இப்படி ஒரு தலைப்பை வைத்ததற்கு பதிவுலக நன்பர்கள் மண்ணிக்கவும்.
சிங்கப்பூர் பதிவர்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படி ஒருதலைப்பை வைத்தேன். ஈழத்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் தானே தவிர வேறு உள்நோக்கம் கிடையாது.
நன்பர் ஒருவர் கேட்டார்:
ஈழத்து மக்கள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் கட்டுறையாக, கவிதையாக பலவாறான செய்திகளை இனையத்தின் (டமிலிஸ்) வாயிலாக நீங்கள் எழுதுவதெல்லாம் எதற்கு?
உங்களுடைய பதிவு நிறைய வாக்குகள் வாங்கி பிரபலமான இடுகைகளின் பட்டியலில் இடம் பெறுவதற்கும், உங்களின் எழுத்துத் திறமைக்கும், சிந்தனைக்கும் மற்றவர் மத்தியில் என்ன மாதிரியான அங்கிகாரம் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவுமே நீங்கள் பரபரப்பான செய்திகளை எழுதுகிறீர்கள் என்றார்.
நான் சொன்னேன்:
அழுகைச்சத்தம் கேட்டாலொழிய இழவு வீடென்பது தெரியாது. பத்துப்பேர் சேர்ந்து சத்தம் போட்டாலொழிய பிரச்சினையின் தீவிரம் புரியாது. எங்களைப் போன்ற பத்துப்பேர் நாங்கள் அறிந்த செய்தியை மற்றவரின் மத்தியில் சென்றடைய வழிவகுக்குறோம். மேலும் எங்களால் எங்கள் அதங்கங்களை இங்கே தான் கொட்டித்தீர்க்க முடிகிறது என்றேன்.
அதற்கு அவர்: கிழித்தீர்கள். பதிவர்கள் நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஈழத்துப் பிரசினையை கையாலாமல் உங்களின் சொந்த தற்பெருமைக்காக அவர்களைப் பற்றி எழுதிவிட்டு இப்போது சப்பைக்கட்டு கட்டப்பார்க்குறீர்கள் . உண்மையில் உங்களுக்கு ஈழத்துப் பிரச்சினையில் அக்கரையில்லை. அதைப்பற்றி எழுதுவதன் மூலம் உங்களின் எழுத்துக்களால் பலரை வசீகரித்து அவர்களின் செல்வாக்கைப் பெறப்பார்க்குறீர்கள்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார இல்லையா, இறந்து போன மக்களின் எண்ணிக்கை எவ்வளவு, ஈழத்துப்பிரசினையில் இந்திய மத்திய மாநில அரசின் நிலைப்பாடு என்ன, ஊடகங்களின் ஒருபட்சமான செய்தி என்று இது போன்ற செய்திகளை பரப்புவதன் மூலம் நீங்கள் ஈழத்து மக்களுக்கு செய்வது என்ன?
ஒன்றுமில்லை.
மேலும் நீங்கள் ஒன்றும் போர்களத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்து எழுதவில்லையே, ஊடகங்களின் வாயிலாக தெரிந்ததைத்தானே எழுதுகிறீர்கள். தெரிந்ததை எழுதுவதால் என்ன பயன்?
உங்களை நான் கேட்பதெல்லாம் இதுதான்.
அவர்களுக்கு கடமையாற்ற உங்கள் கரங்கள் நீள வேண்டாம். அவர்கள் கண்ணீர் துடைக்க உங்கள் விரல்கள் நீட்டுங்கள்.
அங்கே குழந்தைகள் பாலுக்காகவும், பெரியவர்கள் ஆறுதலுக்காகவும், காயம்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காகவும் துடித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் செய்தித்தாளிலும், வானொளியிலும், இனையத்திலும், தொலைக்காட்சியிலும் வரும் ஈழத்து மக்களின் அவலங்கலைப் பார்த்து இன்றைக்கு எனக்கு சோறு கூட இறங்க மாட்டேங்குதுன்னு ஒரு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாள் பதிவிற்காக அதே ஊடகங்களின் வாயை பார்த்துகொண்டிருக்கிறீர்கள்.
சோறு கிடைத்தால் காக்கை தன் சுற்றத்தையே அழைத்துக் கொண்டு வருகிறது. ஒரு காக்கை இறந்துவிட்டல் இருநூறு காக்கைகள் சூழ்ந்து கொள்கின்றன. நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். ஆகையால் நன்பரே உங்களுடைய அடுத்த பதிவர் சந்திபிலாவது ஈழத்து மக்களின் துயரத்தை துடைக்கும் படியான திட்டங்களையோ அல்லது உதவிகளையோ கொண்டுவருவோம் என்று முடிவெடுங்கள் என்றார்.
அவர் விடைபெற்றுப் போகையில் ”மனிதன் வயிற்றுக்குப் பசி தெரியும் வரை மனத்துக்கு உறவு தெரிகிறது. அது அவன் குற்றமல்ல இயர்க்கையின் குற்றம். இயற்கை வயிற்றில் பசியை வைத்தது பசி தேவையைத் வைத்தது தேவை தன்னலத்தை வளர்த்தது தன்னலம் எல்லைகளை படைத்தது. எல்லை, உனர்ச்சிகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டது. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட உறவு, ஊரை கூடக்கருதாமல் வீட்டுக்குள் முடங்கி விட்டது. வீட்டிலிருந்து ஊருக்கும், ஊரிலிருந்து நாட்டுக்கும் உறவு தன் முழுக்கரங்களையும் எப்போது விரிக்கும் என்று முனுமுனுத்துக் கொண்டு போனது காதில் விழுந்தது”.
அவர் பேச்சிலிருந்து நான் எடுத்துக்கொண்டது, எழுதுவதால் ஈழத்துப் பிரச்சினை உலகைச் சென்றடையும் தான் இல்லையென்று சொல்லவில்லை. தற்பொழுது போர் முடிந்து விட்டது இனியும் எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமாக எதாவது நம் இனத்துக்கு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
சிங்கப்பூர் பதிவுலக நன்பர்களே நம் அடுத்த சந்திப்பை இப்பொழுதே கூட்டி ஆவன செய்வோம். வாருங்கள்.
பதிவர்களே ஈழத்து பிரச்சினையில் குளிர்காயாதீர்கள்
Posted by
வேடிக்கை மனிதன்
on Friday, May 22, 2009
Labels:
மனுதாபிமானம்
16 comments:
great article.
ஏதாவது கண்டிப்பா செய்யனும்ங்க... உங்க எண்ணத்துக்கே சல்யூட்..
இல்லை நான் தெரியாமே தான் கேக்குறேன், பதிவுகளை நாலு பேர் பார்த்தால் என்ன, நாலாயிரம் பேரு பார்த்தால் என்ன? அதுனாலே பதிவருக்கு பத்து பைசா கூட பிரயோஜனம் கிடையாது. அதுனாலே ஹிட்ஸ்-உக்காக எழுதுறோம்னு சொல்றதை நிறுத்துங்க மக்களே!
அங்கீகாரம் கிடைக்குமா? அதை வைச்சு என்ன அரசியல் பதவியா கிடைக்கும் பதிவர்களுக்கு? ஒண்ணும் கிடையாது.
சில பேர் பூட்டிய கதவுகளுக்கு பின் அழுகிறார்கள், வேறு சிலர் பதிவுகளில் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்கள். அவ்வளவு தான்.
மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்ய முற்படுவோம் நாம் அனைவரும். அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி சேர்ப்பது? (அரசியல்வியாதிகளின் கைகளில் அது சிக்காமல்?)
ஒரு வகையில் நானும் இதே மன நிலையில் தான் உள்ளேன் .
நாம் அனைவருமே கையறு நிலையில் தான் இருக்கிறோம். நம்மால் நம்ம உணர்வுகளை மனைவியிடம் கூட பகிர முடியாத நிலைதான் இப்போது. எத்தனை நாள் நம் மக்களை எண்ணி அழுவது. நம் உணர்வுகளை ஒருங்கிணைத்து மக்களை காக்க எவரும் இல்லாதது வருத்தமே.
Joe said...
// இல்லை நான் தெரியாமே தான் கேக்குறேன், பதிவுகளை நாலு பேர் பார்த்தால் என்ன, நாலாயிரம் பேரு பார்த்தால் என்ன? அதுனாலே பதிவருக்கு பத்து பைசா கூட பிரயோஜனம் கிடையாது. அதுனாலே ஹிட்ஸ்-உக்காக எழுதுறோம்னு சொல்றதை நிறுத்துங்க மக்களே!/
!உங்களுக்கே அப்பட்டமாக தெரிகிறது இதனால் பிரயோஜனம் கிடையாது என்று !
அப்புறம் ஏன் இந்த வாக்குவாதம்! ஊடகங்களிலிருந்து வரும் செய்தியை திரும்ப எழுதி நேரத்தை வீணடிக்காமல் அன்புகூர்ந்து பதிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி என்னபன்னலாம் என்று முடிவெடுங்கள்! அதற்கு என்னுடுடைய முழு ஆதரவு !
Joe said...
/சில பேர் பூட்டிய கதவுகளுக்கு பின் அழுகிறார்கள், வேறு சிலர் பதிவுகளில் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்கள். அவ்வளவு தான். ///
செய் அல்லது செத்துமடி.! தமிழர்கள் செயல்வீரர்கள் என்பதை நிலைநிறுத்துங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடக்கும் எந்தவிதமான செயல்களுக்கும் பாமரமக்களின் ஆதரவு நிலைக்கும் ! இதை நான் பாமரன் என்ற வகையில் கூறிக்கொள்கிறேன் .....!
பதிவின் மூலமாகவாவது தமிழனின் ஆதங்கங்களை வெளீப்படுத்த
முடிவதால் பதிவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை.
வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்.,
தொலைக்காட்சி ஒன்றை உலகம் முழுவதும் கிடைக்கும் படியாக சேட்டிலைட் மூலமாக DTH மூலமாக இந்தியா கவரேஜ் உடன் ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது கிடைக்கும் படி செய்தால் புலம் பெயர் தமிழர்கள், தமிழர்கள்
மனம் மாற வழி கிடைக்கும்.
naanum pathivulaga nanbanaaga vendum ?? enna vazhi ?
//இல்லை நான் தெரியாமே தான் கேக்குறேன், பதிவுகளை நாலு பேர் பார்த்தால் என்ன, நாலாயிரம் பேரு பார்த்தால் என்ன? அதுனாலே பதிவருக்கு பத்து பைசா கூட பிரயோஜனம் கிடையாது. அதுனாலே ஹிட்ஸ்-உக்காக எழுதுறோம்னு சொல்றதை நிறுத்துங்க மக்களே!
அங்கீகாரம் கிடைக்குமா? அதை வைச்சு என்ன அரசியல் பதவியா கிடைக்கும் பதிவர்களுக்கு? ஒண்ணும் கிடையாது.//
புகழுக்கு ஆசைப்படதா மனிதர்கள் இல்லையென்று சொல்லுவதற்கில்லை,
அது தப்புன்னு நான் சொல்லவரலை. ஆனால் இந்த விசயத்தில் அப்படி எதிர்பார்ப்பவர்களைதான் நான் சுட்டினேன்.
இறக்கப்படும் இதயங்களை விட,
உதவும் கரங்களே இப்பொதைக்கு தேவை.
ஜுர்கேன் க்ருகேர்
கடைக்குட்டி
ஜோ
ரிவோல்ட்
பொதிகை தென்றல்
வாய்ப்பாடி குமார்
ஆகாய மனிதன்
உங்களில் யாருக்காவது ஏதாவது நல்ல் உதவிக்குழு பற்றி தெரியவந்தால் எனக்கும் தெரியப்படுத்துங்கள், அப்படியே நானும்.
நல்லது, இதே கருத்தை நாங்களும் கொண்டுள்ளோம், உங்கள் உதவி எங்களுக்கு தேவை,
மொத்தத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் இந்திய தமிழர்களை அடித்து விரட்டுவதற்கு அனைத்தும் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள்... நல்லது சிங்களவன் அடித்து விரட்டியது போல சீனனும் செய்வதற்கு வழி செய்யுங்கள்...
//நல்லது, இதே கருத்தை நாங்களும் கொண்டுள்ளோம், உங்கள் உதவி எங்களுக்கு தேவை//
நிச்சயம் தோள்கொடுப்பேன்
உங்கள் நண்பர் என்று நீங்கள் கூறியிருப்பது மனசாட்சியே நேரில் பேசியது போல் தோன்றுகிறது.
தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்னும் செய்தி நமக்கு நாமே முதுதுகில் தட்டிக்கொண்டு நாம் கொக்கரிக்கும் வேளையில், திரும்பிவந்தால் இதுநாள் வரை போரில் அகப்பட்டு சிக்கித்தவித்த இதே நிலை மீண்டும் எஞ்சிய தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்னும் உர்ஜிதம் மனதை கசக்கிப் பிழிகின்றது. என்னவாகும் நாம் என்ன செய்யப் போகிறோம் எனபதைக் குறித்தப் பதிவுகளைத் தேடியும் கண்ணில் சிக்கவில்லை.
எல்லோரின் பார்வையையும் திருப்பிவிட்டு இன்று வரை சிங்கள அரசாங்கம் தனது வேலையை அங்கு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.
//உங்கள் நண்பர் என்று நீங்கள் கூறியிருப்பது மனசாட்சியே நேரில் பேசியது போல் தோன்றுகிறது.//
இங்கு நான் யாரையும் குறை கூற முடியாது, அதனால் பேசியது என் மனசாட்சி என்று வைத்துக்கொள்வோம்.
வருகைக்கு நன்றி.
Post a Comment