தவறான கல்வி முறையே உலகின் பிரச்சினைகளுக்கு காரணம்

இன்றைய கல்வி ஒருவனை சிறந்த மருத்துவராக, அனுவிஞ்ஞானியாக, ஆறாய்ச்சியாளனாக பொருளாதார நிபுணராக, என்ஜினீயராகவோ மாற்றுகிறது .

ஆனால்-

இன்றைய கல்வி முறை எப்படி நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வது என்பதைப் பற்றி மனிதனுக்கு எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை.

’போதும்’ என்ற மனத்திருப்தியை உருவாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை. மிகவும் முக்கியமான, உலகம் முழுவதையும் தழுவிய சரியான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எதுவும் விளக்குவதில்லை. மிகப்பெரிய அளவில் அழிவை உருவாக்கி வரும் யுத்தங்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதைப் பற்றியும் சொல்லித்தருவதில்லை.

இன்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வரும் கல்வி ஒருவன் தன்னை எப்படி மிகப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொள்வது என்பதைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறது. போட்டி வெறியைவ் வளர்த்து மனிதனை மனிதனிடமிருந்து பிரித்து வருகிறது. ஏற்கனவே இருந்துவரும் பயங்கரமான ஆயுதங்களைவிட இன்னும் மிகப்பெரிய அளவில் நாசத்தை உருவாக்கும் ஆயுதங்கள எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறது.

கல்வியின் முக்கியமான நோக்கம் மனிதர்களிடையே மனித பண்புகளை வளர்ப்பதற்காக் இருக்க வேண்டும். உலகத்தில் இருந்து வரும் யுத்தங்கள், கலவரங்கள், அராஜகம் போன்ற உலகப்பிரச்சினைகளை முழுமையாக அகற்றி, அவைகள் மீண்டும் உருவாகதபடியான சூழ்நிலையை கல்வி உருவாக்க வேண்டும்.

உலக சாதனை, சுய முன்னேற்றம், திறமை என்று பலவிதமாகச் சொல்லி, நாம் நம்மிடம் இருந்துவரும் பேராசை, பதவி வெறி, ஆடம்பர வாழ்க்கை, போட்டி மனப்பான்மை போன்றவைகள் சரியானவைகள் என்று சொல்லி, அவைகளை நியாயப்படுத்தி வருகிறோம்.

இது போன்ற தவறான அனுகுமுறைகளே நிறைய உலக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. அதனால் கல்வி முறையில் நல்லதொரு மற்றம் கொண்டுவருவது முக்கியம்.

2 comments:

கிருஷ்ணா said...

சமயக் கல்வி ஒன்றுதான், மனிதனை மனிதனாக்கும் நண்பரே.. பள்ளிக்கூட பாடமெல்லாம்.. பணம் சம்பாதிக்கும் அடிப்படை அறிவாகவே ஆகிவிட்டது.! (material)வாழ்க்கையின் ஆதாரமே பணம் என்றாகிவிட்ட பின்.. பாவம் பசங்க!

வேடிக்கை மனிதன் said...

//கிருஷ்ணா said...
சமயக் கல்வி ஒன்றுதான், மனிதனை மனிதனாக்கும் நண்பரே.. பள்ளிக்கூட பாடமெல்லாம்.. பணம் சம்பாதிக்கும் அடிப்படை அறிவாகவே ஆகிவிட்டது.! (material)வாழ்க்கையின் ஆதாரமே பணம் என்றாகிவிட்ட பின்.. பாவம் பசங்க!//

அப்படி என்றால் என்னை மனிதன் என்று ஒப்புக்கொள்ளச் சொல்கிறீர்கள் போலும்,( நான் சமையற்கல்வி தான் முடிச்சிறுக்கிறேன் ஹ ஹ)

மனிதனாகும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.