வார்த்தைகளுக்காக காத்திருக்கும்
கவிஞனைப்போல,
இரவுக்காக காத்திருக்கும்
நிலவைப்போல,
காற்றுக்காக ஏங்கி நிற்கும்
இதயம்போல,
உன்னுடைய ஒரு ஹாய்
அல்லது ஒரு ஹலோவை
எதிற்பார்த்து விடியும் என்
உலகத்தை, எப்படி புரியவைப்பேன்
உனக்கு!
உன்னைப் பார்க்கும் நொடிகளில்
சுவாச இழுப்பிற்கு காற்று
சுலபமாவதும்,
பிரியும் நொடிகளில்
காற்று கெட்டிபடுவதும்
தவிர்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
இந்தக் கண்ணாடியில் முகம்
பார்த்தவர்கள் அணேகம்.
முகம் பதித்தவள்
எவரும் இல்லை!
முத்துக்கான வித்து எப்பொழுதும்
விழலாம் என்று வாய்திறந்து இருக்கும்
சிப்பி போல
தனக்கான ஒருத்தியை
ஒவ்வொரு முகத்திலும்
எதிர்பார்த்து நிற்கிறது
இந்தக் கண்ணாடி.
இதில் உன் பிம்பம் விழுந்து
உறைவதும், மறைவதும்
உன் கையில்.
அழுது நிற்கும் குழந்தையைப்போல
எனது வேதனையையும், விருப்பத்தையும்
சுமந்து வந்திருக்கும்
என் கடிதத்தை
அரவணைப்பதும்,
அவமதிப்பதும்
உன் பொறுப்பு
என்னவளே,
இப்பொழுது சொல்,
நான் உனக்கு,
வழிப்போக்கனா? இல்லை
உயிர் காவலனா?
கவிஞனைப்போல,
இரவுக்காக காத்திருக்கும்
நிலவைப்போல,
காற்றுக்காக ஏங்கி நிற்கும்
இதயம்போல,
உன்னுடைய ஒரு ஹாய்
அல்லது ஒரு ஹலோவை
எதிற்பார்த்து விடியும் என்
உலகத்தை, எப்படி புரியவைப்பேன்
உனக்கு!
உன்னைப் பார்க்கும் நொடிகளில்
சுவாச இழுப்பிற்கு காற்று
சுலபமாவதும்,
பிரியும் நொடிகளில்
காற்று கெட்டிபடுவதும்
தவிர்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
இந்தக் கண்ணாடியில் முகம்
பார்த்தவர்கள் அணேகம்.
முகம் பதித்தவள்
எவரும் இல்லை!
முத்துக்கான வித்து எப்பொழுதும்
விழலாம் என்று வாய்திறந்து இருக்கும்
சிப்பி போல
தனக்கான ஒருத்தியை
ஒவ்வொரு முகத்திலும்
எதிர்பார்த்து நிற்கிறது
இந்தக் கண்ணாடி.
இதில் உன் பிம்பம் விழுந்து
உறைவதும், மறைவதும்
உன் கையில்.
அழுது நிற்கும் குழந்தையைப்போல
எனது வேதனையையும், விருப்பத்தையும்
சுமந்து வந்திருக்கும்
என் கடிதத்தை
அரவணைப்பதும்,
அவமதிப்பதும்
உன் பொறுப்பு
என்னவளே,
இப்பொழுது சொல்,
நான் உனக்கு,
வழிப்போக்கனா? இல்லை
உயிர் காவலனா?
7 comments:
//
காற்று கெட்டிபடுவதும் சுலபமாவதும்
//
தலைப்பே அசத்தலா இருக்கு !!
//
வார்த்தைகளுக்காக காத்திருக்கும்
கவிஞனைப்போல,
இரவுக்காக காத்திருக்கும்
நிலவைப்போல,
காற்றுக்காக ஏங்கி நிற்கும்
இதயம்போல,
உன்னுடைய ஒரு ஹாய்
அல்லது ஒரு ஹலோவை
எதிற்பார்த்து விடியும் என்
உலகத்தை, எப்படி புரியவைப்பேன்
உனக்கு!
//
அருமையாக கோர்த்த முத்துக்கள்
கவிதை என்ற மாலையாக அமைந்துள்ளது!
வாழ்த்துக்கள் !!
//
உன்னைப் பார்க்கும் நொடிகளில்
சுவாச இழுப்பிற்கு காற்று
சுலபமாவதும்,
பிரியும் நொடிகளில்
காற்று கெட்டிபடுவதும்
தவிர்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
//
அழகு வெகு அழகு!!
//
என்னவளே,
இப்பொழுது சொல்,
நான் உனக்கு,
வழிப்போக்கனா? இல்லை
உயிர் காவலனா?
//
உயிர் காவலன் என்றுதான் சொல்லி இருப்பார்கள் இல்லையா ??
//
இடுகையிட்டது நான் தகுதியானவனா?
//
இந்த இடுகைக்கு நீங்க தகுதியானவர் தான் இதில் என்ன சந்தேகம்!!
ரம்யா அவர்களுக்கு
இதுபோன்ற அங்கீகாரங்கள்
வராமலிருந்த்தால் நான்
கவிதை எழுதுவதை நிறுத்தி இருப்பேன்
பாராட்டுக்களுக்கு நன்றி
பாராட்ட ஆளில்லை என்று நிறுத்தி விடாதீர்கள்..! அங்கீகாரம் எளிதல்ல.. தொடர்ந்து எழுதுங்கள்..
Post a Comment