Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

விடியாமூஞ்சி

அக்னி வெயில்,

இரக்கமில்லா காற்று,

மெளனத்திற்கு தலையசைக்க

விரும்பா மரங்கள்,

புற்கள் கூட முலைக்காத

புண்ணிய பூமியில்

கால் முலைத்த பூவாய்,

அந்தச் சிறுமி

தட்டுத் தடுமாறி

தண்ணீர் குடம் சுமப்பதை,

பார்ப்பவர்கள் கண்கள்

பனித்துவிடும் போது,

ஏனோ பாதகத்தி, சித்தி

மட்டும் சாடுவாள், ஏண்டி

விடியாமூஞ்சி ஒரு நடை

தண்ணிக்குப் போய்ட்டு வர

இவ்வளவு நேரமா?

பார்ப்பனக் கடவுள்


அர்ச்சனை தட்டில்
ஒத்த ரூபாயிட்டால்
கையில் திருநீறு, குங்குமம்.

நூறுரூபாய் என்றால்,
சாமிக்கு அர்ச்சனை.

ஐநூறு ரூபாய் என்றால்,
சாமிக்கு அருகாமையில்
அர்ச்சனை.

ஆயிரம் என்றால்,
சாமி கழுத்து மாலை
பிரஷாதம்!

லட்சம் என்றால்,
வீடு தேடி வரும்
பிரஷாதம்!!

கோடி என்றால்,,
உன் வீடே கோயில்!!
நீயே கடவுள்!!!

காற்று கெட்டிபடுவதும் சுலபமாவதும்


வார்த்தைகளுக்காக காத்திருக்கும்
கவிஞனைப்போல,
இரவுக்காக காத்திருக்கும்
நிலவைப்போல,
காற்றுக்காக ஏங்கி நிற்கும்
இதயம்போல,
உன்னுடைய ஒரு ஹாய்
அல்லது ஒரு ஹலோவை
எதிற்பார்த்து விடியும் என்
உலகத்தை, எப்படி புரியவைப்பேன்
உனக்கு!

உன்னைப் பார்க்கும் நொடிகளில்
சுவாச இழுப்பிற்கு காற்று
சுலபமாவதும்,
பிரியும் நொடிகளில்
காற்று கெட்டிபடுவதும்
தவிர்கமுடியாத ஒன்றாகிவிட்டது.


இந்தக் கண்ணாடியில் முகம்
பார்த்தவர்கள் அணேகம்.
முகம் பதித்தவள்
எவரும் இல்லை!

முத்துக்கான வித்து எப்பொழுதும்
விழலாம் என்று வாய்திறந்து இருக்கும்
சிப்பி போல
தனக்கான ஒருத்தியை
ஒவ்வொரு முகத்திலும்
எதிர்பார்த்து நிற்கிறது
இந்தக் கண்ணாடி.

இதில் உன் பிம்பம் விழுந்து
உறைவதும், மறைவதும்
உன் கையில்.

அழுது நிற்கும் குழந்தையைப்போல
எனது வேதனையையும், விருப்பத்தையும்
சுமந்து வந்திருக்கும்
என் கடிதத்தை
அரவணைப்பதும்,
அவமதிப்பதும்
உன் பொறுப்பு

என்னவளே,
இப்பொழுது சொல்,
நான் உனக்கு,
வழிப்போக்கனா? இல்லை
உயிர் காவலனா?

அழகிய நாட்கள்


அழகிய நாட்கள்



உன்னோடு பழகிய
மொத்த நாட்களின்
நீளத்தையும் ஒரு
பக்கக் காகிதத்தில்
அடக்க முயற்சித்ததில்
வார்த்தைகள் அங்கும்
இங்குமாய் கைகோர்த்ததில்
உன்னைப் பற்றிய
கவிதையாய் அது இருந்தது!


கவிதைகள் எல்லோராலும்
புரிந்து கொள்ளப்படுவதில்லை
என் கவிதை வரிகளின்
ஆழம் அர்த்தம் உன்
புறக்கண்களுக்கு மட்டுமே
புலப்படும்.

நான் சஞ்சரிக்கத் தெரிந்த
அடுக்குகளில் சஞ்சரிக்கத்
தெரிந்தவள் நீ


பேசிப்பழகிய வார்த்தைகள்
போதமல் பழைய வார்த்தைகள்
தூசி தட்டி வர்ணம் பூசினேன்
கவிதை மெருகேரியது

இயற்கை மனிதனை
வியக்கக் கற்றுத்தந்தது
வியத்தல் மனிதனை
சலிப்பிலிருந்து மீட்டெடுத்தது
வாழ்க்கை சலிக்காமலிருக்க
இயற்கை உன்னை எனக்குத்தந்தது


எதிர் பாரா தருனத்தில்
நீ உன் காதலை உறைத்தபோது
வாழப்படாத வாழ்க்கை வாழ்ந்துவிட்ட
மகிழ்ச்சி எனக்கு
நீ என்னோடு இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
சுருங்கிய என் வாழ்வு
அங்குலம் அங்குலமாய்
விரியக்காண்கிறேன்


வாழ்க்கை முடியும்
காலங்களில் அசை
போடுவதற்கே காதல்
என்று நினத்திருந்தேன்
இல்லை அது என் வாழ்வின்
நீள அகலம் பெருக்க வந்தது


இப்படி எத்தனை எத்தனையோ
மாற்றங்கள் உன்னால்
எல்லாம் எழுதிட நினைத்தபோது
புரிந்தது நீ,
வார்த்தையில் அடங்காத வாக்கியம்
அல்லது வைரமுத்து சொன்னதுபோல்
சங்கில் அடங்காத சமுத்திரமென்று.

வட்டத்துக்குள் பெண்











போதைப் பொருளாய்
பார்தது அக்காலம்!
பெண்ணே பெண்ணை போதைப்
பொருளாய் காட்டுவது இக்காலம்!
பெண்களைப் பெண்களாய்
மதிப்பது எக்காலம்?

அழகாய் பிறந்த ஒவ்வொரு
உயிரிடத்தும் இயற்கை
ஒரு பாதுகாப்பை வைத்தது,
பாம்புக்கு பல்லின் விஷம் பாதுகாப்பு,
புலிக்கு அதன் குணம், வலிமை பாதுகப்பு,
ரோஜாவிற்கு முள் பாதுகாப்பு,
புள்ளி மானுக்கு அதன் வேகம் பாதுகப்பு,
பெண்ணே படைப்பு உங்களை புறந்தள்ளியது ஏனோ?

போகட்டும்,
பூமியின் முகத்தில்
கோலமிட்டது போதும்.
அதன் அடித்தோள் சென்று
ஆராயிச்சி நடத்து,
உன் கால்களுக்கடியில்
கோள்களை கிடத்து.


பாரதி கண்ட
புதுமை பெண்ணே,
சட்டம் வட்டம் என்ற
உங்களுக்கு எதிரான
ஆண்களின் கொட்டம் அடக்கு!!

அழகிப் பட்டம் தவிர்
ஆண் வர்கத்தின் வக்கிரபுத்தி
பின்னிய மாயவலை அது
உன்னை உயர்திப்பார்கும்
உயர்ந்த எண்ணம் இல்லை
உன் உள்ளாடை உரித்துப்பார்க்கும்
உத்தேசம் அது என்று தெரிந்துகொள்.
இந்த இழிவான மலிவான
பட்டமெல்லாம் மேலை நாட்டு
வேசிகள் பெறட்டும்.
தமிழ் பெண்களே,
உங்களின் உண்ணதங்களை
தெரிந்துகொள்ளுங்கள்.
பெண் குழந்தையை கூட
அம்மா, என்றே அழைக்கும்
சமூகத்தில் பிறந்தவர்கள் நீங்கள்.


ஆடை குறைத்து
ஆபாசம் காட்டி,
புகழ் பெறுவது
அறிவுடைமையன்று.

எந்த மாதுக்கும்
இரண்டு மனம் உண்டு
என்ற பட்டினத்துச்செட்டியின்
விமர்சனங்களை உடைத்தெரியுங்கள்.


பெண்ணென்று பூமிதனில்
பிறந்து விட்டால்- மிகப்
பிழை இருக்குதடி, தங்கமே தங்கம்.
என்றான் பாரதி
அதனையும் பொய்யாக்குங்கள்
நாளை உதயமாகல் கூடாதென்று!
கதிரவனுக்கே கட்டளையிட்ட
நளாயினி வம்சத்தில் வந்தவர்கள்
நீங்கள்.


பேனா எடுங்கள்,
பிரபஞ்ஜம் பிச்செரியுங்கள்.
உங்களைப் பற்றிய
விமர்சனங்களை தூளாக்குங்கள்,
உலகத்தின் சிகரம் எதுவோ
அதன் உச்சியில் உங்கள்
பெயரிடுங்கள்.

உலகத்தின் உபரிகள் அல்ல நாங்கள்,
என்று உரக்கச் சப்தமிடுங்கள்!
உரக்கச் சப்தமிடுங்கள்!!


கவிதை தொடர் சங்கிலி பதிவுக்கு அழைத்த அப்பாவி முரு - க்கு நன்றியை தெரிவிக்கும் வேளையில், சங்கிலி கோர்த்தவர்கள் பட்டியலும்,


முதல் வட்டம் - ஷைலஜா அக்கா
இரண்டாம் வளையம் கோர்த்தவர் - எம்.எம்.அப்துல்லா
மூன்றாம் வளையம் கோர்த்தவர் - Mahesh
நான்காம் வளையம் கோர்த்தவர் - பழமைபேசி
ஐந்தாம் வளையம் கோர்த்தவர் - அப்பாவி முரு,
ஆறாம் வளையம் கோர்ப்பவர்- நான் தகுதியானவனா?

அடுத்த வளையம் கோர்க்க நான் அழைப்பது - பிரியமுடன் பிரபுவை


கவிதை பிடித்தாலும், பிடிக்காவிட்டலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.