ஆத்திகம், நாத்திகம் எது சிறந்தது?

கடவுள் என்ற சொல்லின் இருவேறு சிந்தனைகளைக் கொண்டவையே ஆத்திகம் மற்றும் நாத்திகம். இறை நம்பிக்கை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை வளர்த்துக் கொண்டு நிற்பது ஆத்திகம். புலனுக்கும், அறிவிற்கும் புலப்பட்டதில் மட்டும் நம்பிக்கை கொள் என்ற கொள்கையில் வளர்ந்தது நாத்திகம். ஆத்திகனின் கடவுள் நம்பிக்கை என்பது அவன் சார்ந்துள்ள மத நம்பிக்கையில் அவன் எவ்வளவு தூரம் ஈடுபாடு கொண்டுள்ளான் என்பதைப் பொறுத்தே அவனது கடவுள் நம்பிக்கை இருக்க முடியும்.(பெறும் பாலானவர்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பது அவர்கள் சார்ந்துள்ள மதத்தை பொறுத்தே இருக்கும், அதைத் தாண்டி கடவுள் பற்றிய சிந்தனை இருக்காது). நாத்திகருக்கு ஆத்திகர்களின் கடவுள் நம்பிக்கை, கொள்கைகளுக்கு எதிரான சிந்தனையாக இருக்கும்.

எல்லாம் அவன் செயல், அவனின்றி அனுவும் அசையாது என்று (அசையா) நம்பிக்கையில் நம்பிக்கை வைப்பதே ஆத்திகம். எல்லாம் இயற்கை என்பதாக நம்புவது நாத்திகம். இரண்டுமே நம்பிக்கை என்ற நிலை தாண்டி உண்டு இல்லை என்ற எந்த நிரூபனமும் தந்து விளக்குவதில்லை.(குறைந்த பட்சமாக மனிதனின் இயற்கை பற்றிய அச்சம், ஆச்சர்யத்திற்கு விடை கானும் முயற்சியில் அறிவியல் மட்டுமே முன்னேறி வருகிறது. இயற்கை அது சூழலால் பின்னப்பட்டதாக இருப்பதனால் அறிவியல் என்றைக்கும் இயற்கையை தன் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. நிலையாத்தன்மை என்பதே இயற்கை விதியாகும் பட்சத்தில் விஞ்ஞானமும் இயற்கை பற்றிய ஆராய்சியில் தன் தேடலை தொடர்ந்து கொண்டு தானிருக்கும் என்றைக்கும் ஒரு முழுமைக்கு வரவே வராது).

எப்படி, எல்லாம் அவன் செயல் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதோ, அதைப் போலவே புலனுக்கும், அறிவிற்கும் புலப்படாத என்று ஒன்று இருக்க முடியாது என்பதும் ஏற்றுக் கொள்ளமுடியாததே. மனித மனத்துடன் தொடர்புடையவன் இறைவன் என்றும் அவனை மனதால் மட்டுமே உணர முடியும் என்பது ஆத்திக வாதம், எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அப்படி ஒன்று இருக்கவே முடியாது என்பது நாத்திகவாதம்.( பொதுவாக நாத்திகத்தின் இறை எதிர்ப்பு அளவுகோள் எது என்று பார்த்தால் அது ஆத்திகர்களின் கடவுள் பற்றிய கட்டமைபின் அளவுகோளுக்கு நேர் எதிரானதாகவே இருக்கும். இறைவன் என்று யாரும் இல்லை என்று நம்பிவிட்ட பிறகு, அது பற்றிய எந்தச் சிந்தனையும் நாத்திக மனங்களில் வளர வாய்ப்பே இருக்காது. அதனாலேயே அவர்களது கடவுள் மறுப்பிற்கான அளவுகோள் ஆத்திகர்களின் அளவுகோள் எதுவோ அதன் எல்லையை தாண்டி நாத்திகர்களின் கடவுள் குறித்த அறிவு இருக்கவே முடியாது).

தேவைக்கு மிகுதியாக அனைத்து சுக, செளகரியங்கள் கிடைத்த போதும் அனுபவிக்கவிடாமல் மறைமுகமாக அதை தடுக்கும் விதமாக இவையெல்லாம் அற்ப சுகம், குடும்பம், உறவுகளில் இருக்கும் பினைப்புகளில் இருந்து விடுபட்டு இறைநிலையை அடைந்துவிடு அதுதான் நிலையான இன்பம் என்று சொல்லும் ஆத்திகத்தைவிட, வாழும் வாழ்க்கையே நிஜம் கிடைத்தவற்றை அனுபவித்து மரணம் வருகிறபோது அதை மகிழ்வுடன் வறவேற்கப் பழகிக்கொள் என்னும் நாத்திக சித்தாந்தம் மேலானதாகப் படுகிறது.

இறை நம்பிக்கையாளர்கள் (இறை அச்சம் காரணமாக) நல்லவர்களாக இருப்பார்கள் என்பது இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கையாகவே இருந்து வருவதென்பது என்னமோ உண்மைதான். ஆனால் ஒரு நாத்திகரின் பார்வையில் ஆத்திகர் என்பவர் சாதி/மத, ஏற்றத்தாழ்வு பாராட்டி மனிதனுக்குள் பிரிவினையை தூண்டுபவராகவே இருக்கிறார். அதே நாத்திகர் குறித்த ஆத்திகரின் பார்வையில் பிறரை நேசிக்கத் தெரியாதவர் என்பதாகவும், தாய்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதாகவே இருக்கிறது.

தன்னலம், தேவை என்று வருகிறபோது இறை நம்பிக்கை, கொள்கைகள் எல்லாம் சுத்தப் பொய் என்பதாக அவர்கள் சார்ந்துள்ள மத, கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயலாற்றி இறைவன் இருப்பை பொய்யென்று நிரூபிக்கும் (தேவநாதனைப்போல, நித்தியானந்தாவைப்போல) விதமாக நடந்து ஆத்திகர்களிலும் தரங்கெட்டவர்கள் உண்டு என்று நிரூபிப்பதும், எந்த ஒரு நிகழ்விற்கும் காரணகாரியமுண்டு, அதில் கடவுள் பங்கென்று எதுவுமில்லை என்ற நம்பிக்கை கொண்ட நாத்திககர், துன்பங்களில் துவண்டு அல்லது அதற்கான காரணத்தை அறிய முடியாத போது தனக்கும் மேலான சக்தி ஒன்று இருப்பதாக நினத்து தான் தாங்கிப் பிடித்த கொள்கைகளை தானே போட்டு உடைக்கும் விதமாக ஆத்திகனாக மாறுவது (கண்ணதாசன், பெரியார்தாசன்) தொடர்வதைப் பார்க்கும் போது கடவுள், இயற்கை குறித்த புரிந்துணர்வில் ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே வளரவே இல்லையென்பதும், எந்தக் காலத்திலும் அவை பற்றிய ஒரு முடிவான முடிவுக்கும் வராது என்பதையே காட்டுகிறது.

8 comments:

Virutcham said...

இறைவன் இருப்பை பற்றிய முடிவை தவறு செய்யும் ஆத்திகர்களை வைத்து முடிவு செய்வது சரி இல்லை என்று தோன்றுகிறது. மற்றபடி நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்

virutcham

வேடிக்கை மனிதன் said...

// Virutcham said...
இறைவன் இருப்பை பற்றிய முடிவை தவறு செய்யும் ஆத்திகர்களை வைத்து முடிவு செய்வது சரி இல்லை என்று தோன்றுகிறது. மற்றபடி நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்//

நம்பிக்கை நம்பிக்கையாக மட்டுமே இருக்கும் பட்சத்தில் தப்பில்லை தான்.

நாளும் நலமே விளையட்டும் said...

இந்திய மண்ணில் மட்டும் நாத்திகம் என்பது இல்லை. அது உலகளாவிய மனித சிந்தனை உள்ள
எல்லா சமுதாயத்திலும் உள்ளது. சொல்லப் போனால் ஐரோப்பிய நாடுங்களில் "நான் கடவுள் என்பதை நம்ப வில்லை" என்று சொல்லி வாழும் பெண்களும் உண்டு.
இறைவன் என்பதை இருக்கின்றது என்று சொல்லும் எல்லோருமே முன்னர் யாரோ சொன்னதை நம்புபவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் நாத்திகம் அப்படி அல்ல. தேடுதல் அங்கு மிக அதிகம்.

வேடிக்கை மனிதன் said...
This comment has been removed by the author.
வேடிக்கை மனிதன் said...

//நாளும் நலமே விளையட்டும் said...
இந்திய மண்ணில் மட்டும் நாத்திகம் என்பது இல்லை. அது உலகளாவிய மனித சிந்தனை உள்ள
எல்லா சமுதாயத்திலும் உள்ளது. சொல்லப் போனால் ஐரோப்பிய நாடுங்களில் "நான் கடவுள் என்பதை நம்ப வில்லை" என்று சொல்லி வாழும் பெண்களும் உண்டு.
இறைவன் என்பதை இருக்கின்றது என்று சொல்லும் எல்லோருமே முன்னர் யாரோ சொன்னதை நம்புபவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் நாத்திகம் அப்படி அல்ல. தேடுதல் அங்கு மிக அதிகம்//

கடவுள் என்ற சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையோடு தேடுவது ஆத்திகம், நம்பிக்கையின்மையில் தேடுவது நாத்திகம்.....

ஆத்திகம் நாத்திகம் இரண்டுலுமே தேடல் என்பது இருந்து கொண்டேதான் இருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

ஜகதீஸ்வரன் said...

ஆத்திகம் பாமர மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றது. அதனால் தான் பெரும்பாலான வாகனங்களின் முகப்பிலும், தொழில் செய்யும் இடங்களிலும் இறைவனை வைத்திருக்கின்றார்கள். அவர்களின் மேல் இருக்கும் நம்பிக்கையை விட கடவுளின் மேல் நம்பிக்கையை வைத்துக் கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ்கின்றார்கள்.

உழைப்பினால் முன்னுக்கு வரமுடியாதனுக்கு விதி என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்ளவும், கடவுள் இருக்கின்றார் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுமே அவர்களை வாழ வைக்கின்றது.

அதனால் தான் போலி சாமியார்களை கண்டபின் கூட பலருக்கும் இறைநம்பிக்கை பொய்ப்பதில்லை.

மற்றொரு முக்கியமான விசயம், உழைப்பு நம்புபவன் சாமியார்களை நம்புவதில்லை. அதிக பணம் படைத்த பெரிய மனிதர்கள் மட்டுமே சாமியார்களை நம்புகின்றார்கள், பணம் கொடுத்து காரியம் சாதிக்கின்றார்கள்.

வேடிக்கை மனிதன் said...

//உழைப்பினால் முன்னுக்கு வரமுடியாதனுக்கு விதி என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்ளவும், கடவுள் இருக்கின்றார் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுமே அவர்களை வாழ வைக்கின்றது.//

இது போன்ற குருட்டு நம்பிக்கைதான் ஒருவனை சோம்பேரியாக்குகிறது. தெய்வத்தால் ஆகாதெனினும் என்ற குறளைப் படித்ததில்லையா? உழைப்பவர் கடினமாகவும், கவணமாகவும் உழைத்தால் தோல்வியை தவிர்கலாம். நம்பிக்கையற்ற கோழைகளுக்குத்தான் கடவுள் தேவைப்படுகிறார், கடவுள் நம்பிக்கையற்றவர் தன்னம்பிக்கையுடையவராகவே இருக்கிறார்.

பார்வையாளன் said...

ஹ ஹா ..

யார் சொன்னது... கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், தன்னம்பிக்கை வந்து விடாது....தன்னமிக்கை, வெற்றி என்பதெற்கெல்லாம் தனிப்பட்ட உழைப்பு, திட்டமிடல் எல்லாம் முக்கியம்..

கடவுளை நம்புகிறோமா, கடவுள் இல்லை என நம்புகிறோமா என்பதற்கும், இதற்கும சம்பந்தம் இல்லை