அவளும் நானும்

(வார்த்தை கடனாகபெற
விருப்பமில்லை
மூளை செலவு செய்ததில்
கிடைத்த துளிகள் கொண்டு
ஒரு கோப்பை
நிறைக்க முயற்சிக்கிறேன்)

அதுவரை அவளிடம் நானும்
என்னிடம் அவளும் பழகியதில்லை
அவளை அறிந்து கொள்ள
முயன்ற போதெல்லாம்
என்னை அறிந்தவள்
போல் இருந்தாள்

அவளிடம் பேச முயன்ற போதெல்லாம்
அவள் என்னிடம் பேசிவிட்டதுபோல் இருந்தால்
நான் ஆரம்பிப்பது போலதோன்ற
அவள் முடிந்தது போல இருந்தாள்
அருகருகே இருக்கிறாம்
ஆரம்பம் முடிவாக

7 comments:

தேவன் மாயம் said...

அருகருகே இருக்கிறாம்
ஆரம்பம் முடிவாக//

ஆரம்பிங்க!!! சீக்கிரம்!!

தேவன் மாயம் said...

உங்கள் கவிதை அருமை!! என் தளம் வருக!

ச.செந்தில்வேலன் said...

நல்ல கவிதை.. வாழ்த்துகள்

கோவி.கண்ணன் said...

//திருமணம் என்ற அமைப்பு இந்தியாவில் இன்னும் நூறு ஆண்டுகளில் மறைந்து போகும்//

ஆமான்னாலும் இல்லைன்னாலும் அதுக்கு ஆதாரம் காட்ட முடியது, இந்திய கலச்சாரம் ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு மாறிவருகிறது என்று காரணம் காட்டினாலும், ஐரோப்பிய கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் இல்லாது நூற்றாண்டுகளாக திருமணங்கள் நடந்து வருகின்றன.

100 ஆண்டுகளில் திருமணங்கள் குறையலாம் மறையாது.

பித்தன் said...

-:)

ஊர்சுற்றி said...

கவிதை அருமை. சற்று பிழைகளுடன் இருக்கிறது. திருத்திக்கொள்ளுங்கள்.

siruvan said...

//நான் ஆரம்பிப்பது போலதோன்றஅவள் முடிந்தது போல இருந்தாள்அருகருகே இருக்கிறாம் ஆரம்பம் முடிவாக//

கவிதை நல்லா இருக்கு