வட்டத்துக்குள் பெண்போதைப் பொருளாய்
பார்தது அக்காலம்!
பெண்ணே பெண்ணை போதைப்
பொருளாய் காட்டுவது இக்காலம்!
பெண்களைப் பெண்களாய்
மதிப்பது எக்காலம்?

அழகாய் பிறந்த ஒவ்வொரு
உயிரிடத்தும் இயற்கை
ஒரு பாதுகாப்பை வைத்தது,
பாம்புக்கு பல்லின் விஷம் பாதுகாப்பு,
புலிக்கு அதன் குணம், வலிமை பாதுகப்பு,
ரோஜாவிற்கு முள் பாதுகாப்பு,
புள்ளி மானுக்கு அதன் வேகம் பாதுகப்பு,
பெண்ணே படைப்பு உங்களை புறந்தள்ளியது ஏனோ?

போகட்டும்,
பூமியின் முகத்தில்
கோலமிட்டது போதும்.
அதன் அடித்தோள் சென்று
ஆராயிச்சி நடத்து,
உன் கால்களுக்கடியில்
கோள்களை கிடத்து.


பாரதி கண்ட
புதுமை பெண்ணே,
சட்டம் வட்டம் என்ற
உங்களுக்கு எதிரான
ஆண்களின் கொட்டம் அடக்கு!!

அழகிப் பட்டம் தவிர்
ஆண் வர்கத்தின் வக்கிரபுத்தி
பின்னிய மாயவலை அது
உன்னை உயர்திப்பார்கும்
உயர்ந்த எண்ணம் இல்லை
உன் உள்ளாடை உரித்துப்பார்க்கும்
உத்தேசம் அது என்று தெரிந்துகொள்.
இந்த இழிவான மலிவான
பட்டமெல்லாம் மேலை நாட்டு
வேசிகள் பெறட்டும்.
தமிழ் பெண்களே,
உங்களின் உண்ணதங்களை
தெரிந்துகொள்ளுங்கள்.
பெண் குழந்தையை கூட
அம்மா, என்றே அழைக்கும்
சமூகத்தில் பிறந்தவர்கள் நீங்கள்.


ஆடை குறைத்து
ஆபாசம் காட்டி,
புகழ் பெறுவது
அறிவுடைமையன்று.

எந்த மாதுக்கும்
இரண்டு மனம் உண்டு
என்ற பட்டினத்துச்செட்டியின்
விமர்சனங்களை உடைத்தெரியுங்கள்.


பெண்ணென்று பூமிதனில்
பிறந்து விட்டால்- மிகப்
பிழை இருக்குதடி, தங்கமே தங்கம்.
என்றான் பாரதி
அதனையும் பொய்யாக்குங்கள்
நாளை உதயமாகல் கூடாதென்று!
கதிரவனுக்கே கட்டளையிட்ட
நளாயினி வம்சத்தில் வந்தவர்கள்
நீங்கள்.


பேனா எடுங்கள்,
பிரபஞ்ஜம் பிச்செரியுங்கள்.
உங்களைப் பற்றிய
விமர்சனங்களை தூளாக்குங்கள்,
உலகத்தின் சிகரம் எதுவோ
அதன் உச்சியில் உங்கள்
பெயரிடுங்கள்.

உலகத்தின் உபரிகள் அல்ல நாங்கள்,
என்று உரக்கச் சப்தமிடுங்கள்!
உரக்கச் சப்தமிடுங்கள்!!


கவிதை தொடர் சங்கிலி பதிவுக்கு அழைத்த அப்பாவி முரு - க்கு நன்றியை தெரிவிக்கும் வேளையில், சங்கிலி கோர்த்தவர்கள் பட்டியலும்,


முதல் வட்டம் - ஷைலஜா அக்கா
இரண்டாம் வளையம் கோர்த்தவர் - எம்.எம்.அப்துல்லா
மூன்றாம் வளையம் கோர்த்தவர் - Mahesh
நான்காம் வளையம் கோர்த்தவர் - பழமைபேசி
ஐந்தாம் வளையம் கோர்த்தவர் - அப்பாவி முரு,
ஆறாம் வளையம் கோர்ப்பவர்- நான் தகுதியானவனா?

அடுத்த வளையம் கோர்க்க நான் அழைப்பது - பிரியமுடன் பிரபுவை


கவிதை பிடித்தாலும், பிடிக்காவிட்டலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

9 comments:

கோவி.கண்ணன் said...

கவிதையை படித்ததும்...வா..ட்டத்துக்குள் பெண் என்பதாக விளங்குகிறது.

யானைக்கு தன் பலம் தெரியாமல் பாகனிடம் அடங்கி இருப்பது போல், ஆணைப் பெற்றெடுக்கும் பெண் இருக்கிறாள். பல பெண்கள் அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறார்கள். ஆண்களை அவச்சொல்லை காதுக்கு கேட்காமல்...முன்னேறிய பெண்களை மனதில் வைத்து முன்னேறவேண்டும் பெண்கள்.

நாகரீக மனிதர்களிடம் தான் இந்நிலமை, காட்டுவாசிகளில் ஆண் / பெண் வேறுபாடு இருப்பது இல்லை.

அப்பாவி முரு said...

//நாகரீக மனிதர்களிடம் தான் இந்நிலமை, காட்டுவாசிகளில் ஆண் / பெண் வேறுபாடு இருப்பது இல்லை.//

நாகரீகமனிதனிடம் இல்லை, நாகரீகமடைந்து விட்டதாக கருதும் மனிதனிடம் தான் இந்த பிரச்சனை!

நட்புடன் ஜமால் said...

\\உலகத்தின் உபரிகள் அல்ல நாங்கள்\\


ஆம்! உரக்க சப்தமிடுங்கள்

உறங்குபவர்கள் விழித்தெழும்படி

உரக்க சப்தமிடுங்கள்

பழமைபேசி said...

இருபாலும்
ஒரு பார்வை கொண்டு
பார்த்த வரிகள்!
வாழ்த்துகள்!!

தத்துபித்து said...

//
அழகிப் பட்டம் தவிர்
ஆண் வர்கத்தின் வக்கிரபுத்தி
பின்னிய மாயவலை அது
உன்னை உயர்திப்பார்கும்
உயர்ந்த எண்ணம் இல்லை
உன் உள்ளாடை உரித்துப்பார்க்கும்
உத்தேசம் அது என்று தெரிந்துகொள்
//
>
ஆணி அடித்த வரிகள்.
இதனை இன்னும் சில பெண்கள் உணராமல் மாய வட்டத்திற்குள் (படத்தில் உள்ளதைப் போல்) இருக்கிறார்கள்.
பெண் பெருமையானவள்.
பெண்ணின் பெருமையை பெண்கள் உணர வேண்டும்.
.
பெண்ணின் பெருமையைப் பற்றி யாராவது ஒரு பதிவு போடுங்கப்பா....

பிரியமுடன் பிரபு said...

என்னை தொடர் சங்கிலி பதிவுக்கு அழைத்ததர்க்கு நன்றி
சற்று(?) தாமதமாக பதிவிட்டுள்ளேன்

பிரியமுடன் பிரபு said...

உலகத்தின் உபரிகள் அல்ல நாங்கள்,
என்று உரக்கச் சப்தமிடுங்கள்!
உரக்கச் சப்தமிடுங்கள்!!///

உரக்கச் சப்தமிடுங்கள்
உரக்கச் சப்தமிடுங்கள்
உரக்கச் சப்தமிடுங்கள்

பிரியமுடன் பிரபு said...

///
போதைப் பொருளாய்
பார்தது அக்காலம்!
பெண்ணே பெண்ணை போதைப்
பொருளாய் காட்டுவது இக்காலம்!
பெண்களைப் பெண்களாய்
மதிப்பது எக்காலம்?

////


கிட்ட தட்ட விந்துவிட்டது

கிருஷ்ணா said...

வட்டம் நீள வாழ்த்துக்கள்..!