இப்படியும் சில மனிதர்கள்

நானும் என் நண்பனும் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து பிடித்தால் 8.30 மணிக்கு கல்லூரியில் இருக்கலாம் என்று கணக்குப் போட்டு விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வந்து போவது வழக்கம்.

அப்படி ஒரு திங்கள் கிழமை காலை கொட்டாம்பட்டியில் இருந்து திருச்சிக்கு பேருந்து ஏறினோம். பேருந்து இருக்கைகள் நிரம்பி விட்டதால் நானும் என் நண்பனும் நின்று கொண்டு பயனித்தோம். பேருந்து துவறங்குறிச்சி என்ற ஊர் தாண்டி ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் பயணித்திருக்கும், ஐயோ எம்புள்ளையா காப்பாத்துங்களேன்னு ஒரு பெண்ணின் குறல் வண்டிக்குள் கேட்டது.

ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுதினார். அந்தப் பெண்ணின் அருகில் சென்று பார்த்த போது அவர் மடியில் படுத்திருந்த இரண்டு வயது குழந்தை வாயில் நுரைதல்ல பேச்சு மூச்சற்று கிடந்தது. அந்தத் தாய் செய்வதறியாது கண்களில் இருந்து கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோட அழுதுகொண்டே பேருந்திலிருந்தவர்களைப் பார்த்து எம்புள்ளையக் காப்பாத்துங்க என்று புழம்பிக்கொண்டே இருந்தார்.

நடத்துநர் மற்றும் பயணிகளில் மூத்தவர்கள் சில உத்தியோகஸ்தர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்லிகொண்டே இருந்தார்களே தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுத்த பாட்டைக்காணோம். நான் நடத்துநரிடம் (ஓட்டுனரை விட நடத்துனர் மூத்தவர் என்பதால்) சார் பக்கத்தில துவறங்குறிச்சிய விட்டா பெரிய ஊர் எதுவும் கிடையாது, வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தான் துவறங்குறிசியிலிருந்து வந்து இருக்கோம். அதுனால இந்த குழந்தைய எதாவது ஒரு மருத்துவமனயில சேர்த்திடலாம் வண்டிய திருப்பச் சொல்லுங்க என்றேன்.

இல்ல இல்ல நாங்க அவசரமா போய்கொண்டிருக்கிறோம் அதுனால துவரங்குறிச்சி நோக்கி செல்லும் பேருந்து எதிர் திசையில் வருகிறதா வென்று பார்த்து அந்தப் பெண்ணை ஏறிப்போகச் சொல்லுங்க என்று பெரும்பாலனவர்களிடமிருந்து பதில் வந்தது. அப்பொழுது அந்தப் பெண் (அதிகம் படித்த பெண் இல்லை என்று அவருடைய பேச்சிலே தெரிந்தது) நடந்து கொண்டவிதம் என்னையும், என் நண்பனையும் இன்னும் சிலரை கலங்க வைத்தது. கையில் பத்து ரூபாய் தவிர வேறு பணம் எதும் இல்லை யாராவது கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்கள் என்று வெடித்து அழுதார்.

அதற்குள் ஓட்டுநர் எதிர் திசையில் துவறங்குறிச்சி செல்லும் பேருந்து வருது இறங்கிப் போய் ஏறுமான்னு சொல்லி அந்தப்பெண்ணை இறக்கிவிட அந்தப் பெண் மலங்க மலங்க விழித்துக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல அந்த வண்டி நோக்கிப் போகையில் யாராவது வந்து உதவ மாட்டார்களா என்பது அவரது பார்வையிலும், அழுகையிலும் தெரிந்தது. அந்தப் பார்வை என்னையும் என் நண்பனையும் அழுத்த நாங்கள் இருவரும் ஒடிச் சென்று அந்தப் பெண்ணோடு ஏறிக்கொண்டோம், எங்களோடு திருச்சி நோக்கிப் பயனித்தவர்கள் தம்பி நீங்க வாங்க வண்டி உங்களுக்காக நீங்க திரும்புகிறவரை இங்க நிக்காது என்று சொல்லி அழைத்தார்கள்.

நாங்கள் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்று கூறி அந்தப் பெண்ணோடு புறப்பட்டோம். எங்களுக்கும் அந்தப் பெண்ணிற்கும் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த முயற்சித்தோம். அழுகையும் புழம்பலும் நின்ற பாடில்லை. ஒட்டுநர் வண்டியை விரைவாகச் செலுத்தி துவறங்குறிச்சியில் இறக்கி விட்டார். அங்கிருந்து ஆட்டோ பிடித்து மருத்துவமனை சென்றடைந்தோம். விவரம் தெரிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் வாடகை வாங்க மறுத்தார்(நல்லவர்). குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையை அட்மிட் செய்துவிடும்படி கூற, என் நண்பன் சிறிதும் யோசிக்காமல் ஒரு ஐநூறு ரூபாய் பணம் (கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை அது) எடுத்து அந்தப் பெண்ணிற்காக கவுண்டரில் பணம் கட்டச் சென்றான்.

நான் அந்தப் பெண்ணின் திருச்சி வீட்டு முகவரி வாங்கி கொண்டு அவர்கள் வீட்டில் தகவல் சேர்த்து விடுவதாக சொல்லி நானும் என் நண்பனும் கிளம்பினோம்.

திருச்சியில் எங்கள் கல்லூரிக்கு அருகாமையிலேயே அவர்கள் வீடு இருந்ததால் அவர்களிடம் விவரத்தை சொல்லி கல்லூரிகுச் சென்றோம். அவர்களும் எங்களது பெயர் கல்லூரி மற்றும் வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அவசரமாக கிளம்பினார்கள்.

மறுநாள் காலை என்னையும் என் நண்பனையும் சிலர் பார்க்க வந்திருப்பதாக பிரின்சிபால் அறையிலிருந்து அழைப்பு வந்தது. அதற்குள் பிரின்சிபால் அவர்களை அழைத்துக்கொண்டு எங்களைத்தேடி வகுப்பறைக்கே வந்து விட்டார். வந்தவர்கள் அந்தப் பெண்ணும் அவரது கணவரும், எங்களைப் பார்த்ததும் கட்டி அழுது சொன்னார்கள் நீங்க இல்லைனா எங்க புள்ள பிழைச்சிருக்காது,எங்களை பொறுத்தவரை நீங்க தான் தம்பி தெய்வம்னு என் நண்பனை அந்தப்பெண் சொன்ன பொது. தொண்டை கணத்து அனைவருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, அந்த வாரம் விடுப்பில் ஊர் திரும்ப திருச்சியில் பேருந்து எடுத்தோம். பார்த்தால் எங்களையும் அந்தப் பெண்ணையும் நடுவழியில் விட்டுச் சென்ற அதே பேருந்து, ஓட்டுனரும், நடத்துனரும் அவர்களேதான். எங்களை அடையாளம் கண்டு நடத்துநர் கேட்டார் அந்தப் புள்ள பிழச்சிருச்சானு. நாங்கள் ஆமாம் என்றோம்.

அதற்கு அவர் சொன்ன வார்த்தை தான் எங்களை ரொம்ப மணம் நோக வைத்தது. நாங்க தான் சொன்னோம்ல அதுக்கு ஒன்னுமில்லை பிழைசுக்கிடும்னு, நீங்க தான் வயசுக்கோளாறுல அந்தப் பொம்பளப்புள்ளயப் பார்த்ததும் படத்துல் வற்ற ஹீரோ மாதிரி இறங்கிப்போனீங்க என்றார்.

சரி சரி வண்டிகிளம்பும்போது ஏறிக்கிங்க மதுரை மட்டும் தான் சிட்டிங் மத்த ஊரல்லாம் வண்டி கிளம்பும்போது இடம் இருந்தா மட்டும் தான் உட்காரலம்னு சொல்லிக்கொண்டு போனார்.

எப்படி பட்ட உலகத்தில் இருகிறோம் என்று புரிந்தது எங்களுக்கு. கருணையோடு நடந்தால் கூட அதையும் கொச்சைப்படுத்த இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் என்று.

13 comments:

shankar said...

good job. keep it up. don't get frustrated. ivargalai paarthu naam maari vidakkoodaadhu.

ஊர்சுற்றி said...

அருமையான தலைப்பு.

இந்த மாதிரி சம்பவங்களை அனுபவித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்.

நீங்களே உங்களைப் பார்த்து பெருமைப் படவைக்கும் சம்பவம் இது.

அந்த நடத்துனர் மாதிரி மனிதர்களும் உள்ள உலகம்தான் இது. ஒருவேளை அந்த மருத்துவமனையில் நடந்த சம்பவங்களை யாராவது அவருக்கு சொல்லியிருந்தால், அவர் அந்த மாதிரி பேசியிருக்க மாட்டாரோ என்னவோ?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

இது தான் இன்றைய பணத்தாசை பிடித்த உலகின் நிதர்சனம்..
உங்களை போல ஒரு சிலர் இருப்பதால் தான் மனிதம் வாழ்கிறது..
வாழ்த்துக்கள்...
மனம் தளர வேண்டாம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் நல்ல மனதுக்கு என் வந்தனம்.. இங்கே இருப்பவர்களில் ஒரு சிலர் பிறருக்கு உதவ முடிகிறதோ இல்லையோ, குறை சொல்வதை வாடிக்கையாக கொண்டு இருப்பார்கள்.. அதை தாண்டி செல்லுங்கள்.. வாழ்க்கையில் அன்பு ஒன்று மட்டுமே சாஸ்வதம்.. நல்ல பதிவு..

கார்த்திகைப் பாண்டியன் said...

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதே தலைப்பில் நானும் நேற்று எழுதி உள்ளேன்.. அந்த இடுகையின் பின்னூட்டத்தில் நண்பர் ஊர்சுற்றி உங்களுடைய லிங்கை கொடுத்து இருந்தார்.. நான் எழுதி இருப்பது அன்பு செலுத்தும் நல்ல உள்ளங்கள் பற்றி..:-))))))

Dhavappudhalvan said...

மனது கனத்து. கரைய வைத்தது உள்ளத்தை. விழிகளிலே கசிந்த நேரத்திலே, மனத்தை ரணப்படுத்தியது ஓட்டுநர், நடத்துநருடைய சொற்கள். சில நிமிடதுளிகளை செலவழித்து, அங்கு நடந்ததை விவரித்திருந்தால், ஒரு வேலை அவர்களும் திருந்திருக்கலாம்.முடிந்தால் என் BLOG குகளையும் வாசித்து பாருங்களேன்.

கிருஷ்ணா said...

வாழ்க்கையில் எப்பொழுதும் சிறு சிறு விஷயங்கள்தான் பெரிய பெரிய விளைவையும் வெற்றியையும் சில சமயம் துயரத்தையும் சோகத்தையும் பெற்றுத் தறும். வண்டியில் இருந்த மற்றவர்களுக்கு அது சிறு விஷயம்.. நீங்கள் செய்த அந்த 'சிறு' உதவி (என்னைப்பொறுத்த வரை பெரிய உதவி), ஒரு உயிரை காப்பாத்தி இருக்கிறது. இதுதான் மனித நேயம்..!

வேடிக்கை மனிதன் said...

//shankar said...
good job. keep it up. don't get frustrated. ivargalai paarthu naam maari vidakkoodaadhu.//

உங்கள் அன்புக்கும், ஆதரவிற்கும், வருகைக்கும் நன்றி ஷங்கர்

வேடிக்கை மனிதன் said...

//இந்த மாதிரி சம்பவங்களை அனுபவித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்.//

உண்மை தான் நண்பரே, அந்தப் பெண் கையில் பத்து ரூபாய் தான் இருக்கிறது யாராவது குடுத்து உதவுங்கள் என்று கதறி அழுத போது அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஓட்டுநர் இறக்கிவிட்டதை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு வலிக்கும்.

வேடிக்கை மனிதன் said...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
இது தான் இன்றைய பணத்தாசை பிடித்த உலகின் நிதர்சனம்..//

சரியாகச் சொன்னீர்கள்.
இயற்கை வயிற்றில் பசியை வைத்தது பசி தேவையைத் வைத்தது தேவை தன்னலத்தை வளர்த்தது தன்னலம் எல்லைகளை படைத்தது. எல்லை, உனர்ச்சிகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டது. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட உறவு, ஊரை கூடக்கருதாமல் வீட்டுக்குள் முடங்கி விட்டது என்பது தான் உண்மை.

வேடிக்கை மனிதன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதே தலைப்பில் நானும் நேற்று எழுதி உள்ளேன்.. அந்த இடுகையின் பின்னூட்டத்தில் நண்பர் ஊர்சுற்றி உங்களுடைய லிங்கை கொடுத்து இருந்தார்.. நான் எழுதி இருப்பது அன்பு செலுத்தும் நல்ல உள்ளங்கள் பற்றி..:-))))))//

நீங்கள் இரு சக்கரவாகனத்தில் அடிபட்டு கிடந்த பொழுது அந்தப் பெரியவரும் அவர் குடும்பமும் உங்களுக்குச் செய்த உதவிகள் பற்றி படித்த பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது.

அலுவலில் இருந்ததால் பின்னூட்டமிட முடியவில்லை.

என்னுடைய லிங்கை கொடுத்து உதவிய ஊர்சுற்றி( மன்னிக்கவும் நண்பரே உங்கள் பெயர் தெரியவில்லை) அவர்களுக்கு என் நன்றி

வேடிக்கை மனிதன் said...

//Dhavappudhalvan said...
மனது கனத்து. கரைய வைத்தது உள்ளத்தை. விழிகளிலே கசிந்த நேரத்திலே, மனத்தை ரணப்படுத்தியது ஓட்டுநர், நடத்துநருடைய சொற்கள். சில நிமிடதுளிகளை செலவழித்து, அங்கு நடந்ததை விவரித்திருந்தால், ஒரு வேலை அவர்களும் திருந்திருக்கலாம்.முடிந்தால் என் BLOG குகளையும் வாசித்து பாருங்களேன்.//

எனக்கு அவர்கள் அப்படி மனிதாபிமற்ற முறையில் நடந்து கொண்ட பிறகு அவர்களை பார்க்கக் கூட நான் விரும்பவில்லை.

வருகிறேன் உங்கள் வலைத்தலம் பார்க்க.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

வேடிக்கை மனிதன் said...

//வண்டியில் இருந்த மற்றவர்களுக்கு அது சிறு விஷயம்.. நீங்கள் செய்த அந்த 'சிறு' உதவி (என்னைப்பொறுத்த வரை பெரிய உதவி), ஒரு உயிரை காப்பாத்தி இருக்கிறது. இதுதான் மனித நேயம்..!//

இங்கே நான் என் நண்பனைத்தான் பாராட்டுவேன் யோசிக்காமல் கவுண்டரில் அந்தக் குழந்தைக்குப் பணம் கட்டினான். மேலும் அந்தப் பெண்ணிடம் இன்னும் ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்த போது அந்தப் பெண் அவனை பார்த்த பார்வை இருக்கிறதே அது ஒரு கோடி நன்றிக்குச் சமம்.