ஒருவனுக்கு திடீரென்று தலைவலி, உடனே மருத்துவமனைக்குப் போனார்.
மருத்துவரிடம் சொன்னார். அந்த மருத்துவர் இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச்சீட்டு எழுதினார்.
அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து,”இதை உடனே வாங்கி வா” என்றார். அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார். மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள், ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.
மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்கு தலைவலி இன்னும் அதிகமாயிற்று. மருத்துவர் பார்த்தார். உடனடியாக இன்னோரு மருந்தின் பெயரை எழுதினார்.
’இது கிடைத்தாலும் பரவாயில்லை’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார். அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால் வந்து சேரவில்லை.
படுத்திருந்தவரை தலைவலி பாடாகப் படுத்தியது. மருத்துவரும் தவித்துக் கொண்டிருகிறார். இந்தச் சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் எதோ கூச்சல் கேட்டது. அங்கே ஒரு சுழழ் வழி......
ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால் நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு. அங்கே இரண்டு பேர், ‘நான் தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் விளைவு- இருவருமே செல்ல முடியவில்லை.
இவர்கள் போடுகிர சத்தத்தை கேட்டு மருத்துவர் வெளியே ஓடிவந்து பார்க்கிறார். அதற்கான மருந்தை வைதிருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய ஆன்மிகம்!
மனிதகுலம்தான் அந்த நோயாளி. கடவுள் தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.
சரி...... இப்பொது கதையை தொடரலாம். மருத்துவர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருக்கும் இரண்டு மருந்தையும் வாங்கிக்கொண்டு உள்ளே ஓடுகிறார். ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத்தானே சாப்பிட்டு விடுகிறார்!
ஆமாம்!
இப்போது மருத்துவருக்கும் தலைவலி!
மதவாதிகளே!
தயவு செய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்
(எப்போதோ படித்தது)
Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts