(காதல்) போதை

வார்த்தை வலைவிரித்தாள்
மயங்கினேன்,
காதல் கொண்டேன்
எப்போதோ வந்தமரும் சிறு
குருவிக்காக காத்திருக்கும், ஒத்தை
பனைபோலானேன்.
அவள்வசமானேன்,
வித்தைக்காரன் கைகுரங்கானேன்,
மதிஇழந்தேன்.
அறிவென்னைதூக்கி நிறுத்திய போதும்
மனம் சறுக்கி
அவளிடம் வீழ்ந்து கொண்டது.
அறிவிற்கும், மனதிற்குமான
போராட்டத்தில்
அறிவுவழி சிலநாள் நடந்தேன்,
மனம் பத்ருஹரியரின் நாய் போல
அவளை தொடர்ந்தது.
ஒவ்வொரு இரவும் மனதை
ஓங்கி அறைந்தேன் ஓடிவிடும்,
காலையில் காலடியில்
கிடக்கும்

அறிவு வெறுத்தபோதும்
மனம் விரும்பியது,
தன்னை வருத்தி
என்னை வென்றது - மனம்.
இன்று மீண்டும் குரங்கானேன்
இப்பொழுதும், எனக்கு புரியவில்லை
காதலென்பது உணர்வல்ல, அதுவொரு
போதைஎன்று.

-இவையனைத்தும் எனது பயிற்சிஇல்லாத
முயற்சியில் பிறந்தது.
பிழையிருந்தால் மன்னிக்கவும்.