எதிரியை உள்ளே அனுமதிக்காதீர்கள்

எதிரி என்ற சொல்லாடல் இங்கு நீண்ட நாட்களாகவே தவறான உபயோகத்தில் இருந்து வருகிறது.. யார் எதிரி, எது எதிரித்தனம் என்கிற குழப்பம் எல்லோருக்கும் இருக்கிறது.

ஓர் உண்மையான நண்பனை தெரிந்துகொள்வதற்குள் சில வருடங்கள் உருண்டுவிடுகின்றன. யாரை நம்புவது, நம்பக்கூடாது என்பதில் பல சந்தர்பங்களில் தடுமாற்றம், போராட்டம். நண்பனை அடையாளம் காண்பதில் இத்தனை சிக்கள் இருக்கும் போது, எதை அடிப்படையாக கொண்டு இவன் என் எதிரி என்று தீர்மானிப்பது.


எதிரிகளில் இரண்டு சாதி உண்டு. நமக்கு வெளியே இருந்து தொந்தரவு கொடுப்பவர்கள் ஒருவகை, இன்னொருவர் நமக்கு உள்ளே இருந்து தொந்தரவு கொடுப்பவர்கள். வெளியே இருக்கும் எதிரியை இனம் காணுதல் கடினம். உள்ளே இருக்கும் எதிரியை நாம் இனம் காணுதல் சுலபம்.

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததற்கான அடையாளம் நம் வெளியுலக எதிரிகள்.
வாழ்க்கையில் தோற்றதற்கானா அடையாளம் நமக்கு உள்ளே இருக்கும் எதிரிகள்.

வெளியே இருக்கும் எதிரி பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், உள்ளே இருக்கும் எதிரி பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்குள் இருக்கும் எதிரிகள் என்று சொன்னால், பொறாமை, தள்ளிப்போடுதல், ஒப்பீடு, சுய இரக்கம் இவைகள் தான்.

இவை எதுவும் எனக்கு இல்லை என்று ஒருவர் சொன்னால் அவர் சொக்கத்தங்கம். எனக்கு வெளியேயும் எதிரிகள் இல்லையென்று ஒருவர் சொன்னால் அதில் பெருமை கொள்வதில் அர்த்தம் இல்லை. கவனம்! நீங்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ஏனெனில் நீங்கள் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தகுதி, திறமை, அனுபவம், அறிவு இந்த நான்குக்கும் ஏற்றாற் போல, குறிக்கோள்கள் இருக்கும். நூறு ரூபாய் சம்பாதிக்கும் சராசரி தொழிலாளிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. ஆனால் மாதம் லகரம் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு கணவு பெரியதாக இருக்கும்.

குறைவான வாழ்க்கைத்தரத்தில் வாழ்பவர்கள், அடுத்த வேளை அல்லது அதிக பட்சமாக அடுத்த நாள்- இந்த வட்டத்தைத்தாண்டி கணவுகள் காண்பதில்லை. மரக்கட்டையைப்போல் மறத்துப் போனவர்கள் இவர்கள்.

இவர்கள் கணவு காண பயப்படுகிறவர்கள் அல்லது இவர்கள் இவர்களின் கணவின் மேல் நம்பிக்கை கொள்ளவதில்லை.
எதார்த்த வாழ்க்கைக்கு பழகிவிட்டவர்கள்.
கணவுகாணத் தெரியாததின் விளைவு, இலக்குகள் இருக்காது.

விளக்கு அனையும்வரை காற்றோடு போரடித்தான் ஆக வேண்டும். சங்கடங்களும் எதிர்பார்ப்புகளும் குறைந்து போனால், பிறகு எப்படி ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பது?

1)ஆக கணவு காணாமல், இலட்சியம் இல்லாமல் உங்களை எதார்த்தத்திலே வைத்திருக்கும் முதல் எதிரி நீங்கள் தான்..

2) உங்கள் முன்னால் முன்னேறிக்கொண்டிருக்கும் நண்பனை தொட்டுவிட ஆசை. முடியவில்லை, மேலும் அவரைத் தொடுவதற்கு முயற்சி செய்யாமல், மாறாக பொறாமை சுரக்குமேயானால், நீங்கள் உங்கள் இரண்டாவது எதிரியை உள்ளுக்குள்ளே அனுமதிக்கிறீற்கள். பொறாமை மனதில் தோன்றாதவரை நீங்கள் ஹீரோ. தோன்றிவிட்டால் உங்களைப் போன்ற ஒரு எதிரியை படைத்த கடவுளாலும் படைக்க முடியாது.
3) எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தள்ளிப்போடுதல் அலலது தாமதப்படுத்தும் பழக்கத்தை கொண்டிருந்தீர்களேயானால் உங்களின் சோம்பேறித்தனத்தின் மூலமாக உங்களது மூன்றாவது எதிரியை வளர்க்குறீர்கள்.

4) உங்களின் செயலுக்கு வெற்றி கிடைக்காமல் போகும் பட்சத்தில் அந்தத் தோல்விக்கான வழி வகைகளை ஆறாய்ந்து மேலும் துடிப்புடன் செயலாற்றாமல் சுய இரக்கம் கொண்டு, உங்களை நீங்களே ஆறுதல் படுத்திக்கொண்டீர்களேயானால் உங்களது நான்காவது எதிரியை சம்பாதித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

5) தன்முனைப்பு இல்லாமை, வெட்கப்படுதல் கூட தனிமனித முன்னேற்றதுக்கு தடைகற்கள் தான்.

இப்படிப்பட்ட எதிரிகளை அழிக்காமல் உங்களுக்குள்ளே வைத்திருப்பீர்களேயானால், நஞ்சை தனக்குள்ளே வைத்துக்கொண்டு சாகாத பாம்பைப் போல
நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் நீங்கள் எதிரியாகிவிடுவீர்கள்.

தோல்விகளை வெற்றிகளைப்போல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பழகுங்கள். தோல்விகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெற்றிகளை நெருங்கமுடியாது. நம் குறைகள் நமக்குத் தெரியாவிட்டால் பின்பு நம் குறைகளே நம் இயல்பாகிவிடும்.

நம் முன்னேற்றத்துக்கு தடைபோடும் எதிரிகளை களைவோம்.

3 comments:

அப்பாவி முரு said...

//நம் குறைகள் நமக்குத் தெரியாவிட்டால் பின்பு நம் குறைகளே நம் இயல்பாகிவிடும்.//

பழக்கமாகவே ஆயிடுத்து...

பித்தன் said...

//வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததற்கான அடையாளம் நம் வெளியுலக எதிரிகள்.
வாழ்க்கையில் தோற்றதற்கானா அடையாளம் நமக்கு உள்ளே இருக்கும் எதிரிகள்.//

-:)

நல்ல பதிவு

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html