பூமி வரவர இருண்டு வருவதாக புதிதாக ஒரு பிரச்சினை கிளப்பி இருக்கிறார்களே தெரியுமா?

குளோபல் டிம்மிங்






வளி மண்டலம் தெளிவாக இருந்தால் தானே சூரிய ஒளி பூமிக்கு முழுமையாக முகம் காட்டமுடியும். ஆனால், நாம் தான் மாசுக்களைத் தினம் தினம் வளிக்குள் அனுப்பிக் கொண்டே இருக்கிறோமே! தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைக்கரி, தரையில் மோட்டார் வாகனங்கள் கக்குகின்ற புகை, எரிமலைகள் குமுறியெறிகின்ற சாம்பல் என்று வளி மண்டலத்தில் குவியும் மாசுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.








இவை உள்ளே நுழைகின்ற சூரிய ஒளியைத் திருப்பி வான வெளியினுள்ளேயே சிதறடித்து வருகின்றன. அத்தோடு இந்தப் புகைத்துணிக்கைகள்(AEROSOLS) முகில்களின் அமைப்பையும், ஆயுளையும் கூட மாற்றக் கூடியவை. மேகங்களின் நீண்ட ஆயுளை பெற்று, சூரிய ஒளியை விண்வெளிக்கு மீண்டும் திருப்பியவாரே உள்ளது. இவற்றால் தான் பூமிக்குள் நுழையும் ஒளியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. பூமி உஷ்ணம் அடைவதை GLOBAL WARMING என்று சொல்வதைப் போல இதனை GLOBAL DIMMING என்று சொல்கிறார்கள்.





இதை சாதாரணமான ஒன்றாக எடுத்துவிடவேண்டாம். எதியோப்பியாவில்
1970களிலும் 80களிலும் ஏற்பட்ட பட்டினிச்சாவுக்கு இந்த `குளோபல் டிம்மிங்` தான் காரணம் என்கிறார்கள். ஊடுருவும் சூரிய ஒளி குறைந்ததால் அட்லாண்டிக் கடலில் நீர் ஆவியாகும் அளவும் வெகுவாகக் குறைந்து வளியை உலர வைத்திருக்கிறது. இந்த உலர் வளி எதியோப்பியாவின் மீது மழையை தருவிக்கக் கூடிய கால நிலையை இல்லாமற் செய்ததாலேயே மழையே இல்லாமல், பயிர் விளைச்சல் குறைந்து பட்டினிச்சாவு மலிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இப்படி இன்னும் ஏராளமான பாதகங்களை பட்டியலிடுகிறார்கள்.






“நமது தொழிற்புரட்சியினால் நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கு எதைவிட்டு செல்கிறோம்?”

4 comments:

அப்பாவி முரு said...

//“நமது தொழிற்புரட்சியினால் நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கு எதைவிட்டு செல்கிறோம்?//

துயரத்தைத் தான்..

podhigai thendral said...

இயற்கையின் மீது மனிதன் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதிலிருந்தே இப்படியான விளைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் உள்ளது....தங்கள் எச்சரிக்கைக்கு நன்றி..!

பட்டாம்பூச்சி said...

//“நமது தொழிற்புரட்சியினால் நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கு எதைவிட்டு செல்கிறோம்?//

வேறு என்ன?
சுகாதாரமில்லாத சூழலைத்தான்.
விழிப்புணர்வூட்டும் பதிவு.நன்றி.

வேடிக்கை மனிதன் said...

கருத்துரைத்த அனைவருக்கும் என் நன்றி