைந்தால் நாளை அது தனித் தமிழ்நாடு கோரிக்கையாக உருவாகும்;

அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்பதே இவர்கள் கூறுவது!ஆனால் "தமிழ் ஈழம்" தேவை என்பதின் அடிப்படையும் தனித்தமிழ்நாடு கோரிக்கை வந்தால் அதன் அடிப்படையும் ஒன்றாக இருக்கும் என்று கருதுவது பைத்தியக்காரத்தனம்! வடிகட்டிய முட்டாள்தனம்!

ஈழத்திலே தமிழர் ஒருவர் நாட்டின் அதிபராக வர முடியாது! ஆனால் இந்தியாவிலே அது நடக்கும்!ஈழத்திலே சிறுபான்மையினரான தமிழர், அதிபராக வர இயலாது! ஆனால் இந்தியாவிலே சிறுபான்மையினர் வரமுடியும்; வந்திருக்கிறார்கள்! இசுலாமியர் அதிபராக இருந்திருக்கிறார்!இந்தியாவிலே, குமரி முதல் இமயம் வரை அனைத்து குடிமகனுக்கும் சட்டம் ஒன்று! உரிமைகள் ஒன்று! அனைவரும் இந்தியரே! ஆனால் இலங்கையில் நிலை அதுவல்ல!இரண்டே இனங்கள் உள்ள நாடு இலங்கை! பல மொழி, இன, கலைகள் கொண்ட நாடு இந்தியா.தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்பட்டால் அதை வங்காளிகளோ அல்லது மராட்டியரோ வாழ்த்த முடியாது! வாழ்த்த மாட்டார்கள்!

ஒரிசாவின் வெள்ளத்துக்கும், குசராத்தின் பஞ்சத்துக்கும் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பங்களிக்கின்றன.பாகித்தான், சீனப் போர்களில் மட்டுமல்ல நேதா'சி அவர்களின் இந்தியப்படைகளிலும் இடம் பெற்றவர்கள் தமிழர்கள். நேதா'சி அவர்களின் இந்திய தேசியப் படையில் பங்கு கொண்ட மறவர்கள் எத்தனையோ பேர்! அப்படையின் தளபதியாக இருந்தவர் தமிழ்ப் பெண்மணி!

இந்தியாவின் எந்த இடத்திலும் வேலைசெய்ய மற்றும் உயர்பதவி வகிக்க தமிழர்களுக்கு உரிமை உண்டு!இன்று கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகளிடம் தமிழகம் கையேந்தி நிற்கலாம்! வருத்தமான விடயம்தான்! ஆயினும் தமிழர்கள் தங்கள் சரியான மதியுடன் இயங்கினால் சிக்கல் தீர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.தமிழர்களைக் கொல்வோம்! தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்போம்! தமிழர்களுக்கு மட்டும் இரண்டாம் குடியுரிமை என்ற நிலை இந்தியாவில் இல்லை!ஆனால் ஈழத்தில் உண்டு! சட்டப்படியும் உணர்வுப்படியும் உண்டு!15 மொழிகளை ஆட்சி மொழியாக்கல், நதிகளை இணைத்தல், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் போன்ற பல்வேறு ஒருமைப்பாட்டு செயல்களுக்கு இந்தியாவில் வாய்ப்பிருக்கிறது!

ஆகவே தனி ஈழத்தையும், இந்திய ஒருமைப்பாட்டையும் ஒப்பிடுபவர்கள் சுயநலக்காரர்கள்; அல்லது அறிவிலிகள்!தனி ஈழம் என்பது வேதனையிலிருந்தும் சோதனையிலிருந்தும் தமிழர் வெளியேற அமைய வேண்டியது! ஆதலின்தான் "தமிழ் ஈழம் அது தனி ஈழம்" என்ற கொள்கை நோக்கித் தமிழர்கள் ஓயாதுழைத்து வருகிறார்கள்.

ஒரு சில ஆண்டுகள் ஒவ்வாமை இருந்ததால் உருசிய நாடு 15 நாடுகளாகப் பிரிந்து கொண்ட போது, ஈராயிரம் ஆண்டாக சிங்களரின் பகைக்கு ஆளாகியுள்ள தமிழினம் தனியாகப் போவது நியாயமல்லவா ?அதன் குறுக்கே நிற்பவர் யாராக இருந்தாலும், அது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?

1 comments:

கடைக்குட்டி said...

//ஏனென்றால் சட்டத்தில் இடமில்லை..
ஏனென்றால் சிங்களர்க்கு மனமில்லை//

செரியா சொல்லி இருக்கீங்க தலைவா